சென்னை, நவ. 23: ஒன்றிய அரசு துறைகளில் தினக்கூலி காண்ட்ராக்ட் தொழிலாளர்களை ஊக்குவிக்காமல், நிரந்தர தொழிலாளர்களை பணி அமர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள், தமிழ்நாடு ஐ.என்.டி.யு.சி செயற்குழுவில் நிறைவேற்றப்பட்டது. இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ், தமிழ்நாடு கிளையின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின், முதல் செயற்குழு கூட்டம், சென்னை இராயப்பேட்டையிலுள்ள ஐ.என்.டி.யு.சி அலுவலகமான ஜி.ஆர். பவனில், தமிழ்நாடு தலைவர் மு.பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தலைவர் மு. பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார். […]
![]()


