செய்திகள்

டெல்லியில் அமைச்சர் முருகன் இல்லத்தில் பொங்கல் விழா: மோடி பங்கேற்பு

புதுடெல்லி, ஜன.14– டெல்லியல் மத்திய அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் இன்று நடந்த பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்று வழிபாடு நடத்தினார். பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடும் திருவிழாவாக மாறியுள்ளது என நிகழ்ச்சியில் பேசுகையில் பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார். தமிழகத்தில் மிகுந்த உற்சாகத்துடன், நீண்ட நாட்கள் தொடர்ந்து கொண்டாடப்படும் பண்டிகையாக பொங்கல் பண்டிகை திகழ்கிறது. அனைத்து வீடுகளிலும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும், உறவினர்களும் ஒன்றிணைந்து, தமிழர்களின் பாரம்பரிய மரபுகளை நினைவுபடுத்தும் வகையில் […]

Loading

செய்திகள்

பொங்கல் விடுமுறை: சிறப்புப் பஸ்களில் 6.90 லட்சம் பேர் பயணம்

சென்னை, ஜன. 14– பொங்கல் திருநாளை முன்னிட்டு இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகளில் இதுவரை 6.90 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையின் சார்பில், பொங்கல் திருநாளை முன்னிட்டு, பொதுமக்களின் பயண வசதிக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன..இதன்படி, ஜன. 9 ஆம் தேதி முதல் ஜன. 13–ம் தேதி வரை நள்ளிரவு நேரம் வரை, மொத்தம் 15,762 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு, 6.90 லட்சம் பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர். […]

Loading

செய்திகள்

தாய்லாந்தில் ரெயில் மீது ராட்சத கிரேன் சரிந்து விழுந்து 22 பேர் பலி

பாங்காக், ஜன. 14– தாய்லாந்தில் ரயில் மீது ராட்சத கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர். தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் இருந்து வடகிழக்கே உபோன் ரத்சதானி மாகாணம் நோக்கி இன்று காலை ரெயில் ஒன்று புறப்பட்டு சென்றது. அந்த ரெயில், பாங்காக்கில் இருந்து 230 கி.மீ. தொலைவில் நகோன் ரச்சசீமா மாகாணத்தின் சிகியோ மாவட்டத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் அதிவேக ரயில் திட்டப் பணிக்காக பயன்படுத்தப்பட்ட ராட்சத கிரேன், ராட்சதானி […]

Loading

செய்திகள்

வெள்ளி விலை வரலாறு காணாத உச்சம்: ஒரே நாளில் ரூ. 15,000 உயர்ந்து கிலோ ரூ. 3 லட்சத்தைக் கடந்தது

சென்னை, ஜன. 14– சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. வெள்ளி விலை வரலாற்றில் இல்லாத உச்சமாக கிலோவுக்கு ரூ15,000 உயர்ந்து முதல்முறையாக ரூ. 3 லட்சத்தைக் கடந்தது. தங்கம் விலை கடந்த மாதம் (டிசம்பர்) 15-ந்தேதி ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டியது. அதன் பின்னர் விலை குறைந்த நிலையில், அதே மாதம் 22-ந்தேதியில் இருந்து மீண்டும் ஏறுமுகத்தில் பயணித்தது. கடந்த மாதம் 28-ந்தேதி புதிய உச்சத்தை […]

Loading

Uncategorized

ராணிப்பேட்டையில் 28–ந் தேதி முதலமைச்சர் நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுப் பணிகள்: அமைச்சர் காந்தி ஆய்வு

ராணிப்பேட்டை, ஜன. 14– ராணிப்பேட்டை மாவட்டத்தில் பனப்பாக்கம் சிப்காட் பகுதியில் 28–ந் தேதி டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய தொழிற்சாலை கட்டுவதற்கான முதலமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார். இந்த நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுப் பணிகளை அமைச்சர் ஆர்.காந்தி ஆய்வு செய்தார். ராணிப்பேட்டை மாவட்டம் பணப்பாக்கம் புதிய சிப்காட் தொழிற்பேட்டையில் சுமார் 470 ஏக்கர் பரப்பளவில் இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான டாடா மோட்டார்ஸ் அமைந்திட தமிழ்நாடு அரசின் மூலம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தொழிற்சாலை அமைவதற்கான […]

Loading

செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று போகி பண்டிகை கொண்டாட்டம்

சென்னை, ஜன. 14– “பழையன கழிதலும், புதியன புகுதலும்..” என்ற அடிப்படையில் வீட்டில் உள்ள பழைய மற்றும் தேவையில்லாத பொருட்களை புறக்கணித்து வீட்டில் புதியன வந்து புகுதல் வேண்டும் என்ற நம்பிக்கையில் போகிப் பண்டிகையைக் கொண்டாடப்படுகிறது. வீட்டில் தேங்கியிருக்கும் குப்பைகள் தேவையற்ற பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும் என்பதே அதன் ஐதீகம். பொங்கல் திருநாளின் முதல்நாள் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் நாளை பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்று போகி பண்டிகையை […]

Loading

செய்திகள்

எல்.முருகன் இல்லத்தில் நாளை பொங்கல் விழா: பிரதமர் மோடி பங்கேற்கிறார்

புதுடெல்லி, ஜன. 13– டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் நாளை (14–ந்தேதி) நடைபெற உள்ள பொங்கல் விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். ஆண்டுதோறும் டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பொங்கல் கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டும் நாளை (14–ந்தேதி) தனது இல்லத்தில் எல்.முருகன் பொங்கல் கொண்டாட உள்ளார். இல்லத்தில் கரும்பு, மஞ்சள், வாழை மற்றும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் […]

Loading

செய்திகள்

துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை திருப்பூர் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவரம்

திருப்பூர், ஜன. 13– துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், நாளை தனது சொந்த ஊரான திருப்பூருக்கு வருகிறார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வருகை தரும் அவர், நாளை மாலை காரில் திருப்பூர் பிச்சம்பாளையத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வருகிறார். பின்னர் இரவு அங்கு தங்குகிறார். நாளைமறுநாள் (வியாழக்கிழமை) காலை திருப்பூர் பி.என்.ரோடு கணக்கம்பாளையம் பிரிவில் உள்ள தனது உறவினர் வீட்டு புதுமனை புகுவிழா மற்றும் பொங்கல் விழாவில் பங்கேற்கிறார். அதன்பின்னர் மதியம் 2 மணி […]

Loading

செய்திகள்

வரலாறு காணாத உச்சம் தங்கம் சவரன் – ரூ.1,05,360: வெள்ளி கிலோ ரூ.2.92 லட்சம்

சென்னை, ஜன. 13– தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்து வரலாறு காணாத வகையில் உச்சம் தொட்டு வருகிறது. தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.12 ஆயிரத்து 900-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்து 200-க்கும் விற்பனையானது. நேற்று ரூ.220 உயர்ந்து கிராம் ரூ.13 ஆயிரத்து 120-க்கும், சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்து ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 960-க்கும் விற்பனை […]

Loading

செய்திகள்

ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரூ.20 லட்சம் பரிசு: சாய் பிரகாஷ் லியோ முத்து வழங்கினார்

தாம்பரம், ஜன.13- தாம்பரம் ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான மாபெரும் அறிவியல் கண்காட்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை ஸ்ரீசாய்ராம் கல்விக் குழுமத்தின் முதன்மை செயல் அதிகாரி சாய் பிரகாஷ் லியோ முத்து வழங்கினார். ஸ்ரீ சாய்ராம் கல்வி குழுமம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் – தொழில்நுட்ப மன்றம் இணைந்து நடத்திய அறிவியல் கண்காட்சியில் தமிழகத்தின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த 150 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 6000 மாணவர்கள் பங்கேற்று, 800-க்கும் மேற்பட்ட வியக்கத்தக்க தங்கள் […]

Loading