செய்திகள்

109வது பிறந்த நாள் எம்.ஜி.ஆர். சிலைக்கு எடப்பாடி மாலை அணிவித்து மரியாதை

சென்னை, ஜன.17– அண்ணா தி.மு.க. நிறுவனத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் 109வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு அண்ணா தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். அன்னதானம், நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. எம்.ஜி.ஆர். பிறந்தநாளையொட்டி சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலை தலைமைக் கழக எம்.ஜி.ஆர். மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். உருவச்சிலைக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். ஜெயலலிதா சிலைக்கும் எடப்பாடி […]

Loading

செய்திகள்

அ.தி.மு.க. முதல்கட்டமாக 5 தேர்தல் வாக்குறுதி மகளிருக்கு மாதம் ரூ.2 ஆயிரம்: எடப்பாடி அதிரடி அறிவிப்பு

சென்னை, ஜன.17– அண்ணா தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று அதிரடியாக அறிவித்தார். ஆண்களுக்கும் நகர பேருந்துகளில் இலவச பஸ் பயணம் செய்யும் திட்டம் செயல்படுத்தப்படும்; 100 நாட்கள் வேலைவாய்ப்பு திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும், ரூ.25 ஆயிரம் மானியத்துடன் 5 லட்சம் மகளிருக்கு இலவச இருசக்கர வாகனம் வழங்கப்படும். வீடு இல்லாதவர்களுக்கு அரசே கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என […]

Loading

செய்திகள்

கோரிக்கைகளை நிறைவேற்றாமல் கறிக்கோழி பண்ணை விவசாயிகளை கைது செய்வதா? எடப்பாடி கண்டனம்

சென்னை, ஜன.17– கறிக்கோழி பண்ணை விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாமல், அவர்களை கைது செய்வதா? என தி.மு.க. அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தமிழ்நாடு முழுவதும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணை விவசாயிகளும், 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் கறிக்கோழி வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு, கறிக்கோழி விற்கும் நிறுவனங்களுடன் ஒப்பந்த அடிப்படையில் கூலிக்கு கோழி வளர்ப்பு தொழில் செய்து […]

Loading

செய்திகள்

ஈரானில் 800 பேரின் தூக்கு தண்டனை ரத்து; அமெரிக்க அதிபர் டிரம்ப் வரவேற்பு

வாஷிங்டன், ஜன. 17– ஈரான் அரசு 800க்கும் மேற்பட்டோருக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை ரத்து செய்ததற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப் அதை வரவேற்று பாராட்டு தெரிவித்துள்ளார். ஈரானில் அதிகரித்துள்ள பணவீக்கம், அதன் தொடர்ச்சியாக அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, பொருளாதார தேக்கநிலை உள்ளிட்டவற்றால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதேபோன்று குடிநீர், மின்சார பற்றாக்குறை மற்றும் வேலை வாய்ப்பின்மையாலும் மக்கள் தவித்து வருகின்றனர். இதனால், அரசுக்கு எதிராக மக்கள் திரண்டு, தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து, […]

Loading

செய்திகள்

அதிக காளைகளை அடக்கி சிறந்து விளங்கக்கூடிய ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலை: ஸ்டாலின் அறிவிப்பு

அலங்காநல்லூர், ஜன. 17– ஜல்லிக்கட்டில் அதிகக் காளைகளை அடக்கும் சிறந்த வீரருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார். பொங்கல் பண்டிகையொட்டி ஆண்டுதோறும் தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்கநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் அவனியாபுரத்திலும், நேற்று பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகு விமரிசையாக நடைபெற்றன. இந்த நிலையில் இன்று உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டி கோலாகலமாய் துவங்கியது. […]

Loading

செய்திகள்

‘‘மது விற்பதில் மட்டுமே தி.மு.க. அரசு சாதனை’’: அன்புமணி ராமதாஸ் கண்டனம்

சென்னை, ஜன.17– ‘‘போகிப் பண்டிகை நாளில் ரூ.217 கோடிக்கும், பொங்கல் நாளில் ரூ.301 கோடிக்கும் மது விற்பனையாகியிருப்பது மக்களுக்கு மதுவைப் புகட்டுவதில் மட்டும் தான் தி.மு.க. அரசு சாதனை படைக்கிறது’’ என்று அன்புமணி ராமதாஸ் காட்டமாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் (பா.ம.க.) தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-– ‘‘தமிழ்நாட்டில் பொங்கல், போகிப்பண்டிகை ஆகிய இரு நாள்களில், டாஸ்மாக் வாயிலாக மட்டும் ரூ.518 கோடிக்கு மது விற்பனையாகியிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. மக்கள் நலனுக்காக […]

Loading

செய்திகள்

சென்னையில் பாதுகாப்பு பணியில் 16 ஆயிரம் போலீசார் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியாகவும், பாதுகாக்கவும் கொண்டாட கமிஷனர் அருண் சிறப்பு நடவடிக்கை

சென்னை, ஜன. 13– பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் கொண்டுவதற்காக சென்னை காவல்துறை கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 17–ந் தேதி காணும் பொங்கலை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் குடும்பத்தாருடன் மெரினா கடற்கரை உள்ளிட்ட இதர பொழுதுபோக்கு இடங்களுக்கு அதிகளவில் வருவதால், எவ்வித அசம்பாவிதமும் நிகழா வண்ணம் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணும் பொங்கலை கொண்டாடுவதற்காக கமிஷனர் ஆ.அருண் உத்தரவின் […]

Loading

செய்திகள்

விருப்பத்துக்கு ஏற்ப பேருந்துகளில் பயணம் செய்யும் ‘சென்னை உலா’: அமைச்சர் சிவசங்கர் துவக்கினார்

சென்னை, ஜன. 14– போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் – “சென்னை உலா” – விருப்பத்திற்கேற்ப பயணிக்கும் சிறப்பு சுற்றுவட்ட பாரம்பரியப் பேருந்து இயக்கத்தை, இன்று சென்னை அண்ணா சதுக்கம் பேருந்து நிலையத்தில் கொடி அசைத்து பயணத்தை தொடங்கி வைத்தார். அதோடு பேருந்தில் பயணம் மேற்கொண்டார். “சென்னை உலா” பேருந்து – “ஹாப் -ஆன் ஹாப் -ஆஃப்” சேவைகளுடன், முதன்முதலில் 5 பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. மேலும், அவை சென்னையின் மையப்பகுதியில் உள்ள சின்னமான மற்றும் கலாச்சார ரீதியாக முக்கியத்துவம் […]

Loading

செய்திகள்

பொங்கல் விடுமுறை: மெட்ரோ ரெயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கம்

சென்னை, ஜன. 14– பொங்கல் விடுமுறை நாட்களில் மெட்ரோ ரெயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2026 ஜனவரி 15, 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் சென்னை மெட்ரோ ரெயில்கள் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணையின்படி இயக்கப்படும்.மெட்ரோ ரெயில் சேவை விவரங்கள்: சென்னை மெட்ரோ ரெயில் சேவைகள் வழக்கம்போல காலை 5:00 மணி முதல் இரவு 11:00 மணி […]

Loading

செய்திகள்

கரும்பு, மஞ்சள், இஞ்சி கொத்து வரத்து அதிகரித்தது கோயம்பேட்டில் பொங்கல் விற்பனை களைகட்டியது

சென்னை, ஜன. 14– கோயம்பேட்டில் அமைக்கப்பட்டுள்ள பொங்கல் சிறப்பு சந்தையில் விற்பனை களைகட்டியுள்ளதால் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாடு உட்பட உலகம் முழுக்க உள்ள தமிழர்களால் பொங்கல் பண்டிகை நாளை 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பொங்கலுக்கு தேவையான கரும்பு, மஞ்சள், இஞ்சி கொத்து, வெல்லம் உள்ளிட்ட பொருள்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் வாங்குவதற்கு வசதியாக ஆண்டுதோறும் கோயம்பேடு சந்தையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சிறப்பு சந்தை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பொங்கல் […]

Loading