செய்திகள்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜனவரி 30–ந்தேதி வரை அவகாசம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புதுடெல்லி, ஜன. 19– தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க ஜனவரி 30ம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. தமிழகத்தில் 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்கள் இருந்தனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்திய தேர்தல் கமிஷன் எஸ்.ஐ.ஆர். என்று அழைக்கப்படும் தீவிர வாக்காளர் திருத்த பணிகளில் ஈடுபட்டது. இதனை தொடர்ந்து கடந்த மாதம் 19-ந்தேதி தமிழகத்தில் வரைவு வாக்காளர் […]

Loading

செய்திகள்

புதுடெல்லி் சி.பி.ஐ. அலுவலகத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜரானார் விஜய்

சென்னை, ஜன. 19– கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பான விசாரணைக்காக புதுடெல்லி் சி.பி.ஐ. அலுவலகத்தில் இன்று த.வெ.க. தலைவர் விஜய் ஆஜரானார். கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந்தேதி அன்று மேற்கொண்ட பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான வழக்கை ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி அஜஸ் ரத்தோகி கண்காணிப்பில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். இந்த வழக்கு தொடர்பாக த.வெ.க. பொதுச்செயலாளர் […]

Loading

செய்திகள்

வெள்ளோட்டில் காலிங்கராயன் 7 அடி வெண்கல சிலை: முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை, ஜன.19- வெள்ளோட்டில் காலிங்கராயன் 7 அடி வெண்கல சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். நதிநீர் இணைப்பின் முன்னோடி என போற்றப்படும் காலிங்கராயன் தனது சொந்த செலவில் ஈரோடு மாவட்டத்தில் காலிங்கராயன் கால்வாயை அமைத்தார். இந்த கால்வாய் ஈரோடு மாவட்டம் பவானி காலிங்கராயன் பாளையத்தில் தொடங்கி, ஈரோடு வழியாக கொடுமுடி நொய்யல் ஆற்றில் முடிவடைந்தது. மொத்தம் 90 கிலோ மீட்டர் தொலைவில் காலிங்கராயன் கால்வாய் வெட்டி முடிக்கப்பட்டது. அவர் அமைத்த காலிங்கராயன் […]

Loading

செய்திகள்

தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் 12 பேர் கொண்ட பா.ஜ.க. தேர்தல் அறிக்கை குழு

சென்னை, ஜன.19-– தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் 12 பேர் கொண்ட பா.ஜ.க. தேர்தல் அறிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது. அண்ணா தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜ.க. சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தீவிர முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் 3 நாள் பயணமாக, வரும் 21 ம் தேதி சென்னை வரும் தமிழக சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இதில், அ.தி.மு.க., பா.ஜ.க., […]

Loading

செய்திகள்

காணும் பொங்கல் நாளில் ரூ.220½ கோடிக்கு மது விற்பனை

சென்னை, ஜன.19-– காணும் பொங்கல் நாளில் ரூ.220½ கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது. தமிழகத்தில் 4 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட ‘டாஸ்மாக்’ கடைகள் இயங்கி வருகின்றன. தினந்தோறும் ரூ.100 கோடி வரைக்கும், வார இறுதி நாட்களில் ரூ.150 கோடி வரைக்கும் மது விற்பனை நடைபெறுகிறது. பண்டிகை காலங்களின்போது மது விற்பனை அதிகரிக்கும். அதன்படி பொங்கலை பண்டிகையையொட்டி ‘டாஸ்மாக்’ கடைகளில் கடந்த 14, 15 ஆகிய 2 நாட்களில் மட்டும் ரூ.435 கோடியே 28 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனையானது. […]

Loading

செய்திகள்

தமிழக சட்டசபை நாளை கூடுகிறது: கவர்னர் முழுமையாக உரை நிகழ்த்துவாரா?

சென்னை, ஜன. 19– அரசியல் பரபரப்புக்கு இடையில் தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் நாளை கவர்னர் உரையுடன் தொடங்கும் நிலையில் கவர்னர் உரை நிகழ்த்துவாரா? என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்குவது மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் நாளை (செவ்வாய்கிழமை) காலை 9.30 மணிக்கு கூட இருக்கிறது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் – மே […]

Loading

செய்திகள்

கடலூரில் ஜெஇஇ நுழைவுத் தேர்வு பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்: கலெக்டர் வழங்கினார்

கடலூர், ஜன. 19– கடலூர் மஞ்சக்குப்பம் அரசு மாதிரி பள்ளியில் வெற்றிப் பள்ளிகள் திட்டத்தின் கீழ் நடைபெற்ற ஜெஇஇ நுழைவுத் தேர்விற்கான பயிற்சி வகுப்பு முடித்த மாணவ, மாணவிகளுக்கு பயிற்சிக்கான சான்றிதழ்களை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள் உறுப்பினர் செயலர் இரா.சுதன் ஆகியோர் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் இரா.சுதன் பேசியதாவது: முதலமைச்சர், மாணவர்களுக்கு ஆரோக்கியமான தொடக்க கல்வியினை வழங்கிடவும், இடைநிற்றலின்றி மாணவர்கள் கல்வி கற்றிடவும், பள்ளிக்கல்வியினை தொடர்ந்து சிறப்பான உயர்கல்வியை மாணவர்கள் பெறுவதற்கும் பல்வேறு […]

Loading

செய்திகள்

‘‘என் சென்னை என் பெருமை, என் மெரினா என் பொறுப்பு” விழிப்புணர்வு இயக்கம் துவக்கம்

சென்னை, ஜன. 19– திருக்குறள் வாரத்தினை முன்னிட்டு, “என் சென்னை என் பெருமை, என் மெரினா என் பொறுப்பு” விழிப்புணர்வு இயக்கத்தின் தொடக்க நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரையில் நேற்றுநடைபெற்றது. சென்னை மெரினாவில் நடிகை சுஹாசினி மணிரத்தினம், சென்னை மாநகராட்சியுடன் இணைந்து சென்னை மெரினாவினை தூய்மையாக வைப்பதற்கான “என் சென்னை என் பெருமை, என் மெரினா என் பொறுப்பு” விழிப்புணர்வு இயக்க தொடக்க நிகழ்ச்சியில், இதற்காக வடிவமைக்கப்பட்ட ஜெர்சியினை மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்டு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் […]

Loading

செய்திகள்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில பார் கவுன்சிலுக்கு மார்ச் 30-ந்தேதி தேர்தல்

சென்னை, ஜன.19- தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில பார் கவுன்சிலுக்கு 5 ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படும். இந்த தேர்தலில் 25 உறுப்பினர்களை மாநிலம் முழுவதும் உள்ள வக்கீல்கள் வாக்களித்து தேர்ந்தெடுப்பார்கள். அந்த 25 பேரில் ஒருவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார். அந்தவகையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர்கள் பதவிக்காலம் கடந்த ஆண்டே முடிவடைந்து விட்டதால், உறுப்பினர்களின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து தேர்தலை நடத்த உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில், பார் கவுன்சில் உறுப்பினர் வரதன் […]

Loading

செய்திகள்

இந்தியா–பாகிஸ்தான் எல்லையில் 3 ஏகே–47 துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் கண்டெடுப்பு

அமிர்தசரஸ், ஜன. 18– இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டதாக பஞ்சாப் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்தியா – பாகிஸ்தான் எல்லை அருகே மத்திய புலனாய்வு அமைப்புகளுடன் பஞ்சாப் பதான்கோட் போலீசார் இணைந்து சோதனை நடத்தினர். அப்போது எல்லைப் பகுதியான நரோட் ஜெய்மால் சிங் அருகே 3 ஏகே–47 துப்பாக்கிகள், 2 கைத் துப்பாக்கிகள், 98 தோட்டாக்கள், வெடிமருந்து உள்ளிட்ட ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டது. இந்தச் சோதனையின்போது மாநிலத்தில் சீர்குலைப்பதற்காக பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்கள் கொண்டு […]

Loading