செய்திகள்

வேளச்சேரி–பரங்கிமலை இடையே பறக்கும் ரெயில் சேவை விரைவில் தொடக்கம்

சென்னை, ஜன.23- வேளச்சேரி-பரங்கிமலை இடையே பறக்கும் ரெயில் சேவை விரைவில் தொடங்கும் என ரெயில்வே அதிகாரிகள் தொிவித்துள்ளனர். சென்னையில் கடற்கரை–வேளச்சேரி இடையே பறக்கும் ரெயில் சேவை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த சேவையை பரங்கிமலை வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது. 5 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த திட்டம் 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ரூ.495 கோடி ஒதுக்கப்பட்டு திட்டப்பணிகள் நடைபெற்று வந்தன. இதில் 4.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு 167 தூண்களுடன் ரெயில் பாதை அமைக்கப்பட்டது. […]

Loading

செய்திகள்

ஆமதாபாத் விமான விபத்துக்கு பிறகு ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.15 ஆயிரம் கோடி இழப்பு

புதுடெல்லி, ஜன. 23– ஆமதாபாத் விமான விபத்துக்கு பிறகு ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.15 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு சொந்தமான விமான நிறுவனமாக ஏர் இந்தியா இருந்தது. கடுமையான நிதிச்சுமை, இழப்பு உள்ளிட்டவற்றை காரணம் காட்டியும் முதலீட்டை விலக்குதல் கொள்கையை பின்பற்றி மத்திய அரசு கடந்த 2021-ம் ஆண்டு ஏர் இந்தியாவை விற்பதாக அறிவித்தது. இந்தியாவின் முன்னணி கோடீஸ்வர நிறுவனங்களான அம்பானி, அதானி, டாடா குழுமம் உள்ளிட்டவை ஏலத்தில் போட்டாபோட்டி போட்டன. […]

Loading

செய்திகள்

அமமுகவில் இருந்து மாணிக்கராஜா நீக்கம்: ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்

சென்னை, ஜன. 23– அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் கடம்பூர் மாணிக்கராஜவை கட்சியிலிருந்து நீக்குவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்திருந்த நிலையில், அவர் தி.மு.க.வில் இணைந்துள்ளார். அண்ணா தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமமுக இணைந்ததற்கு மாணிக்கராஜா எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக மாணிக்கராஜவை அமமுகவில் இருந்து நீக்குவதாக டிடிவி தினகரன் இன்று காலை அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:– ‘‘கழகத்தின் கொள்கை […]

Loading

செய்திகள்

விஜய் தலைமையில் 25-ந்தேதி தவெக செயல்வீரர்கள் கூட்டம்: தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை

சென்னை, ஜன. 22– தவெக தலைவர் விஜய் தலைமையில் வருகிற 25-ந்தேதி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சட்டமன்ற தேர்தலை சந்திக்க தீவிரமாக தயாராகி வருகிறது. கடந்த சில நாட்களாக பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டங்கள் நடந்து வருகின்றன. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு மற்றும் தேர்தல் பிரச்சார குழு கூட்டங்கள் நடந்தன. அதே நேரத்தில் கடந்த டிசம்பர் 18-ந்தேதி ஈரோட்டில் நடந்த மக்கள் சந்திப்புக்கு […]

Loading

செய்திகள்

மண்ணடி மல்லிகேஸ்வரர் கோயிலுக்கு ரூ.55 லட்சத்தில் புதிய அன்னதானக் கூடம்: அமைச்சர் சேகர்பாபு திறந்தார்

சென்னை, ஜன. 22– சென்னை மண்ணடியில் அமைந்துள்ள சுமார் 700 ஆண்டுகள் பழமையான மல்லிகேஸ்வரர் கோயிலுக்கு ரூ.54.65 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய அன்னதானக் கூடத்தை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பக்தர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். முதலமைச்சர் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற நாள்முதல் ரூ.131 கோடி மதிப்பீட்டில் 147 புதிய அன்னதானக் கூடங்கள் கட்டுவதற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, இதுவரை 35 அன்னதானக் கூடங்கள் பக்தர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியில் மேயர் ஆர்.பிரியா, இணை ஆணையர் ஜ.முல்லை, மாநகராட்சி […]

Loading

செய்திகள்

தங்கம் விலை ஒரே நாளில் ரூ.1,720 குறைந்தது: சவரன் ரூ.1,13,600க்கு விற்பனை

சென்னை, ஜன. 22– சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,720 குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 600க்கு விற்பனை செய்யப்படுகிறது.கடந்த 13ந் தேதி ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்தை கடந்த நிலையில், நேற்று முன்தினம் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தையும் தாண்டிவிட்டது. நேற்று காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.350-ம், சவரனுக்கு ரூ.2,800-ம் அதிகரித்திருந்த நிலையில், பிற்பகலில் மேலும் கிராமுக்கு ரூ.165-ம், சவரனுக்கு ரூ.1,320-ம் […]

Loading

செய்திகள்

நெல்லூரில் ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்ததில் 3 பேர் பலி

நெல்லூர், ஜன. 22– ஆந்திரம் மாநிலம் நெல்லூரில் ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்த விபத்தில் 3 பேர் பலியாகினர். ஆந்திரம் மாநிலம் நெல்லூரில் இருந்து ஐதராபாத் சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து நந்தியால் மாவட்டம் சிரிவெள்ளமெட்டா அருகே இன்று அதிகாலை 1.30 மணியளவில் சென்றபோது, பேருந்தின் டயர் வெடித்ததால், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிரே வந்த லாரி மீது மோதியதால் பேருந்து தீப்பிடித்து எரிந்தது. இந்தச் சம்பவத்தின் போது பேருந்தில் 36 பயணிகள் இருந்ததாகத் கூறப்படுகிறது. […]

Loading

செய்திகள்

சட்டப்பேரவையில் இருந்து அண்ணா தி.மு.க. எம்எல்ஏக்கள் வெளிநடப்பு

சென்னை, ஜன. 22– தமிழக சட்டசபையின் 3-ம் நாள் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. இதைத் தொடர்ந்து கேள்வி நேரத்தில் உறுப்பினர்கள் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்கள் பதில் அளித்தனர். இந்த நிலையில் கறிக்கோழி பிரச்சினை தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்றும் அண்ணா திமுக எம்எல்ஏக்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். நேரமில்லா நேரத்தில் இதுகுறித்து விவாதிக்க நேரம் கேட்டனர். மேலும் இதனை உடனே விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கூறினர். நேரமில்லா […]

Loading

செய்திகள்

தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்புவோம்: எடப்பாடி – பியூஷ்கோயல் உறுதி

சென்னை, ஜன. 22– அ.தி.மு.க. – பா.ஜ.க. வலுவான கூட்டணி; தமிழகத்தில் ஊழல் தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் என்று பியூஸ் கோயல், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக தெரிவித்தனர். அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சென்னை பசுமைவழி இல்லத்தில், இன்று தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஷ் கோயலுக்கு காலை விருந்து அளிக்கப்பட்டது. இதில் எல்.முருகன், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், எச்.ராஜா, பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பாஜக தலைவர்களும் பங்கேற்றனர். […]

Loading

செய்திகள்

மதுராந்தகத்தில் நாளை மோடி பொதுக்கூட்டம்: எடப்பாடி, கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு மேடையை பியூஸ்கோயல் பார்த்தார்

சென்னை, ஜன. 22– பிரதமர் மோடி மதுராந்தகத்தில் பிரமாண்ட பொதுக் கூட்டத்துக்கு நாளை பேசுகிறார். பிரதமரின் கூட்டத்திற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பிரதமர் பங்கேற்கும் கூட்டத்துக்காக 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். பிரதமரின் வருகையையொட்டி நேற்று காலையில் இருந்தே டெல்லியில் இருந்து சென்னை வந்துள்ள மத்திய பாதுகாப்பு படை போலீசார் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை தங்களது முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். பொதுக் கூட்டம் நடைபெறும் இடத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாளை […]

Loading