செய்திகள்

பா.ஜ.க. கூட்டணிக்கு 193 இடங்கள்:இந்தியா கூட்டணிக்கு படுதோல்வி

பாட்னா, நவ. 14– பிரபல தேர்தல் ஆலோசகர் என்று பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் பிரசாந்த் கிஷோரின் ஜன்சுராஜ் கட்சிக்கு பீகார் சட்டசபை தேர்தலில் ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. பீகாரில் பா.ஜ.க. – காங்கிரஸ் கூட்டணிகளிடையே பலத்த போட்டி நிலவி வரும் சூழ்நிலையில் புது போட்டியாளராக தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் களத்தில் இறங்கியது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 238 தொகுதிகளில் அக்கட்சி போட்டியிட்டது. இந்தத் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று […]

Loading

செய்திகள்

தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் மண்ணைக் கவ்வினார்

பாட்னா, நவ. 14– பிரபல தேர்தல் ஆலோசகர் என்று பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் பிரசாந்த் கிஷோரின் ஜன்சுராஜ் கட்சிக்கு பீகார் சட்டசபை தேர்தலில் ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. பீகாரில் பா.ஜ.க. – காங்கிரஸ் கூட்டணிகளிடையே பலத்த போட்டி நிலவி வரும் சூழ்நிலையில் புது போட்டியாளராக தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் களத்தில் இறங்கியது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 238 தொகுதிகளில் அக்கட்சி போட்டியிட்டது. இந்தத் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று […]

Loading

செய்திகள்

அண்ணா தி.மு.க. சார்பில் 15–ந் தேதி ஆர்ப்பாட்டம்: எடப்பாடி அறிவிப்பு

சென்னை, நவ.13- பள்ளிபாளையம் நகராட்சி பைபாஸ் சாலையில் உள்ள மதுக்கடையை அகற்றக்கோரி அண்ணா தி.மு.க. சார்பில் நாளை மறுநாள் (15–ந் தேதி) ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-– நிறைவேற்ற முடியாத பல்வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்து, ஆட்சியில் அமர்ந்த திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு, கடந்த 54 மாத காலமாக மக்களின் அத்தியாவசிய, அடிப்படைத் தேவைகளைக்கூட நிறைவேற்றித் தராமலும்; மக்கள் நிம்மதியுடன் […]

Loading

செய்திகள்

‘சென்னை சில்க்ஸ்’ ஆடை உற்பத்தி ஆலை- ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்.

சென்னை, நவ.13– முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வில், திருவாரூர் மாவட்டத்தில் 50 கோடி ரூபாய் முதலீட்டில் 2500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், எஸ்.சி.எம். கார்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் (தி சென்னை சில்க்ஸ் குழுமம்) ஆடை உற்பத்தி அலகு அமைக்கும் திட்டத்திற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், 2030-க்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரம் […]

Loading

செய்திகள்

மருத்துவ துறையில் 233 பேருக்கு பணி ஆணை: ஸ்டாலின் வழங்கினார்

சென்னை, நவ.13– முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இன்று தலைமைச் செயலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக 196 உதவியாளர் மற்றும் 18 வட்டார சுகாதார புள்ளியியலாளர் பணியிடத்திற்கும், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 19 திறன்மிகு உதவியாளர்–-II (பொருத்துநர்– II) பணியிடங்களுக்கும் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இவ்வரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுநாள் வரை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக […]

Loading

செய்திகள்

முயல் வேட்டைக்கு சென்ற 2 பேர் மின்வேலியில் சிக்கி உயிரிழப்பு

செங்கம், நவ. 13– திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை சேர்ந்த 4 இளைஞர்கள் முயல்வேட்டைக்கு சென்றனர். அப்போது குப்பநத்தம் பகுதியில் மின்வேலியில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி 17 மற்றும் 27 வயதான இளைஞர்கள் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. சட்டவிரோதமாக மின்வேலி அமைத்த நில உரிமையாளர் பாஷா என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். நில உரிமையாளர் இளைஞர்களின் உடல்களை அருகில் இருந்த கிணற்றில் வீசியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Loading

செய்திகள்

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம்; உமரின் ரகசிய டைரிகள் சிக்கின

புதுடெல்லி, நவ. 13– டெல்லி செங்கோட்டை அருகே மெட்ரோ ரெயில் நிலைய நுழைவு வாயில் பகுதியில், கார் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் உமர் எழுதியதாகக் கருதப்படும் டைரி மற்றும் நோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அல பலாஹ் பல்கலைக்கழக டாக்டர்கள் தங்கியிருந்ததாகக் கூறப்படும் வளாகத்துக்குள் இருந்த அறையிலிருந்து சில நோட்டு புத்தகங்கள், டைரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர்கள் பல்வேறு சதித்திட்டங்களை தீட்டியிருப்பதாக தெரிகிறது. டாக்டர் முசாமில் தங்கியிருந்த அறை எண் […]

Loading

செய்திகள்

வலுவான உறவுகளை வலுப்படுத்தும் மன நலன்: செட்டிநாடு வித்யாஷ்ரமத்தில் பயிலரங்கு

சென்னை, நவ. 13– செட்டிநாடு வித்யாஷ்ரமத்தில், பள்ளியின் தாளாளர் மீனா முத்தையாவின் தலைமையில் பிரக்யா உளவியல் விழா 2025, மனித தொடர்புகள் மற்றும் பற்று என்ற கருப்பொருளில் நடந்தது. புகழ்பெற்ற மருத்துவ உளவியலாளர் டாக்டர் கீர்த்தி பாய் உரையாற்றினார். பற்றுணர்வை வளர்ப்பதில் உணர்ச்சிபூர்வமான பரஸ்பரம் மிக முக்கியமானது, நாம் பார்க்கும்போதும் கேட்கும்போதும் நம்பிக்கை உருவாகிறது. அர்த்தமுள்ள உறவுகளுக்கு உணர்ச்சி நுண்ணறிவு மற்றும் பச்சாதாபம் அவசியம் என்பதை எடுத்துரைத்து, ஒரு நுண்ணறிவுள்ள உரையை நிகழ்த்தினார். செட்டிநாடு வித்யாஷ்ரமத்தின் முதல்வர் டாக்டர் அமுதா […]

Loading

செய்திகள்

காஞ்சிபுரம் அண்ணா பட்டு விற்பனை வளாகம் : ஸ்டாலின் திறந்தார்

சென்னை, நவ. 13– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று தலைமைச் செயலகத்தில், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை சார்பில் காஞ்சிபுரம், வள்ளல் பச்சையப்பன் சாலையில் அமைந்துள்ள காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் அண்ணா பட்டு விற்பனை வளாகத்தை 3 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு காணெலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் 1971-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, தொடர்ச்சியாக லாபகரமாக செயல்பட்டு […]

Loading

செய்திகள்

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியை தொடரலாம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடெல்லி, நவ.12- தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியை தொடரலாம் என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் வக்கீல் விவேக் சிங் ரிட் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி அரசியலமைப்புச் சாசனத்தின் 14, 19, 21, 325, 326 ஆகிய பிரிவுகளையும், மக்கள் பிரதிநிதித்துவ […]

Loading