செய்திகள்

தாம்பரத்தில் 16–ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் எடப்பாடி அறிவிப்பு

சென்னை, டிச.9– தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலவி வரும் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் மற்றும் நிர்வாக சீர்கேடுகளுக்குக் காரணமான; மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனுக்குடன் செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டு வைத்திருக்கும் திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு மற்றும் தாம்பரம் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும்; மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அண்ணா தி.மு.க. சார்பில் 16–ந் தேதி — செவ்வாய் கிழமை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி […]

Loading

செய்திகள்

கல்யாண் ஜூவல்லர்ஸ் சென்னையில் 2 புதிய கிளை நடிகர் பிரபு, ஐஸ்வர்யா லட்சுமி துவங்கினர்

சென்னை, டிச 9– கல்யாண் ஜூவல்லர்ஸ், சென்னையில் ஈ.சி.ஆர் மற்றும் ரெட் ஹில்ஸ் பகுதியில் புதிய ஷோரூம்களை நடிகர் பிரபு, நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் இந்த புதிய கிளைகளைத் திறந்து வைத்தனர். சென்னைப் பகுதியில் கல்யாண் ஜூவல்லர்ஸ் தனது வர்த்தகத்தை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் இந்த புதிய கிளைகளைத் தொடங்கியிருக்கிறது. இந்த விற்பனை நிலையங்களில் கல்யாண் ஜுவல்லர்ஸின் பிரபல அறிமுகமான முகூரத் (திருமண நகை வரிசை), முத்ரா (கையால் செய்யப்பட்ட பழங்கால பாணியிலான நகைகள்), நிமாஹ் […]

Loading

செய்திகள்

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மெரீனா பீச்சில் உள்ள சமாதிகளை அகற்றுவோம் சீமான் ஆவேசம்

உளுந்தூர்பேட்டை, டிச. 8– ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கடற்கரையில் உள்ள சமாதிகளை அகற்றுவோம்’ என்று சீமானம் ஆவேசமாகப் பேசினார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மணிக்கூண்டு திடலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பும் சமூக நீதியும் பஞ்சமர் நில மீட்பும் மற்றும் தேவேந்திர குல வேளாளர் பட்டியல் வெளியேற்றமும் என்ற தலைப்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- நாங்கள் […]

Loading

செய்திகள்

கள்ளக்குறிச்சியில் பெற்றோரை இழந்து தவிக்கும் 4 குழந்தைகளுக்கு வீடு, பணி நியமன ஆணை, நிதியுதவி முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

சென்னை, டிச.8– கள்ளக்குறிச்சி மாவட்டம், பூட்டை கிராமத்தைச் சேர்ந்த பெற்றோர்களை இழந்த 4 குழந்தைகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு வீட்டுமனைப் பட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு. பணிநியமன ஆணை, அன்புக்கரங்கள் திட்டத்தின் கீழ் நிதியுதவி, திறன் பயிற்சிக்கான உதவித்தொகை ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் வழங்கினார். கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், பூட்டை கிராமத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன் என்பவர் 14.11.2025 அன்று உடல்நலக் குறைவால் காலமானார். அவரது […]

Loading

செய்திகள்

டி.ஜி. வைணவக் கல்லூரியில் தேசிய மாணவர் படை வீரர்களுக்கான 14–வது தேசிய கருத்தரங்கு முதல்வர் எஸ்.சந்தோஷ்பாபு துவக்கி வைத்தார்

சென்னை, டிச. 8– சென்னை அரும்பாக்கம் டி.ஜி. வைணவக் கல்லூரியில் தேசிய மாணவர் படை வீரர்களுக்கான 14–வது தேசிய கருத்தரங்கை முதல்வர் எஸ்.சந்தோஷ்பாபு துவக்கி வைத்தார். துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைணவக் கல்லூரியின் தமிழ்நாடு தேசிய மாணவர் கவசப் படைப் பிரிவு –1″ தேசிய மாணவர் படை வீரர்களுக்கான தொழில் வாய்ப்புக்கான வழிகாட்டல் என்னும் பொருண்மையில் 14-வது தேசிய கருத்தரங்கத்தைச் சிறப்பாக நடத்தியது. தொடர்ச்சியாக பதினான்கு ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியை, முன்னாள் இணை தேசிய மாணவர் […]

Loading

செய்திகள்

மலையாள நடிகை பாலியல் பலாத்கார வழக்கு நடிகர் திலீப் விடுதலை

திருவனந்தபுரம், டிச. 8– ஒட்டுமொத்தத் திரையுலகையும் அதிர வைத்த கேரள நடிகை பலாத்கார வழக்கில் நடிகர் திலீப் விடுதலை செய்யப்பட்டார். பல்சர் சுனி உள்பட 6 பேர் குற்றவாளிகள் என எர்ணாகுளம் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி அருகே அத்தாணி பகுதியில், கடந்த 17.2.2017 அன்று பிரபல நடிகை ஒருவர் படப்பிடிப்பு முடிந்து கேரவனில் சென்று கொண்டிருந்தார். திருச்சூரிலிருந்து கொச்சிக்குச் செல்லும்போது அந்த நடிகையை ஆறு நபர்கள் கடத்தியுள்ளனர். பல்சர் […]

Loading

செய்திகள்

சென்னையில் 71 இண்டிகோ விமானகள் ரத்து

சென்னை, டிச. 8– சென்னையில் இன்று 71 இண்டிகோ விமானகள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். உள்ளாட்டு விமான பயணங்களில் விமானிகள் மற்றும் பணியாளர்களுக்கான புதிய பணி நேரக்கட்டுப்பாடு கடந்த 1-ந்தேதி முதல் அமலுக்கு வந்தது. இதன்படி விமானிகள் தொடர்ச்சியாக 18 மணி நேரம் வேலை பார்க்கலாம் என்ற விதியை திருத்தி 8 மணி நேரமாக குறைத்தது. விமானிகளின் விடுப்பு நேரம் முன்பு வாரத்திற்கு 36 மணி நேரமாக இருந்தது. அது தற்போது 48 […]

Loading

செய்திகள்

புதுச்சேரியில் நாளை விஜய்–மக்கள் சந்திப்பு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட த.வெ.க.

சென்னை, டிச. 8– புதுச்சேரியில் நாளை நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி வெற்றியடைய ஒத்துழைக்க வேண்டும் என கட்சித் தொண்டர்களைத் தவெக தலைமை கோட்டுக்கொண்டுள்ளது. நம் வெற்றித் தலைவரின் ஒப்புதலோடு வழங்கப்பட்டுள்ள இந்த வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்சித் தொண்டர்களும் பொதுமக்களும் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என தெரிவித்து கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:– நாளை (9–ந்தேதி செவ்வாய்க்கிழமை) புதுச்சேரி, உப்பளத்தில் காலை 10.30 மணிக்குத் தமிழக வெற்றிக் கழகத் தலைவரின் ‘புதுச்சேரி மாநில […]

Loading

செய்திகள்

த.வெ.க.வில் இணைந்த நாஞ்சில் சம்பத்

சென்னை, டிச.6- த.வெ.க. தலைவர் விஜய்யை, நாஞ்சில் சம்பத் நேற்று சந்தித்து தன்னை த.வெ.க.வில் முறைப்படி இணைத்துக்கொண்டார். இதுகுறித்து நாஞ்சில் சம்பத் கூறியதாவது:- தமிழக அரசியலில் அதிக அளவு இளைஞர்களை விஜய் ஈர்த்து வைத்து இருக்கிறார். விஜய் என்னிடம் நான் உங்கள் ரசிகன் என்றார். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. தி.மு.க. ஆதரவாளராக இருந்த என்னை தி.மு.க.வினர் அநாகரீகமாக நடத்தினர். தி.மு.க.வில் நான் சைக்கிள் கூட கேட்டதில்லை, கேட்டாலும் கிடைக்காது, அது வேறு. விஜய்க்கு ஆதரவாக நான் […]

Loading

செய்திகள்

தமாகா 12ஆம் ஆண்டு விழா சட்டமன்றத்தில் எங்கள் குரல் ஒலிக்கும் ஜி.கே. வாசன்  பேட்டி

சென்னை, நவ. 28– சட்டமன்றத்தில் தமாகா குரல் நிச்சயம் ஒலிக்கும் என்று ஜி.கே. வாசன் கூறினார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் 12ம் ஆண்டு விழாவையொட்டி ஆழ்வார்பேட்டை தலைமை அலுவலகத்தில் தலைவர் ஜி.கே.வாசன் எம்பி கொடியேற்றியனார். இந்த பொதுச் செயலாளர்கள் ஜி.ஆர். வெங்கடேஷ், ராஜம் எம்பி நாதன், ராணி கிருஷ்ணன்,துணைத் தலைவர்கள் விடியல் சேகர் சக்தி வடிவேல், முனவர் பாஷா, மாவட்டத் தலைவர்கள் பிஜு சாக்கோ, அருண்குமார், லூயிஸ் மற்றும் நிர்வாகிகள் கே ஆர் டி ரமேஷ், […]

Loading