செய்திகள்

தி.மு.க. ஆட்சியில் ஊழல் தான் சாதனை மோடி முன்னிலையில் எடப்பாடி சபதம்

மதுராந்தகம், ஜன.24– தேசிய ஜனநாயகக் கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெறும். அண்ணா தி.மு.க. ஆட்சி அமைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி உறுதிபட கூறினார். தி.மு.க. ஆட்சியின் ஒரே சாதனை ஊழல் தான் என்றும் அவர் கூறினார். அண்ணா தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல் மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நேற்று மாலை செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, தமிழக பாஜக […]

Loading

செய்திகள்

நாங்கள் அம்மா வளர்த்த பிள்ளைகள் கருத்துவேறுபாடுகளை மறந்துவிட்டோம்

மதுராந்தகம், ஜனவரி 24: மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் அண்ணா திமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் கலந்துகொண்டு செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்தனர். எடப்பாடி பழனிசாமி, “நாங்கள் அம்மா வளர்த்த பிள்ளைகள். கடந்த கருத்து வேறுபாடுகளை மறந்து இனி ஒன்றாக செயல்படுகிறோம். தமிழகத்தில் ஊழல், குடும்ப ஆட்சி, சீரழிவு நிறைந்த நிர்வாகத்திற்கு முடிவு காணும் […]

Loading

செய்திகள்

சட்டசபையில் அண்ணா தி.மு.க. பங்கேற்கவில்லை

சென்னை, ஜன. 24– சட்டசபையில் இன்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான முதலமைச்சரின் பதிலுரையில் அண்ணா தி.மு.க. உறுப்பினர்கள் யாரும் பங்கேற்கவில்லை. இன்று காலை 9.30 மணிக்கு சபை கூடியது. மதிப்பீட்டுக் குழுவின் அறிக்கையை அதன் தலைவர் எஸ். காந்திராஜன் சமர்ப்பித்தார். அதே போல் அரசு உறுதிமொழிக் குழுவின் அறிக்கையை அதன் தலைவர் தி.வேல்முருகன் சமர்ப்பித்தார். பின்னர் அரசினர் சட்டமுன் வடிவுகள் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து கவர்னரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் […]

Loading

செய்திகள்

திருவனந்தபுரம் – தாம்பரம் உட்பட 3 ‘‘அம்ருத் பாரத்’’ ரெயில்கள்: மோடி தொடங்கி வைத்தார்

திருவனந்தபுரம், ஜன. 23– கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, அம்ருத் பாரத் ரெயில் சேவைகளை கொடியசைத்து தொடக்கிவைத்தார். கேரளாவில் சமீபத்தில் நடந்த நடந்த உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியை பாரதீய ஜனதா கட்சி (பா.ஜ.க.) முதன் முறையாக கைப்பற்றியது. அந்த வரலாற்று வெற்றியை தொடர்ந்து 45 நாட்களுக்குள் பிரதமர் மோடி கேரளா வருவார் என்று கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மோடி இன்று கேரளாவுக்கு வந்தார். அவர் டெல்லியில் இருந்து தனி […]

Loading

செய்திகள்

ஜம்மு காஷ்மீர் வாகன விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு சட்டசபையில் இரங்கல்

சென்னை, ஜன. 23– முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பவானி முருகன் மறைவுக்கு சட்டமன்றத்தில் இன்று இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு உறுப்பினர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர். மேலும் ஜம்மு காஷ்மீர் வாகன விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தமிழக சட்டசபையின் 4-ம் நாள் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. இதைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் வாகன விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு தமிழக சட்டசபையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இரங்கல் தீர்மானத்தை வாசித்த பேரவைத் தலைவர் […]

Loading

செய்திகள்

பல்கலைக்கழகங்களில் 50% ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்பாமலே இருப்பதா? தி.மு.க. அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்

சென்னை, ஜன.23– ‘‘தமிழகத்தில் உள்ள 21 பல்கலைக்கழகங்களில் 50% ஆசிரியர் காலி பணியிடங்கள், ஆசிரியர்களை நியமிக்க திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததற்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க.) தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– ‘‘தமிழ்நாட்டில் உள்ள 21 மாநில பல்கலைக்கழகங்களில் சுமார் 50% முதல் 65% வரை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி பெறப்பட்ட தகவல்கள் வாயிலாக தெரிய வந்துள்ளது. […]

Loading

மக்கள் குரல் பார்வையில்

விஜய்யின் த.வெ.க. கட்சிக்கு ‘விசில்’ சின்னம்

விஜய்யின் த.வெ.க. கட்சிக்கு தேர்தல் கமிஷன் ‘விசில்’ சின்னம் வழங்கியுள்ளது. இதனால் அக்கட்சி தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்காளம், அசாம் மற்றும் கேரளா ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபைக்கு இன்னும் சில மாதங்களில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு இந்திய தேர்தல் கமிஷன் தேர்தல் ஆயத்த பணிகளில் இறங்கியுள்ளது. பல்வேறு பணிகளை அது முன்னெடுத்து இருந்தாலும், தேர்தல் கமிஷனில் பதிவு பெற்ற, அங்கீகாரம் பெறாத கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கும் பணியையும் […]

Loading

செய்திகள்

தி.மு.க. அரசுக்கு விடை கொடுக்க தமிழ்நாடு முடிவு செய்துவிட்டது

புதுடெல்லி, ஜன. 23– ஊழல் தி.மு.க. அரசுக்கு விடை கொடுக்க தமிழ்நாடு முடிவு செய்துவிட்டது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு, தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார், தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை […]

Loading

செய்திகள்

சிக்கலான சிகிச்சையில் 1000 நோயாளிகளுக்கு மறுவாழ்வு: அப்போலோ நிபுணர்கள் குழு சாதனை

சென்னை, ஜன 23– சென்னை அப்போலோ மருத்துவமனை, இருதயம் மற்றும் நுரையீரல் நோய்க்கான சிகிச்சையில் தேசிய அளவில் முக்கிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. 600-க்கும் மேற்பட்ட இருதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைகள், 1,000-க்கும் மேற்பட்ட எக்மோ சிகிச்சைகள், 2,000-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்குத் தொடர் சிகிச்சை மற்றும் பராமரிப்பு, 250-க்கும் மேற்பட்ட செயற்கை இருதய பம்ப் (LVAD) சிகிச்சைகள், 250-க்கும் மேற்பட்ட நுரையீரல் ரத்த உறைவு நீக்க சிகிச்சைகளை, இம்மருத்துவமனையின் அனுபவமிக்க உறுப்புமாற்று சிகிச்சை குழு வெற்றிகரமாக […]

Loading

செய்திகள்

தங்கம் சவரனுக்கு ரூ.3,600 உயர்வு; வெள்ளி கிலோவுக்கு ரூ.20,000 அதிகம்

சென்னை, ஜன. 23– சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,600 என உயர்ந்துள்ளது. இதேபோல வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.20,000 உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, சர்வதேச அளவில் தங்கத்தின் மீதான முதலீடு உயர்வு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. தங்கம் மற்றும் வெள்ளியின் விலை போட்டி போட்டுக் கொண்டு […]

Loading