செய்திகள்

வளசரவாக்கத்தில் ஆக்கிரமித்துக் கட்டியிருந்த 10 ஆயிரம் சதுர அடி கட்டிடம் இடிப்பு

சென்னை, டிச.13– உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி, வளசரவாக்கம் மண்டலம், நெற்குன்றம், பெருமாள் கோயில் தெருவில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் இடத்தில் சுமார் 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் இரண்டு தளங்களுடன் கட்டப்பட்டிருந்த ஆக்கிரமிப்புக் கட்டடம், மாநகராட்சியின் அலுவலர்களால், காவல் துறை, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், தமிழ்நாடு மின்சார வாரியத்தைச் சார்ந்த அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து நேற்று (12–ந் தேதி) ஜே.சி.பி. இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது. இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் சென்னை மாநகராட்சி […]

Loading

செய்திகள்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் அரசியல் கட்சி பிரதிநிதகளுடன் விழுப்புரம் கலெக்டர் ஆலோசனை

விழுப்புரம், டிச. 13– விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக்கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். சிறப்பு வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளர் (வடக்கு மண்டலம்) ராமன்குமார் கலந்துகொண்டு, வாக்காளர் பட்டியலில் முகவரி மாற்றம், இறப்பு போன்ற விவரங்கள் குறித்தும், புதிய வாக்காளர்களை பட்டியலில் சேர்ப்பதற்கான விவரங்கள் குறித்தும் கேட்டறிந்தார். அப்போது […]

Loading

செய்திகள்

பனகல் பூங்கா முதல் போட் கிளப் வரை சுரங்கம் அமைக்கும் பணியை தொடங்கியது ‘‘மயில்’’ இயந்திரம்

சென்னை, டிச. 13– பனகல் பூங்கா நிலையம் முதல் போட் கிளப் நிலையம் வரை சுரங்கம் அமைக்கும் பணியை “மயில்” சுரங்கம் தோண்டும் இயந்திரம் தொடங்கியது. சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், கட்டம் 2-ல் 118.9 கி.மீ. நீளத்திற்கு மேலும் 3 வழித்தடங்களை கட்டி முடிக்க திட்டமிட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம்–2 வழித்தடம் 4 கலங்கரை விளக்கத்திலிருந்து பூந்தமல்லி புறவழிச்சாலை வரை அமைக்கப்படவுள்ளது. இதில் மெரினா கடற்கரையில் உள்ள […]

Loading

செய்திகள்

பல்லாயிரம் கிளிகளுக்கு உணவளித்த கேமிரா சேகர் காலமானார்

சென்னை, டிச. 12– சென்னையில் தினமும் பல ஆயிரம் கிளிகளுக்கு உணவளித்து வந்த கேமிரா சேகர் உடல்நலக்குறைவால் காலமானார். பறவை மனிதர் என இந்தியளவில் கவனிக்கப்பட்டவர் ஜோசஃப் சேகர். சென்னை ராயப்பேட்டையில் கேமரா பழுதுபார்க்கும் பணியைச் செய்து வந்தபோது தன் அலுவலக மாடிப்பகுதியில் (அவர் வீடு) ஒன்றிரண்டு கிளிகளுக்கு உணவளித்து வந்தவரைத் தேடி கடந்த 20 ஆண்டுகளாக பல்லாயிரம் கிளிகள் வரத்தொடங்கியது. கேமிரா சேகரிப்பு கேமராக்களை சேகரிக்கும் பழக்கமும் இருந்ததால் இவரை கேமிரா ஹவுஸ் சேகர் என்றே […]

Loading

செய்திகள்

42 பத்திரிகையாளர்களுக்கு மாதம் ரூ.12,000 ஓய்வூதிய ஆணை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

சென்னை, டிச. 10– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (10–ந்தேதி) தலைமைச் செயலகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் பத்திரிகைத் துறையிலிருந்து ஓய்வு பெற்று நலிந்த நிலையில் உள்ள 42 பத்திரிகையாளர்களுக்கு தலா 12 ஆயிரம் ரூபாய் மாதாந்திர ஓய்வூதியத்திற்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு ஆணைகளை வழங்கினார். தமிழ்நாட்டில் முதன்முறையாக உழைக்கும் பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார் என்பது நினைவிருக்கலாம். திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றப்பின், செய்தி மக்கள் […]

Loading

செய்திகள்

பொதுமக்களிடம் புகார் மனு பெற்றார் கமிஷனர் அருண்

சென்னை, டிச. 10– சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் நடைபெற்று வரும் பொதுமக்கள் குறை தீர் முகாமில், காவல் அதிகாரிகள் பொதுமக்களின் புகார் மனுக்களை பெற்று விரைந்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் காவல் ஆணையரகத்தில் புகார் மனு கொடுக்க வந்த பொதுமக்களிடம் இருந்துபுகார் மனுக்களை பெற்று, விரைந்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட […]

Loading

செய்திகள்

சென்னையில் காவலர் குறைத்தீர்க்கும் முகாம்

சென்னை, டிச. 10: சென்னை பெருநகர காவல்துறையினரின் பணி சிறக்க அவர்தம் குறைகளை போக்கி, காவலர் குடும்ப நலனுக்கு அதிகாரிகள் உதவிடும் வகையில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின்பேரில் காவலர் குறைதீர் சிறப்பு முகாம் நடைபெற்றது. வேப்பேரி, காவல் ஆணையாளர் அலுவலக கலந்தாய்வு கூடத்தில் நடைபெற்ற ‘‘காவலர்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாமில்‘‘ சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின்பேரில், கூடுதல் காவல் ஆணையாளர் (தலைமையிடம்) விஜயேந்திர பிதாரி, சென்னை பெருநகர காவல், […]

Loading

செய்திகள்

9வது நாளாக இன்றும் விமானங்கள் ரத்து இண்டிகோ விமான சேவை 10 சதவீதம் குறைப்பு மத்திய அரசு நடவடிக்கை

சென்னை, டிச. 10– நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை 9வது நாளாக இன்றும் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று 14 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தனியார் விமான நிறுவனமான இண்டிகோ விமான நிறுவனம் இந்தியாவின் விமான போக்குவரத்தில் அசைக்க முடியாத பெரும்சக்தியாக உருப்பெற்றது. அந்த நிறுவனத்திடம் 134 விமானங்கள் உள்ளன. இதன் மூலம் உள்நாட்டு சேவைகள் 1,840-ம், சர்வதேச சேவைகள் 460-ம் என அந்த நிறுவனம் இயக்கி வருகிறது. அதன்படி இந்தியாவின் மொத்த உள்நாட்டு விமான சேவையில் […]

Loading

செய்திகள்

கூர்மையான சிந்தனை கொண்டவர் ராஜாஜி பிரதமர் மோடி புகழாரம்

புதுடெல்லி, டிச. 10– ராஜாஜி கூர்மையான சிந்தனை கொண்டவர் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். ராஜாஜியின் 147வது பிறந்த நாளையொட்டி, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:– சி.ராஜாகோபாலாச்சாரியை பற்றி நினைக்கும் போது, சுதந்திர போராட்ட வீரர், சிந்தனையாளர் உள்ளிட்ட பல்வேறு வார்த்தைகள் தான் என் மனதில் எழுகின்றன. அவரது பிறந்த நாளன்று அவருக்கு மரியாதை செலுத்த கடமைப்பட்டுள்ளேன். 20ம் நூற்றாண்டின் கூர்மையான சிந்தனை கொண்டவராக திகழ்ந்த இவர், மதிப்புகளை உருவாக்குவதில், மனிதர்களின் கண்ணியத்தை காப்பாற்றுவதிலும் […]

Loading

செய்திகள்

அண்ணா தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டம்

சென்னை வானகரத்தில் நாளை சென்னை, டிச. 9– அண்ணா தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டத்திற்கு வரும் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளருமான பா.பென்ஜமின் ஏற்பாடு செய்து வருகிறார். வானகரம் அடையாளம்பட்டில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நாளை (10ந் தேதி) புதன்கிழமை காலை 10 மணிக்கு அண்ணா தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். […]

Loading