செய்திகள்

விழுப்புரத்தில் தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழிப்புணர்வுப் பேரணி

விழுப்புரம், டிச. 18: விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில், தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வார விழாவினை முன்னிட்டு, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியினை கலெக்டர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் கொடியசைத்து துவக்கி வைத்தார். தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956-ஆம் நாளை நினைவு கூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆட்சிமொழிச் சட்டவாரம் கொண்டாடப்பட்டுவருகிறது. அதனடிப்படையில், விழுப்புரம் மாவட்டத்தில், 17.12.2025 முதல் 27.12.2025 வரை தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வார […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

டெல்லியில் கடும் பனிமூட்டம் 4 பேர் பலி

புதுடெல்லி, டிச. 16: டெல்லியில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக ஆக்ரா விரைவுச் சாலையில் 8 பஸ்கள் 3 கார்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் 4 பேர் பலியானார்கள். குளிர்காலம் தொடங்கிய பிறகு டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால், வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், ஆங்காங்கே நெருப்பு மூட்டி பொதுமக்கள் குளிர் காய்ந்து வருகின்றனர். […]

Loading

செய்திகள் முழு தகவல்

சோனியா காந்தி மன்னிப்பு கேட்க ஜெ.பி. நட்டா வலியுறுத்தல்

புதுடெல்லி, டிச. 15: பார்லிமெண்டில் மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரண்டு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் பகல் 12 மணி வரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. காங்கிரஸ் பேரணியில் பிரதமர் மோடிக்கு எதிராக கோஷம் எழுப்பியது குறித்து ராகுல், மூத்த தலைவர் சோனியா உள்ளிட்டோர் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஜெ.பி. நட்டா, கிரண் ரிஜிஜூ உள்ளிட்ட அமைச்சர்கள் வலியுறுத்தினர். பார்லிமெண்டில் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. எஸ்.ஐ.ஆர்., பணி, வந்தே மாதரம் பாடலின் […]

Loading

செய்திகள்

சர்தார் வல்லபாய் பட்டேல் நினைவு தினம்: பிரதமர் மோடி அஞ்சலி

புதுடெல்லி, டிச. 15: இந்திய சுதந்திர போராட்ட தியாகி சர்தார் வல்லபாய் பட்டேல் நாட்டின் முதல் துணை பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் இருந்தார். இதனிடையே, குஜராத்தின் நடியாட் பகுதியில் 1875ம் ஆண்டு பிறந்த சர்தார் வல்லபாய் பட்டேல் 1950ம் ஆண்டு டிசம்பர் 15ம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில், சர்தார் வல்லபாய் பட்டேலின் 75வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, சர்தார் வல்லபாய் பட்டேல் நினைவு தினத்தில் அவருக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார். இது தொடர்பாக […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

டெல்லியில் கடும் பனிப்பொழிவு: விமான சேவைகள் பாதிப்பு

புதுடெல்லி, டிச. 15: டெல்லியில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. விமானங்களின் நிலை அறிந்து விமான நிலையத்திற்கு வருமாறு பயணிகளுக்கு விமான நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன. குளிர்காலம் தொடங்கிய பிறகு டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால், வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், ஆங்காங்கே நெருப்பு மூட்டி பொதுமக்கள் குளிர் காய்ந்து வருகின்றனர். […]

Loading

செய்திகள்

234 தொகுதிகளுமே எங்கள் இலக்கு: பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

சென்னை, டிச. 13– கூட்டணி குறித்த அறிவிப்பு ஜனவரி 9ம் தேதி தெரிவிக்கப்படும் என்றும் பிரேமலதா விஜயகாந்த் கூறினார். தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி கூட்டணி குறித்த விவாதங்கள் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. அதிமுக, பாஜக கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில் இரண்டு கட்சிகளும் தேர்தலுக்கான வியூகங்களை வகுக்கக் களமிறங்கிவிட்டனர். திமுக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்டுகள் கூட்டணியில் எந்த சலசலப்பும் வரவில்லை. இதற்கிடையில் தேமுதிக, பாமக யாருடன் கூட்டணி என்பதுதான் இன்னும் உறுதியாகாமல் இழுபறியாக இருக்கிறது. […]

Loading

செய்திகள்

2001 பார்லிமெண்ட் தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்பு படை வீரர்கள் படத்திற்கு பிரதமர், துணை ஜனாதிபதி மலர் தூவி மரியாதை

புதுடெல்லி, டிச. 13– கடந்த 2001–ம் ஆண்டு பார்லிமெண்டில் நடந்த தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்பு படையினர் படத்திற்கு, இன்று பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். கடந்த 2001ம் ஆண்டு, டிசம்பர் 13–ந்தேதி பார்லிமெண்ட் வளாகத்துக்குள் தீவிரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்த முயன்றனர். அந்த சதி திட்டத்தை பாதுகாப்புப் படையினர் முறியடித்தனர். இந்த சம்பவத்தில் பாதுகாப்பு படையினர் 8 பேர் மற்றும் ஒரு தோட்டக்காரர் என மொத்தம் 9 பேர் […]

Loading

செய்திகள்

இண்டிகோ விமான சேவை பாதிப்பு 4 அதிகாரிகள் சஸ்பெண்ட்

டெல்லி, டிச. 13– இண்டிகோ விமான சேவை பாதிப்பைத் தொடர்ந்து அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து விமான போக்குவரத்து இயக்குனரகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. விமான விபத்துக்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை தவிர்க்க டெல்லி ஐகோர்ட் உத்தரவின் அடிப்படையில் விமான நிறுவனங்களுக்கு சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் புதிய விதிகளை வகுத்தது. புதிய விதிகளை அமல்படுத்த 2 ஆண்டுகள் அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் வகுத்த புதிய விதிகளை இண்டிகோ அமல்படுத்தவில்லை. குறிப்பாக, குறைவான […]

Loading

செய்திகள்

கொல்கத்தாவில் தனது 70 அடி உயர சிலையை காணொலி வாயிலாக திறந்து வைத்தார் மெஸ்ஸி

கொல்கத்தா, டிச. 13– கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, கொல்கத்தாவில் தனது 70 அடி உயர சிலையை காணொலி வாயிலாக திறந்துவைத்தார். உலகின் மிகசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி. இவரது தலைமையிலான அர்ஜென்டினா அணி, 2022ல் ‘பிபா’ உலக கோப்பை வென்றது. மூன்று நாள் சுற்றுப்பயணமாக இன்று இந்தியாவிற்கு வந்துள்ளார். இன்று கொல்கத்தா மற்றும் ஐதராபாத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். நாளை மும்பை வான்கடே மைதானத்தில் ரசிகர்களை சந்திக்கிறார், 15-ஆம் தேதி […]

Loading

செய்திகள்

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து அமெரிக்க செயற்கைக்கோள் நாளை மறுநாள் விண்ணில் ஏவப்படுகிறது இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்

சென்னை, டிச.13- அமெரிக்காவின் 6.5 டன் எடை கொண்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோளை ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து நாளை மறுநாள் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவிலுள்ள டெக்சாஸை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஏ.எஸ்.டி. நிறுவனம் செல்போன் சேவைக்கான 6.5 டன் எடை கொண்ட ‘புளூபேர்ட்- 6′ என்ற தகவல் தொடர்பு செயற்கைக்கோளை உருவாக்கி உள்ளது. இந்த செயற்கைக்கோளை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) கீழ் செயல்படும், ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா, […]

Loading