செய்திகள்

அலங்கோல தி.மு.க. ஆட்சிக்கு மக்கள் முடிவு கட்டுவார்கள்: எடப்பாடி பழனிசாமி பேச்சு

சோழிங்கநல்லூர், டிச.29– அலங்கோல ஆட்சி, ஊழல் ஆட்சியை நடத்தி மக்களை ஏமாற்றி வருகிறார் ஸ்டாலின் என எடப்பாடி பழனிசாமி காட்டமாக கூறினார். மக்கள் நலத்திட்டங்களை செய்யாமல் ஊதாரித்தனமாக செலவு செய்கிறார் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார். எல்லா துறையிலும் ஊழல், இந்த ஆட்சிக்கு சாவு மணி அடிக்கப்பட்டு விட்டது. தி.மு.க. ஆட்சி மீது மக்கள் கடும் கோபம், வெறுப்பில் இருக்கிறார்கள் என்றும் எடப்பாடி கூறினார். ‘‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப் பயணத்தின் 6வது கட்டப் பிரசாரத்தில் நேற்று […]

Loading

செய்திகள்

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4.42 லட்சம் பேர் விண்ணப்பம்: தேர்தல் ஆணைய அதிகாரி தகவல்

சென்னை, டிச.29- தமிழகம் முழுவதும் நடந்த சிறப்பு தீவிர முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4.42 லட்சம் பேர் படிவங்களை வழங்கினர். சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டசபை தொகுதிகளுக்கான 4 ஆயிரத்து 79 வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்வது தொடர்பான சிறப்பு தீவிர முகாம் கடந்த 27-ந்தேதி தொடங்கி 2 நாட்கள் நடந்தது. 2-ம் நாளான நேற்று நடந்த முகாமில் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாத […]

Loading

செய்திகள்

தமிழ்நாடு தீயணைப்பு துறை சார்பில் கள்ளக்குறிச்சியில் விளையாட்டு போட்டிகள்: கலெக்டர் பிரசாந்த் துவக்கி வைத்தார்

கள்ளக்குறிச்சி டிச.29– தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில், மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்த இந்திய காவல்பணி இயக்குனர் சீமா அகர்வால் உத்தரவின் படி கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. பள்ளி மைதானத்தில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இவ்விழாவில், விழுப்புரம் மண்டல துணை இயக்குநர் கா.தென்னரசு தலைமையில், விழுப்புரம் மாவட்ட அலுவலர் பாஸ்கரன், கள்ளக்குறிச்சி மாவட்ட அலுவலர் இருசம்மாள், நாகை மாவட்ட அலுவலர் முகுந்தன், மற்றும் விழுப்புரம் மண்டலத்தைச் சார்ந்த உதவி மாவட்ட […]

Loading

செய்திகள்

தங்கம் விலை சவரன் ஒரு லட்சத்து 4 ஆயிரம் ரூபாய்: வெள்ளி விலை ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 74 ஆயிரம்

சென்னை, டிச. 27– சென்னையில் இன்று (27ந் தேதி) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 880 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து நான்காயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் தங்கம், வெள்ளியில் முதலீட்டாளர்களும், பிற நாடுகளும், அதிக அளவில் முதலீடு செய்வதால், அவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், நம் நாட்டிலும் தங்கம், வெள்ளி விலை, தினமும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (டிசம்பர் […]

Loading

செய்திகள்

புதுப்பாக்கம் ஊராட்சி நாற்றங்கால் பண்ணையில் வளர்க்கப்படும் மரக்கன்றுகள்: கலெக்டர் ஆய்வு

ராணிப்பேட்டை, டிச.27– ராணிப்பேட்டை மாவட்டம் புதுப்பாக்கம் ஊராட்சியில் கூடுதல் வட்டார நாற்றங்கால் பண்ணையில் பல்வேறு வகையான மரக் கன்றுகள் வளர்க்கப்பட்டுள்ளதை கலெக்டர் சந்திரகலா நேரில் ஆய்வு செய்தார். ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் சந்திரகலா திமிரி ஊராட்சி ஒன்றியம் அகரம் ஊராட்சியில் கலவை மடுவு ஆற்றின் குறுக்கே மாநில சிறப்பு நிதி திட்டத்தில் ரூ.4.87 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணியை பார்வையிட்டு பணிகள் விரைவாக மேற்கொள்ள கேட்டுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து பென்னகர் ஊராட்சியில் மகாத்மா […]

Loading

செய்திகள்

கடலூர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டு கடன் திறன் மதிப்பீட்டு அறிக்கை: கலெக்டர் சிபி ஆதித்யா வெளியிட்டார்

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நபார்டு வங்கியின் மூலம் 2025–-26 நிதியாண்டில் கடலூர் மாவட்டத்திற்கான ரூ.27,434.05 கோடி கடன் திறன் மதிப்பீட்டு அறிக்கையினை மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வெளியிட்டார். கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்ததாவது, 2026–-27 நிதியாண்டிற்கான கடலூர் மாவட்டத்திற்கானகடன் திறன் மதிப்பீட்டு ஆவணத்தை தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி (நபார்டு) கணித்து வெளியிட்டுள்ளது. இது நடப்பு ஆண்டின் ஆண்டு கடன் திட்டத்துடன் (ACP) ஒப்பிடும்போது 18% அதிகரிப்பாகும். […]

Loading

செய்திகள்

தமிழக சட்டசபை ஜனவரி 20-ந் தேதி கூடுகிறது: கவர்னர் உரை நிகழ்த்துகிறார்

சென்னை,டிச. 26– ஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில், 2026ம் ஆண்டு புத்தாண்டில் முதல் சட்டசபை கூட்டம் ஜனவரி 20ந் தேதி நடக்க இருக்கிறது. இந்த கூட்டத்தில், கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்று உரையாற்ற இருக்கிறார். இதுதொடர்பாக, சபாநாயகர் அப்பாவு இன்று தலைமைச்செயலகத்தில் நிருபர்களிடம் பேசுகையில், “2026-ம் ஆண்டு தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் ஜனவரி 20-ந் தேதி கூடுகிறது. அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு கூடும் […]

Loading

செய்திகள்

உத்தரபிரதேசம் லக்னோவில் ரூ.230 கோடி செலவில் தேசிய நினைவுச் சின்ன அருங்காட்சியகம்:

பிரதமர் மோடி திறந்து வைத்தார் லக்னோ, டிச.26- உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் ரூ.230 கோடி செலவில் 65 ஏக்கர் பரப்பளவில் ராஷ்ட்ர பிரேர்ண ஸ்தல் என்ற பெயரில் தேசிய நினைவுச்சின்ன அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நூற்றாண்டு நிறைவு விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் 65 ஏக்கர் பரப்பளவில் ரூ.230 கோடி செலவில் ராஷ்ட்ர பிரேர்ண ஸ்தல் என்ற பெயரில் தேசிய நினைவிடமும், […]

Loading

செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டம்: தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீசார்

சென்னை, டிச.26- புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது தமிழ்நாடு முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. ஜனவரி 1-ந் தேதி ஆங்கில புத்தாண்டு உலகம் முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. டிசம்பர் 31-ந் தேதி(புதன்கிழமை) நள்ளிரவு ஓட்டல்கள், கடற்கரை, ரிசார்ட்டுகளில் உற்சாகம் களைகட்டும். புத்தாண்டுக்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் கடற்கரை ரிசார்ட்டுகள் கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகிறது. புத்தாண்டு கொண்டாட்டத்தின் […]

Loading

செய்திகள்

ஸ்டாலின், எடப்பாடி சந்தித்து விஜயகாந்த் குருபூஜை அழைப்பிதழ் வழங்கினார் எல்.கே.சுதீஷ்

சென்னை, டிச.26- ஒரேநாளில் அடுத்தடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆகியோரை நேரில் சந்தித்த எல்.கே.சுதீஷ், விஜயகாந்த் குருபூஜையில் கலந்துகொள்வதற்கான அழைப்பிதழை அவர்களுக்கு வழங்கினார். 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன. இருப்பினும், தே.மு.தி.க. இதுவரையிலும் எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்கவில்லை. வருகிற ஜனவரி 9-ந் தேதி கடலூரில் நடைபெற உள்ள தே.மு.தி.க. மாநாட்டில் கூட்டணி குறித்த அறிவிப்பை தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட உள்ளார். […]

Loading