செய்திகள்

பெரம்பூரில் நவீன உடற்பயிற்சிக் கூடம்: சேகர்பாபு திறந்து வைத்தார்

சென்னை, ஜன.9– அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, திரு.வி.க.நகர் மண்டலம், பெரம்பூர், ஏகாங்கிபுரம் 1வது தெருவில் மேயரின் 74–வது வார்டு மாமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் உடற்பயிற்சி உபகரணங்களுடன் கூடிய நவீன உடற்பயிற்சிக் கூடத்தினைப் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார். இந்த உடற்பயிற்சிக் கூடமானது, 1,325 சதுர அடி பரப்பளவில்சைக்கிள், டிரெட்மில் உள்ளிட்ட நவீன உடற்பயிற்சி உபகரணங்களுடன் கட்டப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பெரம்பூர், குளக்கரை சாலையில் மூலதன நிதியில் ரூ.2.77 கோடி மதிப்பீட்டில் 7,542 சதுர […]

Loading

செய்திகள்

பிராட்வே பாரதி மகளிர் கல்லூரியில் ரூ.19.58 கோடியில் புதிய “கல்வி அரங்கம்”: துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல்

சென்னை, ஜன.9– துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிராட்வே, பிரகாசம் சாலை பாரதி மகளிர் கல்லூரியில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 19.58 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய “கல்வி அரங்கம்” அமைப்பதற்கான பணியினை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். பாரதி மகளிர் கல்லூரி மாணவிகளின் கல்வி, கலை, கலாச்சாரம் மற்றும் திறன் வளர்ச்சிக்காக சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில், 19.58 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 25,000 சதுர […]

Loading

செய்திகள்

பொங்கல் கொண்டாடினார் கவர்னர் ஆர்.என்.ரவி

சென்னை, ஜன. 9– கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நேற்று நடைபெற்ற பொங்கல் விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் பங்கேற்றார். விழாவில், பாரம்பரிய முறைப்படி பொங்கலிடப்பட்டு விருந்தினர்களுக்கு வழங்கப்பட்டது. சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. தமிழகத்தின் பாரம்பரிய நெல் ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. முன்னதாக, விழாவுக்கு வந்த கவர்னருக்கு, பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. நாட்டுப்புறக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தெலுங்கானா மாநில முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், தொழிலதிபர் நல்லி குப்புசாமி, பத்திரிகையாளர் […]

Loading

செய்திகள்

அமெரிக்காவின் சட்ட விரோத ஆக்கிரமிப்பால் மக்கள் துன்பம் அடைந்துள்ளனர்: வெனிசுலா இடைக்கால அதிபர் காட்டம்

கராகஸ், ஜன. 6– வெனிசுலாவின் இடைக்கால அதிபராக பொறுப்பேற்றுள்ள டெல்சி ரோட்ரிக்ஸ், அமெரிக்காவின் சட்ட விரோத ஆக்கிரமிப்பால் மக்கள் துன்பம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்குள் போதை பொருட்களை கடத்துவதாக குற்றஞ்சாட்டி, அந்நாட்டு படைகளால் சிறைபிடிக்கப்பட்ட வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ (63) மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் (69) ஆகியோர் நியூயார்க் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனால் துணை அதிபராக இருந்த டெல்சி ரோட்ரிக்ஸ் இடைக்கால அதிபராக நியமனம் செய்யப்பட்டார். துப்பாக்கிச்சூடு இதனிடையே வெனிசுலாவின் கராகசில் துப்பாக்கிச்சூடு […]

Loading

செய்திகள்

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

புதுடெல்லி, ஜன. 6: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி (வயது 79). இவர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள கங்காராவ் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். சோனியா காந்திக்கு இருமல் பிரச்சினை உள்ளது என்றும், டெல்லியில் நிலவும் காற்று மாசு பிரச்சினை காரணமாக அவர் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்திருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் அவர் நுரையீரல் […]

Loading

செய்திகள்

இசையால் எட்டுத்திக்கும் ஆளும் ஏ.ஆர்.ரகுமான்: மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை, ஜன. 6: இசையால் எட்டுத்திக்கும் ஆளும் ஏ.ஆர்.ரகுமானுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரும், ஆஸ்கர் நாயகனுமான ஏ.ஆர். ரகுமான் இன்று தனது 59வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு அரசியல் கட்சித் தலைவர், திரைப் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:– இசையால் எல்லைகளைக் கடந்து, எட்டுத்திக்கும் ஆளும் அன்பு இளவல் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு இனிய பிறந்தநாள் […]

Loading

செய்திகள்

காங்கிரஸ் மூத்த தலைவர் சுரேஷ் கல்மாடி காலமானார்

புனே, ஜன. 6– காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுரேஷ் கல்மாடி (வயது 81) இன்று காலமானார். இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முன்னாள் தலைவரான கல்மாடி, புனேவில் உள்ள தீனநாத் மங்கேஷ்கர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நீண்டகால உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று அதிகாலை 3.30 மணியளவில் காலமானதாக அவரது அலுவலகத்தில் இருந்து அறிக்கை வெளியிட்டு உறுதிபடுத்தினர். சுரேஷ் கல்மாடியின் உடல் புனேவின் எரண்ட்வானேயில் உள்ள அவரது வீட்டில் பிற்பகல் […]

Loading

செய்திகள்

சென்னையில் காலி மதுபாட்டில்களை கொடுத்து ரூ.10 திரும்ப பெறும் திட்டம் அறிமுகம்

சென்னை, ஜன. 6: சென்னையில் இன்று முதல் காலி மதுபாட்டில்களை கொடுத்து ரூ.10 திரும்ப பெறும் திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மதுப்பிரியர்கள் மது அருந்திவிட்டு போதை தலைக்கு ஏறியதும் காலி பாட்டிலை ஆங்காங்கே வீசி செல்கின்றனர். இதனால் மனிதர்கள் மட்டுமின்றி வாயில்லா ஜீவன்களும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின்றன. மேலும் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை டாஸ்மாக் நிர்வாகம் கடந்த ஆண்டு அமல்படுத்தியது. […]

Loading

செய்திகள்

10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி: முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை, ஜன.6- ‘உலகம் உங்கள் கையில்’ என்ற பெயரில், கல்லூரிகளில் படிக்கும் 10 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு மாணவர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக உயர்கல்வித்துறை சார்பில் ‘உலகம் உங்கள் கையில்’ என்ற தலைப்பில் 10 லட்சம் மடிக்கணினிகள் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை […]

Loading

செய்திகள்

கடலூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் காலை உணவுத் திட்டச் செயல்பாடுகள்: கலெக்டர் ஆய்வு

கடலூர், ஜன. 6: கடலூர் மாவட்டம் திருவந்திபுரம், கடலூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் காலை உணவு திட்டம் குறித்து கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது: முதலமைச்சர் தமிழக மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து, அவற்றை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக கல்விக்கு முக்கியத்துவம் அளித்து இன்றைய குழந்தைகள்தான் நாளைய எதிர்கால சமுதாயம் என்பதை அறிந்து, அவர்களுக்கு கல்வி அளிக்கவும், பசியின்றி கல்வி பயிலவும், தொடக்கப்பள்ளிகளில் காலை […]

Loading