செய்திகள்

தவெகவுடன் கூட்டணி வைக்க டிடிவி தினகரன் விரும்பினார்

கோவை, ஜன. 27– தவெகவுடன் கூட்டணி வைக்க அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விரும்பியதாக தவெக ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்துக்கு வருகைதந்த செங்கோட்டையனிடம், தவெக மீதான அண்ணா தி.மு.க. விமர்சனம், அண்ணா தி.மு.க. கூட்டணியில் தினகரன் இணைந்தது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இந்த கேள்விகளுக்கு பதிலளித்து செங்கோட்டையன் கூறியதாவது:– பா.ம.க. ராமதாஸ் தவெகவுடன் பேசியதாக செய்தி பார்த்தேன், நல்லது நடக்கட்டும். அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளும் […]

Loading

செய்திகள்

ஜனநாயகனுக்கு தொடரும் சிக்கல் ; தனி நீதிபதியின் உத்தரவு ரத்து

சென்னை, ஜன. 27– நடிகர் விஜய்யின் ‘ஜன நாயகன்’ படத்திற்கு உடனடியாக தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவை சென்னை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. மேலும், இந்த வழக்கை மீண்டும் தனி நீதிபதி பி.டி. ஆஷா விசாரிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) தலைவருமான விஜய், ‘ஜன நாயகன்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைப்படத்தை கே.வி.என். புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது. திரைப்படத்துக்கு தணிக்கை சான்று […]

Loading

செய்திகள்

தென் கொரியா பொருட்களுக்கு 10% கூடுதல் வரி: டிரம்ப் உத்தரவு

வாஷிங்டன், ஜன. 27– தென் கொரியா பொருட்களுக்கான இறக்குமதி வரியை 15 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் உயர்த்தி அறிவித்திருக்கிறார். உலக நாடுகள் தனது பேச்சை கேட்கவில்லை என்றால் வரி விதிப்பேன் என அதிபர் டிரம்ப் அறிவித்தார். பின்னரும் தனது உத்தரவுக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் கூடுதலாக வரி விதிப்பது அதிபர் டிரம்ப் வழக்கமாகிவிட்டது. அந்த வகையில் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளவதில் தாமதம் ஏற்பட்டு வருவதால், தென் கொரியா பொருட்களுக்கான இறக்குமதி வரியை 15 சதவீதத்தில் […]

Loading

செய்திகள்

தேசமே முதன்மை, சுயசார்பு வளர்ந்த பாரதம்’ – தமிழக மக்களுக்கு கவர்னர் அழைப்பு

சென்னை, ஜன. 26– ‘தமிழ்நாட்டில் மிகச்சிறந்த மனித வளம் இருக்கிறது. நமது இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள், கைவினைஞர்கள் என சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் ‘தேசத்திற்கே முதன்மை’ என்ற உறுதிமொழிக்கு தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும்’ என்று கவர்னர் ஆர்.என். ரவி அழைப்பு விடுத்தார். நமது வினைத் திட்பத்தைக் கட்டவிழ்த்துவிட்டு சுயசார்புடைய, வளர்ந்த பாரதத்தை 2047ஆம் ஆண்டிற்குள் நாம் உருவாக்குவோம் என்று வலியுறுத்தினார். மண்ணை வளப்படுத்தவும், ஆரோக்கியமான உணவை உற்பத்தி செய்யவும், அதிக மகசூலை நிலைநிறுத்தவும் […]

Loading

செய்திகள்

டி.ஜி. வைணவக் கல்லூரியில் முதல்வர் சந்தோஷ் பாபு தேசிய கொடி ஏற்றினார்

சென்னை, ஜன.26– சென்னை அரும்பாக்கத்தில் உள்ள துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைணவக் கல்லூரியில், 77-வது குடியரசு தின விழா இன்று மிகச் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. கல்லூரிச் செயலர் அசோக் குமார் முந்த்ராவின் வழிகாட்டுதலின்படி, 5-வது கம்பெனி என்.சி.சி. காலாட்படை மற்றும் 1 (டிஎன்) பட்டாலியன் என்.சி.சி ஆகியவை இணைந்து இந்த விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தன. விழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றிய கல்லூரி முதல்வர் சேது. சந்தோஷ் பாபு, மகாத்மா காந்தியின் அஹிம்சை கொள்கைகள் மற்றும் […]

Loading

செய்திகள்

தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என். சிங் தேசிய கொடி ஏற்றி வைத்தார்.

சென்னை, ஜன. 26– 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு பெரம்பூர் ரயில்வே மைதானத்தில் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என். சிங் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். ஆர்.பி.எப். ஐ.ஜி கே. அருள் ஜோதி முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் ரயில்வே வாரியத்தின் முன்னாள் உறுப்பினர் நவீன் குலாட்டி, கூடுதல் பொதுமேலாளர் விபின் குமார், தெற்கு ரயில்வேயின் முதன்மைத் துறைத் தலைவர்கள், சென்னை பிரிவு ரயில்வே மேலாளர் ஷைலேந்திர சிங், தெற்கு ரயில்வே பெண்கள் தலைமையக அமைப்பின் தலைவர் […]

Loading

செய்திகள்

டெல்லியில் 21 குண்டுகள் முழங்க கொடியேற்றினார் ஜனாதிபதி திரவுபதி

புதுடெல்லி, ஜன. 26– இந்தியாவின் 77-வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி கடமைப் பாதையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசியக் கொடியேற்றினார். இவ்விழாவில் பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர். சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற சுபான்ஷு சுக்லாவுக்கு அசோக சக்ரா விருதை ஜனாதிபதி வழங்கி கவுரவித்தார். டெல்லியில் தேசியக் கொடியை ஏற்றுவதற்காக ஜனாதிபதி மாளிகையில் இருந்து திரவுபதி முர்மு, சிறப்பு விருந்தினர்கள் ஆகியோர் வீரர்கள் […]

Loading

செய்திகள்

தங்கம் ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்தை தாண்டியது

சென்னை, ஜன. 26– சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.275 உயர்ந்து ரூ.15,025க்கும், சவரனுக்கு ரூ.2,200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,20,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம், வெள்ளி விலை தினமும் புதிய உச்சம் தொட்டு வருகிறது. அதிலும் கடந்த ஒரு வாரமாக இரண்டும் போட்டிப்போட்டுக் கொண்டு உயர்ந்து வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் காலை மற்றும் மாலை என இரண்டு நேரங்களிலும் விலை ஏற்றம் கண்டு வருகிறது.நேற்று முன்தினம் காலையில் கிராமுக்கு ரூ.70-ம், சவரனுக்கு […]

Loading

செய்திகள்

குடியரசு தினத்தில் அரசியலமைப்பு உறுதி தவெக தலைவர் விஜய்

சென்னை, ஜன.26– ‘அரசியலமைப்பின் மாண்பைக் காக்க உறுதியேற்போம்’ என தமிழ்நாடு வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் – நடிகர் விஜய் குடியரசு தின வாழ்த்து தெரிவித்துள்ளார். 77-வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள செய்தியில், ‘வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட இந்தியக் குடியரசு உருவாகக் காரணமான அனைவரையும் நினைவுகூர்ந்து போற்றுவோம். […]

Loading

செய்திகள்

போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை

புதுடெல்லி, ஜன. 26– டெல்லியில் போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி இன்று மரியாதை செலுத்தினார். போரின்போது நாட்டுக்காக தங்களது இன்னுயிரை தியாகம் செய்த வீரர்களை நினைவுகூறும் வகையில், 77வது குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லி இந்தியா கேட் பகுதியில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்துக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு அவரை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தளபதிகள் வரவேற்றனர். போர் வீரர்களின் நினைவிடத்தில் மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். […]

Loading