விழுப்புரம், ஜன. 5: விழுப்புரம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், இ–-பைலிங் (மின்னணு வழக்கு தாக்கல்) முறையை மேலும் எளிமைப்படுத்துவது தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதற்கு சென்னை ஐகோர்ட் நீதிபதியும், விழுப்புரம் மாவட்ட நிர்வாக நீதிபதியுமான ஆஷா கலந்து கொண்டு இ-பைலிங் முறையில் வழக்குகளை தாக்கல் செய்யும்போது எதிர்கொள்ளும் சிக்கல்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்து வக்கீல்களிடம் நேரடியாக கேட்டறிந்தார். அப்போது, வக்கீல்கள் தெரிவித்த கருத்துகள் மற்றும் சந்தேகங்களுக்கு உரிய விளக்கங்களும் தீர்வு வழிமுறைகளும் வழங்கப்பட்டன. இதன் மூலம், […]
![]()


