சென்னை, டிச. 16: ரெயில் பெட்டிகள் மீது கற்களை வீசினால், அவர்கள் சிறுவர்களாக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ரெயில்வே பாதுகாப்புப் படையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சென்னை உள்ளிட்ட தெற்கு ரயில்வே மண்டலப் பகுதிகளில் ஓடும் ரயில்கள் மீது கற்களை வீசும் சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்வதாகப் புகார்கள் எழுந்துள்ளன. சென்னையிலிருந்து திருநெல்வேலி சென்ற ‘வந்தேபாரத்’ ரயில் மீது விருத்தாசலம், தாழநல்லூர் இடையே மணலூர் கிராமத்தில் சிலர் கற்களை வீசினர். இதில் ரயில் பெட்டிககளின் கண்ணாடிகள் சேதமடைந்தன. […]
![]()


