செய்திகள்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆசிரியர் தின வாழ்த்து

சென்னை, செப்.5– இன்று (5–ந் தேதி) ஆசிரியர் தினம். இதை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:– ‘பெற்றோர்கள் ஆசிரியர்களை நம்பிப் பிள்ளைகளை ஒப்படைக்கிறார்கள். பிள்ளைகள் பெற்றோரை விட ஆசிரியர்கள் சொல்வதையே அதிகம் நம்புகிறார்கள். அந்த மாணவர்களுக்குத் தமிழை, அறத்தை, அரசியலை, அறிவியலை என அனைத்தையும் கற்பித்து அவர்களின் உயர்வுக்காகப் பாடுபடும் நல்லாசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Loading