சென்னை, ஆக. 11– திடீரென நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கேரளாவிலிருந்து டெல்லி செல்ல இருந்த ஏர் இந்தியா விமானம் சென்னையில் அவசரமாக தரையிறங்கியது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து தலைநகர் டெல்லிக்கு திருநெல்வேலி காங்கிரஸ் எம்.பி. ராபர் ப்ரூஸ், கேரள எம்.பி.க்கள் கே.சி.வேணுகோபால், கொடிக்குனில் சுரேஷ், அதூர் பிரகாஷ், கே.ராதாகிருஷ்ணன் உள்பட 150 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் நேற்று இரவு புறப்பட்டது. அப்போது நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறை விமானி கண்டறிந்தார். […]
![]()



