செய்திகள்

நான் பதில் சொல்ல ஆரம்பித்தால் ராமதாஸ் பெயர் கெட்டுப்போய்விடும்: பொதுக்குழுவில் அன்புமணி பேச்சு

சென்னை, ஆக.10-– நான் பதில் சொல்ல ஆரம்பித்தால் டாக்டர் ராமதாஸ் பெயர் கெட்டுப்போய்விடும் என்று பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார். மாமல்லபுரத்தில் உள்ள தனியார் திருமண அரங்கில் பா.ம.க. பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்கினார். இதில் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா, சி.ஆர்.பாஸ்கரன், எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேசன், சிவகுமார் உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:- […]

Loading

செய்திகள்

ராமதாசின் தொலைபேசி ஹேக் செய்யப்பட்டதாக டி.எஸ்.பி. அலுவலகத்தில் புகார்

சென்னை, ஆக. 5– ராமதாசின் தொலைபேசி ஹேக் செய்யப்பட்டதாக டி.எஸ்.பி. அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நடைபெற்ற கட்சியின் ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டத்தில் பேசிய ராமதாஸ், என் வீட்டிலேயே, நான் அமரும் நாற்காலிக்கு பக்கத்திலேயே யாரோ ஒட்டு கேட்பு கருவியை வைத்துள்ளனர். யார் வைத்தார்கள்?, எதற்காக வைத்தார்கள்? என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறோம் […]

Loading

செய்திகள்

அன்புமணிக்கு ஆதரவு தெரிவித்த 3 எம்.எல்.ஏ.க்கள் நீக்கம்: ராமதாஸ் அதிரடி

திண்டிவனம், ஜூலை.21- பா.ம.க.வில் இருந்து திடீரென 3 எம்.எல்.ஏ.க்களை தற்காலிகமாக நீக்கம் செய்து ராமதாஸ் உத்தர விட்டுள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அன்புமணி ராமதாசுக்கும் இடையே கருத்து மோதல் நீடித்து வருகிறது. இதுகுறித்து பா.ம.க.வின் மூத்த தலைவர்கள் இருவரிடமும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும் சுமுக முடிவு எட்டப்படவில்லை. இதன் தொடர்ச்சியாக ராமதாஸ் நியமித்த நிர்வாகிகளை அன்புமணி நீக்குவதும், அன்புமணி நியமித்த நிர்வாகிகளுக்கு பதில், ராமதாஸ் புதிய நிர்வாகிகளை நியமிப்பதும் தொடர்கிறது. இந்த சூழலில் எம்.எல்.ஏ.க்கள் 3 […]

Loading

செய்திகள்

நானே இப்போது பாமக தலைவர்: தேர்தல் ஆணையத்துக்கு மருத்துவர் ராமதாஸ் கடிதம்

சென்னை, ஜூலை 10– அன்புமணி பதவி காலம் மே மாதத்துடன் நிறைவடைந்து விட்டதால், நானே இப்போது பாமக தலைவராக உள்ளேன் என தேர்தல் ஆணையத்துக்கு மருத்துவர் ராமதாஸ் கடிதம் எழுதி உள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி ராமதாஸை கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்குவது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதத்தில், ராமதாஸ் தானே கட்சியின் தலைவர் என்று உறுதிப்படுத்தியதாகவும், அன்புமணியின் செயல்பாடுகளால் கட்சியில் […]

Loading