செய்திகள்

ஆம்னி பேருந்து கட்டணங்களை குறைக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை, ஜன.12– பொதுமக்கள் எளிதாக சொந்த ஊர் சென்று திரும்புவதற்கு வசதியாக ஆம்னி பேருந்துகளின் கட்டணங்களைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– பொங்கல் திருநாளைக் கொண்டாடுவதற்காக லட்சக்கணக்கான மக்கள் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு செல்லத் திட்டமிட்டிருக்கும் நிலையில், இதைப் பயன்படுத்திக் கொண்டு தனியார் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் விண்ணை முட்டும் அளவுக்கு கட்டணத்தை உயர்த்தியுள்ளன. அரசின் விதிகளை மீறி அப்பட்டமாக […]

Loading

செய்திகள்

பா.ம.க. கவுரவ தலைவருக்கு கடிதம் அனுப்ப அன்புமணிக்கு தகுதி இல்லை அருள் எம்.எல்.ஏ. பேட்டி

திண்டிவனம், டிச. 23– பா.ம.க. கவுரவ தலைவருக்கு கடிதம் அனுப்ப அன்புமணிக்கு தகுதி இல்லை என்று அருள் எம்.எல்.ஏ. கூறினார். திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாஸ் தலைமையில் தேர்தல் கூட்டணி தொடர்பாக கடலூர், சேலம் உள்ளிட்ட 20 தொகுதி நிர்வாகிகள் கருத்து கேட்பு கூட்டம் இன்று காலை நடந்தது. இதில் கவுரவ தலைவர் ஜி.கே. மணி, செயல் தலைவர் ஸ்ரீகாந்தி, பா.ம.க.இணைப் பொதுச் செயலாளரும், சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான அருள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். […]

Loading

செய்திகள்

ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்க ஜி.கே. மணிக்கு நோட்டீஸ்

சென்னை, டிச. 18: பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினரில் இருந்து ஏன் நீக்கக்கூடாது? என்பது குறித்து ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்கும்படி ஜி.கே.மணிக்கு அன்புமணி தரப்பிலிருந்து நோட்டீஸ் அனுப்பப்ட்டுள்ளது. அன்புமணி தலைமையில் செயல்படும் பா.ம.க. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது- பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த பென்னாகரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.கே.மணி தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியின் நலனுக்கும், கட்சித் தலைமைக்கும் எதிராக செயல்பட்டு வருகிறார். அவரது அண்மைக்கால செயல்பாடுகள் எல்லைக் கடந்தவையாக இருப்பதால், அதற்காக […]

Loading

செய்திகள்

பா.ம.க. இளைஞர் சங்க தலைவராக ஜி.கே.மணி மகன் நியமனம்: ராமதாஸ் அறிவிப்பு

திண்டிவனம், அக்.3- பா.ம.க. இளைஞர் சங்க தலைவராக ஜி.கே.மணி மகன் தமிழ்குமரனை டாக்டர் ராமதாஸ் நியமனம் செய்தார். விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் கடந்த 28.12.2024 அன்று நடைபெற்ற பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பா.ம.க. இளைஞர் சங்க தலைவராக தனது பேரனான முகுந்தனை (டாக்டர் ராமதாசின் மூத்தமகள் காந்திமதியின் மகன்) நியமிப்பதாக டாக்டர் ராமதாஸ் அறிவித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த டாக்டர் அன்புமணி, மைக்கை மேஜையில் வீசிவிட்டு வெளியேறினார். அதன்பிறகுதான் தந்தை, மகனான டாக்டர் ராமதாசுக்கும், […]

Loading

செய்திகள்

அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தே அன்புமணி நீக்கம்: ராமதாஸ் அதிரடி அறிவிப்பு

விழுப்புரம், செப். 11- பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அன்புமணியை நீக்கி, நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அன்புமணி பாட்டாளி மக்கள் கட்சியின் விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி, 16 குற்றச்சாட்டகளுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று, பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணிக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். 10 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் காலக்கெடு விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால், ராமதாஸ் அனுப்பிய நோட்டீசை பெற்றுக்கொண்ட […]

Loading

செய்திகள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறுக்கான அனுமதி ரத்து செய்யப்படாதது ஏன்?

சென்னை, செப்.7– ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட்டால், அதன்பின் ராமநாதபுரம் மாவட்டம் பாலைவனமாவதை தடுக்க முடியாது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க அளிக்கப்பட்ட அனுமதியை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திற்கு ஆணையிடப்பட்டிருப்பதாக தி.மு.க. அரசு அறிவித்து இன்றுடன் 15 நாள்கள் ஆகும் நிலையில் […]

Loading

செய்திகள்

அன்புமணி மீது நடவடிக்கை: ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பாமக நிர்வாக குழுக் கூட்டத்தில் ஆலோசனை

விழுப்புரம், செப். 3– ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பாமக நிர்வாக குழுக் கூட்டத்தில் அன்புமணி மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தீவிரமாகி உள்ளது. அன்புமணி ராமதாஸ் மீது வைக்கப்பட்ட 16 குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அளிக்காததால் அவர் மீதான நடவடிக்கையை ராமதாஸ் நாளை (வியாழக்கிழமை) எடுப்பார் என்று கட்சியினர் கூறி வருகின்றனர். இந்த சூழலில் விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பா.ம.க. மற்றும் வன்னியர் […]

Loading

செய்திகள்

அதிக ஊதியம் தருவதாக நம்ப வைத்து தூய்மைப் பணியாளர்களை ஏமாற்றுவதா? : அன்புமணி கண்டனம்

சென்னை, செப்.1– அதிக ஊதியம் தருவதாக நம்ப வைத்து தூய்மைப் பணியாளர்களை ஏமாற்றுவதா? என அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– சென்னையில் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட ராயபுரம், திரு.வி.க. நகர் மண்டலங்களில் தூய்மைப் பணி செய்வதற்காக மாதம் ரூ.23,000 ஊதியம் தருவதாக வாக்குறுதி அளித்து, தூய்மைப் பணியாளர்களை மாநகராட்சி அதிகாரிகளும், தி.மு.க. மாநகராட்சி மன்ற உறுப்பினர்களும் அழைத்துச் சென்று தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய வைத்த நிலையில், […]

Loading

செய்திகள்

அரைவேக்காடு அறிக்கை விடுவதை நிறுத்துங்கள்: அன்புமணிக்கு அமைச்சர் பன்னீர்செல்வம் காட்டமான பதில்

சென்னை, ஆக.18– சொந்த கட்சியில் பதற்றம் தீரும் வரை அரைவேக்காடு அறிக்கை விடுவதை நிறுத்துங்கள் என்று அன்புமணி ராமதாசுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து- வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– “2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தருமபுரியில் மொத்தமுள்ள 5 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வீழ்த்தப்பட்டதற்குப் பழிவாங்கும் வகையில்தான் தருமபுரி மாவட்டத்தை முதலமைச்சர் புறக்கணித்து வருகிறார்’’ என அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். சோற்றுக்குள் முட்டையை மறைக்கலாம்; அன்புமணி பூசணிக்காயையே மறைத்திருக்கிறார். 2024 […]

Loading

செய்திகள்

அன்புமணியுடன் எதுவும் பேசவில்லை: ராமதாஸ்

விழுப்புரம் பட்டானூரில் திட்டமிட்டபடி நாளை சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும், வதந்திகளை நம்பாதீர்கள் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணி ராமதாசுக்கும் இடையே மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்றைய தினம் ராமதாசின் மனைவி சரஸ்வதியின் பிறந்தநாள் என்பதால் அன்புமணி ராமதாஸ், தனது தாயார் சரஸ்வதியுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார். தாயாரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ராமதாசுடன் அன்புமணி பங்கேற்ற […]

Loading