செய்திகள்

ஸ்டாலின், எடப்பாடி சந்தித்து விஜயகாந்த் குருபூஜை அழைப்பிதழ் வழங்கினார் எல்.கே.சுதீஷ்

சென்னை, டிச.26- ஒரேநாளில் அடுத்தடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆகியோரை நேரில் சந்தித்த எல்.கே.சுதீஷ், விஜயகாந்த் குருபூஜையில் கலந்துகொள்வதற்கான அழைப்பிதழை அவர்களுக்கு வழங்கினார். 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன. இருப்பினும், தே.மு.தி.க. இதுவரையிலும் எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்கவில்லை. வருகிற ஜனவரி 9-ந் தேதி கடலூரில் நடைபெற உள்ள தே.மு.தி.க. மாநாட்டில் கூட்டணி குறித்த அறிவிப்பை தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட உள்ளார். […]

Loading

செய்திகள்

அண்ணாமலை–அமித்ஷா சந்திப்பு: தினகரன், ஓ.பன்னீர்செல்வம் சேர்க்கை குறித்து கூட்டணியில் பரபரப்பு

சென்னை , டிச. 9– அதிமுக–பாஜக கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியாக, டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தை கூட்டணிக்குள் இணைப்பது குறித்து ஆலோசிக்க, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று இரவு டெல்லி புறப்பட்டுச் சென்றார். இன்று அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்துகிறார். மக்களவை தேர்தலுக்கு பின் அதிமுக–பாஜக கூட்டணி உடைந்த நிலையில், இரு தரப்பும் தனித்தனி கூட்டணிகளை அமைத்து போட்டியிட்டது. இதையடுத்து வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு கூட்டணியை […]

Loading

செய்திகள்

நாமக்கல்லில் எடப்பாடி பிரச்சாரத்துக்கு அனுமதி மறுப்பு

சென்னை, அக்.4– வருகிற சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி கடந்த 19-ந் தேதி நாமக்கல் மாவட்டத்திற்கு உட்பட்ட ராசிபுரம் மற்றும் சேந்தமங்கலம் தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து கடந்த மாதம் 20ந் தேதி நாமக்கல் மற்றும் பரமத்திவேலூரிலும், 21-ந் தேதி திருச்செங்கோடு மற்றும் குமாரபாளையத்திலும் எடப்பாடி பழனிசாமியின் பிரசாரம் […]

Loading

செய்திகள்

‘தன்மானம்தான் முக்கியம் என்றால் எடப்பாடி டெல்லிக்குச் சென்றது ஏன்?’’ டிடிவி தினகரன் கேள்வி

சென்னை, செப். 16 – ‘‘தன்மானம்தான் முக்கியம் என்றால் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்குச் சென்றது ஏன்? என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இன்று டிடிவி. தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “நன்றி மறப்பது நன்றன்று என எடப்பாடி பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போல இருக்கிறது. நன்றியைப் பற்றி யார் பேசுவது? துரோகத்தைத் தவிர வேறு எதுவும் தெரியாத அவர் பேசுகிறார். அண்ணா திமுகவை […]

Loading

செய்திகள்

தி.மு.க. ஆட்சியில் நிறுத்தப்பட்ட திட்டங்கள் மீண்டும் செயல்படுத்தப்படும்:

பொள்ளாச்சி, செப்.11-– அண்ணா தி.மு.க. ஆட்சி அமைந்ததும் தி.மு.க. ஆட்சியில் நிறுத்தப்பட்ட திட்டங்களை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொள்ளாச்சியில் விவசாயிகளுடன் நடந்த கலந்துரையாடலின்போது எடப்பாடி பழனிசாமி கூறினார். அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் கடந்த ஜூலை மாதம் 7-ந் தேதி மேட்டுப்பாளையத்தில் தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை தொடங்கினார். இந்த நிலையில் பொள்ளாச்சி, வால்பாறை தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வந்த அவர், பொள்ளாச்சியில் பல்வேறு அமைப்புகளுடன் […]

Loading

செய்திகள்

செங்கோட்டையன் பொறுப்புகளில் இருந்து திடீர் விடுவிப்பு

திண்டுக்கல் , செப். 6: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன், கழக அமைப்புச் செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இத்தகவலைத் தெரிவித்துள்ளார். இந்த திடீர் நடவடிக்கை, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் […]

Loading

செய்திகள்

தொண்டர்களின் எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார் செங்கோட்டையன்

தஞ்சாவூர், செப். 5– அண்ணா தி.மு.க. தொண்டர்களின் எண்ணத்தை செங்கோட்டையன் இன்று வெளிப்படுத்தியுள்ளார், அது வரவேற்கத்தக்கது என ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் அவர் செய்தியாளர்களுடன் பேசுகையில், அண்ணாதி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சிக்குள் இணைத்தால் மட்டுமே தமிழ்நாட்டில் மீண்டும் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி ஆட்சியை கொண்டுவர முடியும். இல்லையென்றால் முடியாது என்று தொண்டர்கள் உணர்ந்திருக்கிறார்கள். அப்படி தொண்டர்களின் எண்ணத்தை செங்கோட்டையன் இன்றைக்கு வெளிப்படுத்தியுள்ளார், அது வரவேற்கத்தக்கது. ஏனென்றால் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி இரண்டு பேரின் நல்ல […]

Loading

செய்திகள்

அ.தி.மு.க. வை ஒருங்கிணைக்க எடப்பாடிக்கு 10 நாள் கெடு

கோபி, செப்.5– அண்ணா தி.மு.க.வில் பிரிந்து சென்றவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்க எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 10 நாள் கெடு விதித்துள்ளார். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மனம் திறந்து பேச உள்ளேன் என செங்கோட்டையன் கூறியிருந்தார் அல்லவா? அதன்படி, அண்ணா தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கோபி கரட்டூர் ரோட்டில் உள்ள கோபி புறநகர் மேற்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். முன்னதாக மேஜையில் வைக்கப்பட்டிருந்த அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களை […]

Loading

செய்திகள்

வேரோடு பிடுங்கி எறிந்தால் தி.மு.க. பெரிதாக முளைக்கும்: அமித்ஷாவுக்கு கே.என்.நேரு பதிலடி

நெல்லை, ஆக. 23– அண்ணா தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி பொருந்தாக் கூட்டணி என்று அமைச்சர் கே.என். நேரு கூறினார். நெல்லை தச்சநல்லூரில் நேற்று நடைபெற்ற பா.ஜ.க.வின் தென்மண்டல பூத் கமிட்டி மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசுகையில், மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சராக்க வேண்டும் என்று நினைத்து கொண்டு இருக்கிறார். அது ஒரு போதும் நடக்காது. வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. அரசை வேரோடு பிடுக்கி அகற்றுவோம். தமிழகத்தில் தேசிய ஜனநாயக […]

Loading

செய்திகள்

தி.மு.க. அரசை வேரோடு சாய்ப்போம்: மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதி

திருநெல்வேலி, ஆக.23-– ”சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வை வேரோடு சாய்ப்போம் என, அமித் ஷா பேசினார். தமிழகத்தில் அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றார். தமிழக பா.ஜ.க. கட்சியின் தென்மண்டல பூத் கமிட்டியின் முதல் மாநாடு திருநெல்வேலி தச்சநல்லூரில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நெல்லை பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் அமைக்கப்பட்டு இருந்த ஹெலிபேடில் வந்து இறங்கினார். அவருக்கு பா.ஜ.க. சார்பில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர்கள் அண்ணாமலை, […]

Loading