செய்திகள்

100 நாள் வேலை திட்டத்துக்கு ஆபத்து எடப்பாடி பழனிசாமி, எப்படி முட்டுக்கொடுக்க போகிறார்? முதல்வர் ஸ்டாலின் கேள்வி

சென்னை, டிச.18: 100 நாள் வேலை திட்டத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதற்கு எடப்பாடி பழனிசாமி எப்படி முட்டுக்கொடுக்க போகிறார்? என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:-– “பச்சைத்துண்டு போட்டுக்கொண்டு பச்சை துரோகம் செய்பவருக்கு, மீண்டும் விவசாயிகள் கண்ணில் தெரியவில்லையா? கிராமப்புற ஏழை மக்களின் வயிற்றிலேயே அடிக்கும் விக் ஷித் பாரத்-ரோஜ்கர் மற்றும் அஜீவிகா மிஷன்’ திட்டம் குறித்து எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வின் […]

Loading

செய்திகள்

தொண்டர்களுக்கு ஆர்.பி. உதயகுமார் வேண்டுகோள்

மதுரை, டிச. 11: அண்ணா தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்களையும் அம்மா பேரவையின் சார்பில் நடைபெறும் 44 வார திண்ணைப் பிரச்சாரத்தில் மக்களிடத்தில் எடுத்துச் செல்ல வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அண்ணா தி.மு.க. அம்மா பேரவை போர்ப்படை வீரர்கள் இன்றைக்கு எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைத்திட கடுமையாக உழைத்து வருகிறீர்கள். தற்போது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா […]

Loading

செய்திகள்

அண்ணா தி.மு.க. ஒன்றிணைய வேண்டும்: ஓ.பன்னீர் செல்வம் பேட்டி

தேனி, டிச. 10: அண்ணா தி.மு.க. ஒன்றிணைய வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் கூறினார். சட்டசபை தேர்தலை சந்திக்க அதிமுக தீவிரமாக தயாராகி வருகிறது. இதையொட்டி அதிமுக செயற்குழு-பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தேனியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: அண்ணா தி.மு.க. பொதுக்குழுவின் தீர்மானங்கள் முழுமையாக வந்தபிறகு அதுகுறித்து நான் பேசுகிறேன். தமிழ்நாடு நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் அனைவருமே பிரிந்து […]

Loading

செய்திகள்

அண்ணா தி.மு.க. தற்காலிக அவைத் தலைவர் கே.பி. முனுசாமி

சென்னை, டிச.10: அண்ணா தி.மு.க. தற்காலிக அவைத் தலைவராக கே.பி.முனுசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் நடைபெறும் அண்ணா தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 4 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். கூட்டத்திற்கு கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமை தாங்க வேண்டும். ஆனால், செயற்குழு கூட்டம் தொடங்கியதும் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு […]

Loading

செய்திகள்

அண்ணா தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டம்

சென்னை வானகரத்தில் நாளை சென்னை, டிச. 9– அண்ணா தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டத்திற்கு வரும் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளருமான பா.பென்ஜமின் ஏற்பாடு செய்து வருகிறார். வானகரம் அடையாளம்பட்டில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நாளை (10ந் தேதி) புதன்கிழமை காலை 10 மணிக்கு அண்ணா தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். […]

Loading

செய்திகள்

தாம்பரத்தில் 16–ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் எடப்பாடி அறிவிப்பு

சென்னை, டிச.9– தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலவி வரும் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் மற்றும் நிர்வாக சீர்கேடுகளுக்குக் காரணமான; மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனுக்குடன் செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டு வைத்திருக்கும் திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு மற்றும் தாம்பரம் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும்; மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அண்ணா தி.மு.க. சார்பில் 16–ந் தேதி — செவ்வாய் கிழமை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி […]

Loading

செய்திகள்

ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி மலர்வளையம் வைத்து மரியாதை

சென்னை, டிச.5: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். 6 முறை தமிழக முதல்வராக பொறுப்புவகித்த ஜெயலலிதா 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் இன்று காலை 10.45 […]

Loading

செய்திகள்

அமித்ஷாவுடன் பேசியது என்ன ? ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

சென்னை, டிச. 5: அண்ணா தி.மு.க.வில் உள்ளவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று அமித்ஷாவிடம் வலியுறுத்தியதாக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி சென்னை மெரீனாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார். இதன்பின்னர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறுகையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். அந்த சந்திப்பின்போது தமிழகத்தில் இன்றைக்கு இருக்கும் அரசியல் சூழ்நிலையை அவரிடம் எடுத்துக் கூறினேன். அவர் தன்னுடைய […]

Loading

செய்திகள் முழு தகவல்

நெசவாளர் கூட்டுறவு சங்கங்களை அழிக்க தி.மு.க. முயற்சி: எடப்பாடி கடும் கண்டனம்

சென்னை, டிச.5: நெசவாளர் கூட்டுறவு சங்கங்களை அழிக்க முயற்சிக்கும் தி.மு.க. அரசுக்கு வரும் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகாட்டுவார்கள் என எடப்பாடி பழனிசாமி காட்டமாக கூறியுள்ளார். இதுகுறித்து அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலம் முதல் ஏழை , எளிய மக்களுக்கும்; முதியோர் உதவித் தொகை பெறுபவர்களுக்கும், விலையில்லா வேட்டி, சேலை ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அண்ணா தி.மு.க. ஆட்சிக் காலங்களில் தரமான […]

Loading

செய்திகள்

அன்புமணி பிரிவு பா.ம.க. நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியுடன் திடீர் சந்திப்பு

சென்னை, டிச.4: சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவரை, பா.ம.க. நிர்வாகிகள் வக்கீல்கள் பாலு, முன்னாள் எம்.எல்.ஏ. கணேஷ்குமார் ஆகியோர் திடீரென சந்தித்தனர். இதுகுறித்து அண்ணா தி.மு.க. வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, சென்னை, பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில், பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் கே. பாலு, முன்னாள் எம்எல்ஏ கணேஷ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக நேரில் […]

Loading