செய்திகள்

சி.பி.ஐ. விசாரணையில் முன்னுக்குப்பின் முரணான பதிலளிக்கும் நிகிதா

சிவகங்கை, ஆக. 9– அஜித்குமார் வழக்கில் சி.பி.ஐ. விசாரணையில் நிகிதா முன்னுக்குப்பின் முரணான தகவல்கள் அளிப்பதால் அவர் பொய் புகார் கொடுத்தாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் காளி கோவில் காவலாளி அஜித்குமாரை, நிகிதா என்பவர் தனது நகை திருடப்பட்டதாக அளித்த புகாரில் அழைத்து சென்ற தனிப்படை போலீசார், விசாரணை என்ற பெயரில் சித்திரவதை செய்ததில், அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த […]

Loading

செய்திகள்

அஜித்குமார் குடும்பத்துக்கு அரசு சார்பில் மேலும் ரூ.25 லட்சம் நிவாரண நிதி

சிவகங்கை, ஆக.9- ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவுப்படி அஜித்குமார் குடும்பத்துக்கு அரசு சார்பில் மேலும் ரூ.25 லட்சம் நிவாரண நிதிக்கான காசோலையை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார். சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திர காளியம்மன் கோவில் காவலாளியாக பணிபுரிந்தவர் அஜித்குமார். சம்பவத்தன்று கோவிலுக்கு வந்த மதுரை திருமங்கலத்தை சேர்ந்த பேராசிரியை நிகிதா என்பவர் அளித்த நகை திருட்டு புகாரில் அஜித்குமாரை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். அப்போது போலீசார் தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்தார். இதுதொடர்பாக மானாமதுரை தனிப்படை போலீஸ்காரர்கள் […]

Loading

செய்திகள்

அஜித்குமார் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

மதுரை, ஜூலை.23- சிவகங்கை அருகே போலீஸ் விசாரணையின் போது அடித்து கொல்லப்பட்ட காவலாளி அஜித்குமார் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவிலில் காவலாளியாக வேலைபார்த்து வந்தவர் அஜித்குமார் (வயது 29). பேராசிரியை நிகிதா என்பவர் தனது நகை மாயமானதாக அளித்த புகாரின்பேரில் மானாமதுரை தனிப்படை போலீசார் அஜித்குமாரை விசாரணைக்காக அழைத்துச்சென்று அடித்துக்கொலை செய்தனர். இதுதொடர்பாக போலீஸ்காரர்கள் கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கரமணிகண்டன் ஆகியோர் கைது […]

Loading

செய்திகள்

தி.மு.க.– ‘சாரிம்மா’ மாடல் சர்க்காராக மாறி விட்டது: விஜய் ஆவேச பேச்சு

சென்னை, ஜூலை 13– வெற்று விளம்பர மாடல் தி.மு.க. சர்கார், இப்பொழுது ‘சாரிம்மா மாடல்’ சர்காராக மாறிவிட்டது என சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் த.வெ.க. தலைவரும், நடிகருமான விஜய் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித்குமார் என்ற இளைஞர் போலீஸார் தாக்கியதால் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், உயிரிழந்த அஜித்குமாரின் இல்லத்துக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேரடியாக சென்று அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, நிதி […]

Loading

செய்திகள்

விஜய் தலைமையிலான ஆர்ப்பாட்டம்: பெண் தொண்டர்கள் பலர் மயக்கம்

சென்னை, ஜூலை 13 தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் அடுத்தடுத்து மயக்கமடைந்தனர். அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டு சென்னை சிவானந்தா சாலையில் தவெக தலைவர் விஜய் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டம் அஜித்குமாரின் மரணத்திற்கு நீதி கோருவதற்காகவும், வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழுவிற்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தியும் நடத்தப்பட்டது. தவெக ஆர்ப்பாட்டத்திற்கு சென்னையில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் ‘திரு. மு.க. ஸ்டாலின் தலைமையிலான சமூக நீதி அரசுக்கு எதிராகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு […]

Loading

செய்திகள்

அஜித்குமார் மரண வழக்கு: ஐகோர்ட் மதுரை கிளையில் விசாரணை அறிக்கை தாக்கல்

மதுரை, ஜூலை 8– கோவில் காவலாளி அஜித்குமார் மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய மதுரை மாவட்ட நீதிபதி, தனது அறிக்கையை ஐகோர்ட் மதுரைக் கிளையில் இன்று தாக்கல் செய்தார். சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட கோயில் காவலாளி அஜித்குமார், தனிப்படை காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரிக்க ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து 4 நாட்கள் நீதிபதி சுந்தர்லால் […]

Loading

செய்திகள்

அஜித்குமார் தலையில் கம்பியால் அடித்ததில் மூளையில் ரத்தக் கசிவு

சிவகங்கை, ஜூலை 4– அஜித்குமார் தலையில் கம்பியால் அடித்ததில் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் அதுவே மரணத்துக்கு முக்கிய காரணமாக இருக்கக் கூடும் என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் தற்காலிக காவலாளி அஜித்குமார் (27). நகை திருட்டு வழக்கு தொடர்பான போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்தார். இதுதொடர்பாக மானாமதுரை குற்றவியல் தனிப்படை போலீசார் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். உயிரிழந்த அஜித்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை […]

Loading

செய்திகள்

திருப்புவனம் அஜித்குமார் மரணம்: 2-வது நாளாக நீதிபதி விசாரணை

மதுரை, ஜூலை 3– திருப்புவனம் அஜித்குமார் மரணம் தொடர்பாக 2வது நாளாக நீதிபதி விசாரணை நடத்தினார். சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு வழக்கு தொடர்பாக குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்தார். தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு 5 போலீசார் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த 2 நீதிபதிகள் கொண்ட மதுரை ஐகோர்ட்டு அமர்வு, […]

Loading

செய்திகள்

சாமானியருக்கு அநீதி இழைக்கும் அறமற்ற துறையாக தமிழக காவல் துறை: விஜய் கண்டனம்

சென்னை, ஜூலை 1– சாமானியருக்கு அநீதி இழைக்கும் அறமற்ற துறையாக தமிழக காவல் துறை செயல்படுவதாக தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் கோவில் காவலாளி அஜித்குமார் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு விசாரணையில் தாக்கப்பட்டு மரணமடைந்த விவகாரத்தில் போலீசார் 5 பேர் கைது செய்யப்பட்டு, 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இதுகுறித்து விஜய் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். […]

Loading