செய்திகள்

IPL 2026: சஞ்சு சாம்சனை வாங்கிய சிஎஸ்கே – ஜடேஜா, சாம் கரண்

Makkal Kural Official

ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு; ஐந்து வீரர்கள் ரிலீஸ்

மும்பை:
ஐபிஎல் 2026 சீசனுக்கு முன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெரிய அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடமிருந்து கேப்டன் சஞ்சு சாம்சனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மாற்றாக, ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரண் இருவரையும் ராஜஸ்தான் அணிக்கு ஒப்படைத்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பை சிஎஸ்கே அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.

அணிகள் தக்கவைத்தல்–விடுவிப்பு பட்டியலை மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்பதால், பல அணிகள் தீவிரமாக பேச்சுவார்த்தைகள் நடத்திய நிலையில், சிஎஸ்கே மிகப் பெரிய மாற்றங்களுடன் முன்னேறியுள்ளது.

கான்வே–ரச்சின் ரவீந்திரா ரிலீஸ்

நியூசிலாந்து வீரர்கள் டெவான் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திராவை சிஎஸ்கே விடுவித்துள்ளது.

  • கான்வே – ₹6.25 கோடி
  • ரச்சின் – ₹4 கோடி

கடந்த சீசனில் ரச்சின் 191 ரன்களும், கான்வே 156 ரன்களும் மட்டுமே எடுத்ததால், இருவரும் ரிலீஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய வீரர்கள் ரிலீஸ்

ராகுல் திருப்பாதி, விஜய் சங்கர், தீபக் ஹூடா உள்ளிட்ட இந்திய வீரர்களும் அணியை விட்டு வெளியாகிறார்கள்.
ஓய்வு பெற்றுள்ள ஆர்.அஸ்வினை விடுவித்ததன் மூலம் சிஎஸ்கேக்குக் கூடுதலாக ₹9.75 கோடி கையிருப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.

மொத்த பர்ஸ்: 30+ கோடி

அனைத்து ரிலீஸ்களையும் சேர்த்து, மினி ஏலத்துக்கு சிஎஸ்கேக்குத் 30–31 கோடி ரூபாய் கையிருப்பு இருக்கும் என கணக்கிடப்படுகிறது.

யாரை டார்கெட் செய்கிறது சிஎஸ்கே?

ஜடேஜா வெளியேறியதால்,

  • புதிய சுழற் பந்துவீச்சு ஆல்ரவுண்டரைக்
  • நடுவரிசைக்கான ஒரு திறமையான வெளிநாட்டு வீரரை

வாங்குவதற்குத் திட்டமிடுகிறது.

அதில் க்ளென் மேக்ஸ்வெல், லியாம் லிவிங்ஸ்டோன் போன்ற வீரர்களை குறிவைக்கும் வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது.

சிஎஸ்கேவின் புதிய அமைப்பு பலம் பெருமளவு உயர்ந்ததாக மதிப்பிடப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *