கதைகள் சிறுகதை

சிறுகதை … புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் சாலை.. /சாலை 2 – ராஜா செல்லமுத்து

தேனாம்பேட்டை சிக்னலைத் தாண்டி எஸ் ஐ டி கல்லூரியை நோக்கிச் செல்லும் பாரதிதாசன் சாலையில் நின்று புலம்பிக் கொண்டிருந்தார் ஒரு பெரியவர். ‘ எழுத்தாளர்கள், கவிஞர்கள் இவங்களுக்கெல்லாம் வாழும் போதே யாரும் மரியாதை கொடுக்கிறது இல்லை. செத்த பிறகு மரியாதை கொடுக்குறாங்க .அதுவும் பழைய கவிஞர்கள இங்க யாரும் நினைவு வைக்க மாட்டாங்க ‘ என்று வருத்தப்பட்டுக் கொண்டே ஆழ்வார்பேட்டை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் பாரதிதாசன் சாலையில் நின்று புலம்பிக் கொண்டு இருந்தார் ஒரு பெரியவர். அவரைப் […]

Loading

கதைகள் சிறுகதை

அண்ணா சாலை..! சாலை 1- ராஜா செல்லமுத்து

ஆகஸ்ட் – 22 சென்னை நாள் கொண்டாட்டத்திற்காக சென்னை நகரமே விழாக் கோலம் பூண்டிருந்தது. ” மனுசங்களுக்குப் பிறந்த நாள் கொண்டாடுறது மாதிரி, நம்ம சென்னைக்கு இன்று பிறந்த நாள். நம்ம எல்லாரையும் தாய் மடியா தாங்கற சென்னைய நாம சீராட்டிப் பாராட்டி வாழ்த்தணும்.” என்று பேசிக் கொண்டிருந்தார்கள், விழாக் குழுவினர். தமிழரசன், அன்று காலையிலிருந்தே பரபரப்பாக இருந்தான். அவனின் முனைவர் பட்ட வாய் மொழித் தேர்வும் அன்று தான் நடக்க இருந்தது. ஐந்து ஆண்டுகள் கடுமையான […]

Loading

கதைகள் சிறுகதை

தொலைவிலிருந்து ஒரு துளி…

-: டிக்ரோஸ் :- விஞ்ஞானி மணி கொஞ்சம் தாமதமாகவே வந்தார். அவருடைய ஆழ்விளக்குக் கண்ணாடியோடு (அதாங்க magnifying glass), மெதுவாக செந்நிறமாக ஒளிர்ந்து கொண்டிருந்த அந்தப் பசுமை ஹால் வழியாக நுழைந்தார். “தண்ணீர் ” என்று மிதந்து வந்த கண்ணன் குரல் வரவேற்றது! கண்ணன் – ‘HydroNet Corporation’ என்ற பன்னாட்டு நீர் நிறுவனத்தின் தலைவர். ஒரு தெளிவான கண்ணாடிப் பொத்தானை விரலால் தட்டினார் மணி. “தட தட்!” தொட்டியின் நடுவில் உள்ள சிறிய குழியிலிருந்து ஒரு […]

Loading

கதைகள் சிறுகதை விழாக்கள்

நம்ம ஊருத் திருவிழா…!; திருவிழா- 37 ராஜா செல்லமுத்து

நடைப் பயிற்சிக்கும், சிறுவர்கள் விளையாடுவதற்கும் மட்டுமே பயன்படுத்தி வந்த அந்தப் பூங்கா. அன்று, விழாக் கோலம் பூண்டிருந்தது. கண்ணைக் கவரும் வகையில் ஆங்காங்கே மின்னிக் கொண்டிருந்தன, வண்ண வண்ண விளக்குகள். காற்றுக்குப் படபடத்துக் கொண்டிருந்தன காகிதத் தோரணங்கள். நம்ம ஊருத் திருவிழாவைப் பார்ப்பதற்காகவே கூட்டங் கூட்டமாய் வந்து கொண்டிருந்தார்கள், மக்கள். ” இன்னைக்கு என்ன மாதிரியான நிகழ்ச்சிகள் நடக்கப் போகுது “ ” மானாட்டம், மயிலாட்டம், குயிலாட்டம், ஒயிலாட்டம், ராஜா ராணி, கர்ண மகராசா கதை இப்படி […]

Loading

கதைகள் சிறுகதை

சிறுகதை – வடக்கு வாசலா? தெற்கு வாசலா? – ஆர். வசந்தா

ராம்குமார், அவன் மனைவி உமாவும் மனமொத்த தம்பதியினராகத்தான் வாழ்ந்து வந்தார்கள். திருமணமாகி 6 மாதத்திலேயே ராம்குமாருக்கு ஆபீஸ் விஷயமாக வெளிநாடு செல்ல நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அவனும் கிளம்பிவிட்டான். உமா தனியாகத்தான் இருந்தாள். அவள் சிநேகிதகள் சிலர், நாங்கள் கர்நாடகாவை சுற்றிப் பார்க்கப் போகிறோம். நீயும் வருகிறாயா? என்று உமாவைக் கேட்டார்கள். உமாவும் சரி என்று சொல்லி விட்டாள். தனியார் பஸ் ஒன்றில் சென்றார்கள். திடீரென பெரும் மழை பெய்தது. ஒரு பெரிய பாலம் ஒன்று குறுக்கிட்டது. அடியில் […]

Loading

கதைகள் சிறுகதை விழாக்கள்

பொங்கல் விழா… ராஜா செல்லமுத்து

ஐந்து நாட்கள் நடக்கும் பொங்கல் திருவிழாவிற்காக வெளியூரிலிருந்த ஆட்கள் எல்லாம் கிராமத்தில் வந்து குவிந்தார்கள். தொடர் விடுமுறை என்பதால் எல்லோருக்கும் கொண்டாட்டம். உற்சாகம். காப்புக்கட்டில் ஆரம்பிக்கும் பொங்கல், காணும் பொங்கல் முடிவடையும் வரை அந்த ஊரே சந்தோசமாக இருக்கும். கட்டுக்கட்டாகக் கரும்புகள், வீட்டுக்கு வீடு பொங்கல் என்று யார் எந்த வீட்டிற்குள் நுழைந்தாலும் விருந்து போல சாப்பிட்டு விட்டு வரலாம் என்ற விருந்தோம்பலில் பொங்கல் விழா வெகு சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடானது. ஐந்து நாட்களுக்கும் ஐந்து புது […]

Loading

கதைகள் சிறுகதை

கனவுகள் சில நிஜங்கள்… வத்சலா சிவசாமி

பார்த்தீபனும் பிரபுவும் ஒரே அறையில் தான் தங்கியிருந்தார்கள். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள அரசு ஆண்கள் பள்ளியில் இருவரும் ஒன்றாக படித்தவர்கள். ஆரம்ப கல்வியில் இருந்தே இருவரும் சேர்ந்தே படித்தார்கள். அவர்கள் படித்த அந்தப் பள்ளி சரித்திரப் புகழ் வாய்ந்தது. தமிழ் மீடியத்தில்தான் இருவரும் படித்தார்கள். பள்ளி இறுதித் தேர்வுக்குப் பின் சென்னையில் உள்ள கல்லூரியில் படிக்கும் போது பல மாணவர்களோடு சேர்ந்தே ஒரு அறையில் தங்கியிருந்தார்கள். பி.எஸ்ஸியில் படிக்கும்போது கணினியை முதலாம் பாடமாக எடுத்திருந்தார்கள். தான் […]

Loading

கதைகள் சிறுகதை

கனவு மெய்ப்பட வேண்டும் – சம்பத்

தனது தோழிகள் மேல் படிப்பிற்காக அவரவர் விரும்பிய துறைகளில் சேர்ந்தார்கள், மாலா தனது தந்தை மோகனிடம் தான் ஆட்டிசிம் துறையில் படிக்க விரும்புவதாக் கூற, உனது தோழிகள் போன்று நீயும் படிக்கலாமே என்றார், வீட்டில் குணசீலன் ஆட்டிசத்தினால் அவதிப் படுகிறானே, அவனை குணப் படுத்தவா இந்தத் துறையை நீ விரும்புகிறாய் என்றார், உனது வாழ்க்கையை மேம்படுத்தும் துறையை எடுத்தால் என்ன என்று கூற மாலாவின் பிடிவாதம் இறுதியில் வென்றது, மிகவும் ஆர்வமாக படித்த மாலாவை ஆசிரியர் மருத்துவர் […]

Loading

கதைகள் சிறுகதை

நாய் பாசம் ! – டிக்ரோஸ்

அன்றும் காலை எப்போதும் போல் ராகவி கோடம்பாக்கம் மின் ரயில் நிலைய வாசல் நடைபாதையில் நளினமாக தன் பலூனாய் விரிந்த ஆடையை தன் நளினமான கைகளால் அமுக்கி விட்டபடி அமர்ந்த நொடியில் நடனதாரகைகளே மெய்மறந்து ரசிக்கும் வசீகரத் துள்ளலுடன் அவள் அருகே தத்தித் தாவி வந்தது அந்த நொ‘‘ன்’’டி நாய், ஆம் சற்றே குறைபாடு என்பதால் இந்த சின்ன ‘ன ‘ ! அந்த வீதியில் தினமும் இரட்டிப்பாகிக் கொண்டு இருக்கும் வாகன நெரிசல் சூழலில் ஸ்கூட்டர்கள், […]

Loading

கதைகள் சிறுகதை

சிறுகதை … இனிய பிறந்தநாள் … ஓட்டேரி செல்வ குமார் …

இன்று வசுந்தராவுக்கு ஐந்தாவது பிறந்தநாள் இரவு மணி எட்டு இருக்கும் பிறந்த நாளுக்காக கேக் வெட்டி கொண்டாட வேண்டும் என்று வீட்டில் உள்ளவர்கள் முடிவு செய்து கிருஷ் பேக்கரியில் கேக் ஆர்டர் கொடுத்துவிட்டு வந்து விட்டார்கள் வீட்டை சுற்றிலும் புதிய அலங்காரமாக பொருள்களும் “ஹாப்பி பர்த்டே” என்கின்ற வாசகர்களும் ஆங்காங்கே எழுதப்பட்டு ஒட்டப்பட்டிருந்தது அக்கம் பக்கத்து வீட்டு சிறுவர்களும் சிறுமிகளும் வச்சுவின் அண்ணன் பவன் நண்பர்களும் அங்கே கூடிவிட்டனர் வச்சு தன் பங்கிற்கு பிறந்தநாள் ஆடை அணிந்து […]

Loading