சிறுகதை விழாக்கள்

நடுகல் விழா…! விழா 22…….. ராஜா செல்லமுத்து

டகு…. டகு… டொம்.. டொம்..டகு…. டகு… டொம்.. டொம்.. என்ற உடுக்கைச் சத்தம் அந்தப் பகுதியைப் பயமுறுத்திக் கொண்டிருந்தது. தன் வலது கையில் உடுக்கையைப் பிடித்து, ஈ…. ஈ… ….ஈ… என்று கரை விழுந்த தன் பற்களை நறநறவெனக் கடித்தபடியே ஒரு விதமான கோபத்துடனும் ஆக்ரோஷத்துடனும் உடுக்கையை அடித்துக் கொண்டிருந்தார், ஒரு பெரியவர். அந்தச் சத்தத்தைக் கேட்ட ஆட்களுக்கு நாடி நரம்பெல்லாம் புடைத்துக் கொண்டு வந்தது. இன்னதென்று சொல்ல முடியாத சோகத்தில் தன் இரு கைகளையும் எடுத்துக் […]

Loading

சிறுகதை விழாக்கள்

இசை விழா…! விழா 21

வாசலின் வெளியே ஆடம்பரமான அலங்காரத்தில் பந்தல், வாழைமரம், சீரியல் பல்புகள் என்று அமர்க்களமாகப் போடப்பட்டிருந்தது. ஒரு மாதத்திற்கான இசை விழாவின் பெயர் பட்டியலை ஒட்டியிருந்தார்கள் அத்தனையும் வாயில் நுழையாத ராகங்களின் பெயர்களை எழுதி வைத்திருந்தார்கள். பாடும் ஆள், பாடுகிறவர்களின் பெயர்கள் என்று அரங்கத்தின் முன்னால் இருந்ததைப் படித்துப் பார்த்து ” எந்த நிகழ்ச்சி நன்றாக இருக்கும் ?” என்று யோசித்துக் கொண்டிருந்தார்கள் அன்று விழாவிற்கு வந்தவர்கள் . அன்று, ஐந்தாவது நாள். கர்நாடக சங்கீதத்தில் கரை கண்ட […]

Loading

சிறுகதை விழாக்கள்

சிறுகதை … கனகாபிஷேக விழா..! விழா 20 …. ராஜா செல்லமுத்து

மயிலாடும்பாறை கிராமத்தில் அப்படியொரு கூட்டத்தை இதுவரை யாரும் கண்டதில்லை. ஊரின் தொடக்கத்தில் இருந்து ஊர் முடியும் வரை கூட்டங் கூட்டமாய் வந்து கொண்டிருந்தார்கள், ஆட்கள் திரும்பிய பக்கமெல்லாம் வாழை மரங்கள், தோரணங்கள், குழாய் ரேடியோவில் பாடல்கள் என்று கிராமமே சந்தோசத்தில் நிறைந்திருந்தது. உயர்தரக் கார்கள் முதல் உள்ளூர் கார்கள் வரை வந்து கொண்டிருந்தன. அந்த ஊருக்குப் புதிதாக வந்த பரமனுக்கு எதுவும் விளங்கவில்லை. ” என்ன இது? ஊரே திருவிழாக் கோலமா இருக்கு? சாமி கும்பிடு எதுவும் […]

Loading

சிறுகதை விழாக்கள்

சிறுகதை … குட முழக்கு விழா…! விழா 19 …. ராஜா செல்லமுத்து

வானம் சாட்சியாக, பூமி சாட்சியாக அத்தனை தெய்வங்களின் சாட்சியாக நடக்கத் தயாராக இருந்தது, கடற்கரையில் அமைந்த திருக்கோயிலின் குடமுழுக்குத் திருவிழா. கண்ணுக்கெட்டிய தூரம் வரை, பெருங்கடல் சூழ்ந்திருந்தாலும் புனித நதிகளில் இருந்து தீர்த்தங்கள் கொண்டு வந்திருந்தனர், புண்ணியத் தலங்களிலிருந்து வந்த ஆன்மீகவாதிகள். கோயில் முழுவதும் பந்தல் போடப்பட்டு, ஆங்காங்கே சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தனர், ஆன்மீகச் சொற்பொழிவாளர்கள் , அவர்களின் பக்திப் பேச்சில் மயங்கிக் கிடந்தனர் பக்தர்கள் . ஆன்மீகம், சொற்பொழிவு இது எதையும் கவனிக்காமல் தங்கள் வியாபாரம் மட்டுமே […]

Loading

சிறுகதை விழாக்கள்

சிறுகதை … தள்ளுபடி விழா..! விழா 18 …. ராஜா செல்லமுத்து

ஆடி மாதம் ஆனாலே தெருத் தெருவுக்கு தள்ளுபடி விற்பனையை ஆரம்பித்து விடுவார்கள் வியாபாரிகள். தக்காளி முதல் தங்கம் வரை அத்தனையும் இந்தத் தள்ளுபடியில் அடங்கும். ” என்ன புவனா ,இந்த வருசம் ஆடித்தள்ளுபடியில துணிமணிகள் நிறைய வாங்கலாமா ? “ஆமா கெளசல்யா, எந்த வருசமும் இல்லாத அளவுக்கு இந்த வருசம் ஆடித்தள்ளுபடியில அதிகமான ஜவுளிகள் வர்றதா சொல்றாங்க. “ “ம்…ஆடித் தள்ளுபடி விற்பனைன்னு விளம்பரம் போட்ட முதல் தேதியிலேயே நாம போனம்னா, நல்ல நல்ல ஜவுளிகள அள்ளிட்டு […]

Loading

சிறுகதை விழாக்கள்

சிறுகதை … பிறந்த நாள் விழா ….! விழா 17 …. ராஜா செல்லமுத்து

அங்கிருந்த மரங்களில் எல்லாம் கலர் கலராய் பலூன்கள் கட்டப்பட்டிருந்தன. வண்ண வண்ணக் காகிதங்கள் தோரணங்களாய் தொங்கிக் கொண்டிருந்தன. “ஹேப்பி பர்த்டே டூ யூ” என்ற சத்தம் அந்த வளாகம் முழுவதும் ஒலித்துக் கொண்டிருந்தது. அன்று தாரணிக்குப் பிறந்த நாள் மிகவும் சந்தோஷத்தில் இருந்தாள். அத்தனை அழகாய் புத்தாடை உடுத்தியிருந்தாள். கழுத்தை நிறைக்கும் தங்கச் செயின்கள். விரல்களில் மோதிரம் என்று ஆடம்பரத்தின் உச்சியில் இருந்த தாரணிக்கு பிள்ளைகள் எல்லாம் ஹேப்பி பர்த்டே பாடிக்கொண்டிருந்தார்கள். அருகில் தாரணியின் அப்பா நிலவழகன். […]

Loading

சிறுகதை விழாக்கள்

கோடை விழா… ! விழா 16 … ராஜா செல்லமுத்து

வெயிலை மட்டுமே அனுப்பிக் கொண்டிருந்த வானம், இப்போது லேசாகக் குளிர ஆரம்பித்திருந்தது. ஆங்காங்கே சில தூறல்களும் சாரல்களும் பூமியை நனைத்துக் கொண்டிருந்தது, மேகம் . வெப்பத்தைத் தணிப்பதற்கும் மகிழ்ச்சியை மனதில் விதைப்பதற்கும் மக்கள் கோடைத் திருவிழாவை நோக்கி படையெடுத்தார்கள். ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி என்று மலைப் பிரதேசங்களில் கொண்டாடப்படும் கோடை விழாக்களில் அடைக்கலமாக ஓடினார்கள். சுதர்சனம் ஊட்டியை தேர்ந்தெடுத்தார். மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் ஊட்டிக்குச் சென்றால் கோடை விழாவைப் பார்த்தது போல இருக்கும். அதோடு […]

Loading

கதைகள் சிறுகதை விழாக்கள்

சிறுகதை … பிரிவு உபச்சார விழா….! … விழா 15 ராஜா செல்லமுத்து

அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரிவு உபச்சார விழா வெகுவாகக் கொண்டாட ஏற்பாடானது. ஆட்சியர் அலுவலகம் முழுவதும் பலூன், வண்ணக் காகிதங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. ” இன்னைக்கு யாருக்குப் பிரிவு உபச்சார விழா ? ” என்று ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த ஒருவர் கேட்க ” தெரியலையே? யாராவது உயர் அதிகாரி ரிடையர் ஆவாங்க போல, அதான் அலுவலகமே, அலங்காரம் செய்யப்பட்டிருக்கு ” என்று அவரும் பதில் சொல்ல, அலுவலகம் மொத்தமும் அன்று களை கட்டியிருந்தது. அலுவலகத்தின் பிரதான […]

Loading

கதைகள் சிறுகதை செய்திகள் விழாக்கள்

தீபங்களின் திருவிழா..! – விழா – 14 ராஜா செல்லமுத்து

அன்று, தீபாவளி முதல் நாள் இரவு.பட்… பட்… பட படவென வெடிக்கும் வெடிச் சத்தங்கள். சர் சர்ரென வானில் பறந்து வண்ண வெளிச்சங்களை வானவில்லாய் வரையும் பூந்தொட்டிகள் என்று வெளிச்ச வெடிகளால் நிறைந்திருந்தது, இருண்ட வானம். திரும்பிய திசையெங்கும் வெடிச் சத்தம். வண்ணங்களை அப்பி வானில் வரைந்து சென்றது ஒளிக் கோடுகள். இரவு முழுவதும் தெருவுக்குத் தெரு தீபங்களின் திருவிழாவாக இருந்தது ,அந்தத் தீபாவளி முன் இரவு.லட்சம் வாலா பட்டாசுகள் முதல் பாம்பு மாத்திரைகள் வரை தீபாவளிக்கு […]

Loading

சிறுகதை விழாக்கள்

சிறுகதை … அறுவடைத் திருவிழா…! … விழா 13 ராஜா செல்லமுத்து

செங்கமங்கலாக இருந்தது, வானம்.படுக்கையில் இருந்து எழுந்த மூக்கம்மாள், வீட்டின் கடை மடையில் இருந்த பானையில் தண்ணீரை எடுத்து வாயைக் கொப்பளித்தாள். வெற்றிலை போட்டுப் போட்டுக் கரையாய் போன தன் பற்களை எவ்வளவு நாள் பல் தேய்த்தும் அந்தச் சிவப்புக் கறை அவள் பற்களை விட்டு தீர்ந்தபாடில்லை என்ற வருத்தத்தில் வீட்டு முற்றத்தில் வளர்ந்திருந்த மரத்தில் தொங்கவிடப்பட்டிருந்த எரிந்த வறட்டிச் சாம்பலை தன் இடது கையில் கொட்டி, வலது ஆட்காட்டி விரலில் தொட்டு விருட்டு, விருட்டு என்று பல் […]

Loading