செய்திகள் விழாக்கள்

இந்தோ–ரஷ்ய பண்பாட்டு நட்பை கொண்டாடும் ரஷ்ய நடன விழா 2026

சென்னை, ஜன. 22: ரஷ்ய நடன விழா 2026 ஜனவரி 22 முதல் பிப்ரவரி 9, 2026 வரை தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது. நடனத்தின் உலகளாவிய மொழி மூலம் இந்தியா மற்றும் ரஷ்ய கூட்டமைப்புக்கிடையிலான நீடித்த பண்பாட்டு நட்பை உற்சாகமாகக் கொண்டாடும் இந்த விழா, மக்களுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்துவதிலும், இரு நாடுகளுக்கிடையிலான வரலாற்று மற்றும் மூலோபாய கூட்டாண்மையை மேலும் உறுதிப்படுத்துவதிலும் கலைப் பரிமாற்றத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது. சென்னையில் உள்ள ரஷ்ய கூட்டமைப்பின் துணைத் தூதரகத்தின் பண்பாட்டு […]

Loading

செய்திகள் விழாக்கள்

திருவையாறில் தியாகராஜர் ஆராதனை விழா: ஐகோர்ட் நீதிபதி சுரேஷ்குமார் துவக்கினார்

தஞ்சாவூர், ஜன. 4: திரு​வை​யாறில் தியாக​ராஜ சுவாமிகளின் 179வது ஆராதனை விழாவினை சென்னை ஐகோர்ட் நீதிபதி சுரேஷ்குமார் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் சுவாமிகள் தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி கரையில் முக்தி அடைந்தார். இங்கு அவரது சமாதி அமைந்துள்ளது. ஆண்டுதோறும் பகுலபஞ்சமி தினத்தில் தியாகராஜசுவாமிக்கு ஆராதனை விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தியாகராஜர் சுவாமிகளின் 179-வது ஆராதனை விழா நேற்று தொடங்கியது. இதன் தொடக்க விழாவுக்கு தியாகர […]

Loading

சிறுகதை விழாக்கள்

சிறுகதை .. கூவாகம் திருவிழா …!விழா 39 …. ராஜா செல்லமுத்து

“உங்க வீட்ல அமுதன் ரொம்ப கெட்டிக்காரப் பையன். நல்லா படிக்கிறான். நல்லா பாடுறான். நல்லா ஆடுறான். அவனுக்கு இருக்கக்கூடிய திறமை உங்க வீட்ல யாருக்குமே இல்லை” என்றுஅமுதனைப் பற்றிப் பெருமையாகப் பேசிக் கொண்டிருந்தார், ஆண்டவர். “நீங்க சொல்றது சரிதான். எங்க வீட்டில் இருக்கிற மத்த பிள்ளைகளை விட அமுதன் கொஞ்சம் கெட்டிக்காரப் பையன்தான். அவனுக்கு சின்ன வயசுல இருந்தே படிப்புமேல, டான்ஸ் மேல, அலாதி விருப்பம். நாங்களும் அவனுக்கு எந்த தடையும் சொல்றது இல்ல. அவன் மனசுக்கு […]

Loading

சிறுகதை விழாக்கள்

சிறுகதை .. காத்தாடித் திருவிழா..!விழா 38 …. ராஜா செல்லமுத்து

நீலவான் வெளியில் நீண்ட வால் முளைத்த விண்மீன்களாய் பறந்து கொண்டிருந்தன, வண்ண வண்ணக் காத்தாடிகள். பறக்கும் அத்தனை வண்ணங்களிலும் சுரேந்திரனின் நீல வண்ணக் காத்தாடி மட்டும் வானிலேயே நிலை கொண்டிருந்தது. “அந்த நீல நிறக் காத்தாடி தான் ரொம்ப தூரத்தில பறந்திட்டு இருக்கு. நிச்சயமா அதுதான் ஜெயிக்குமுன்னு நினைக்கிறேன்” என்று ஒரு பார்வையாளர் சொல்ல “இல்ல, அந்தச் சிவப்புக் கலர் காத்தாடியப் பாருங்க . அதுவும் ரொம்ப தூரத்தில பறந்திட்டுத் தான இருக்கு.” “இல்ல, அத விட […]

Loading

கதைகள் சிறுகதை விழாக்கள்

நம்ம ஊருத் திருவிழா…!; திருவிழா- 37 ராஜா செல்லமுத்து

நடைப் பயிற்சிக்கும், சிறுவர்கள் விளையாடுவதற்கும் மட்டுமே பயன்படுத்தி வந்த அந்தப் பூங்கா. அன்று, விழாக் கோலம் பூண்டிருந்தது. கண்ணைக் கவரும் வகையில் ஆங்காங்கே மின்னிக் கொண்டிருந்தன, வண்ண வண்ண விளக்குகள். காற்றுக்குப் படபடத்துக் கொண்டிருந்தன காகிதத் தோரணங்கள். நம்ம ஊருத் திருவிழாவைப் பார்ப்பதற்காகவே கூட்டங் கூட்டமாய் வந்து கொண்டிருந்தார்கள், மக்கள். ” இன்னைக்கு என்ன மாதிரியான நிகழ்ச்சிகள் நடக்கப் போகுது “ ” மானாட்டம், மயிலாட்டம், குயிலாட்டம், ஒயிலாட்டம், ராஜா ராணி, கர்ண மகராசா கதை இப்படி […]

Loading

சிறுகதை விழாக்கள்

சிறுகதை … தீ மிதித் திருவிழா ….! விழா 36 …. ராஜா செல்லமுத்து

சொய்ங்… சொய்ங்…. சொய்ங்.. என்ற சத்தத்தோடு பிரதான சாலையில் வந்து கொண்டிருந்தது ஒரு ஆம்புலன்ஸ். “கொஞ்சம் ஆம்புலன்ஸ்க்கு வழி விடுங்க .கொஞ்சம் ஆம்புலன்ஸ் வழி விடுங்க “ என்று தார்ச்சாலையில் வந்து கொண்டிருந்த வாகனங்களை எல்லாம் ஓரம் ஒதுக்கினார்கள், போக்குவரத்துக் காவலர்கள். வேகமாகச் சென்று கொண்டிருந்த வாகனங்கள் எல்லாம் அந்த ஆம்புலன்ஸ்க்கு வழி விட்டன. ” இந்த ஆம்புலன்ஸ்ல யாரு போறதோ? பாவம்.அவங்களுக்கு எதுவும் நடந்திரக்கூடாது “ என்று கையெடுத்துக் கும்பிட்டாள், சாலையில் நின்றிருந்த ஒரு பெண். […]

Loading

சிறுகதை விழாக்கள்

சிறுகதை … கொடிச்சீலைத் திருவிழா … ! திருவிழா 35…. ராஜா செல்லமுத்து

புதுவருடத்திற்கு முதல் நாள் இரவு, ஊரே திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. திரும்பும் திசையெங்கும் தீபாவளியைத் திரும்பக் கொண்டு வந்தது போன்று பட்டாசு, மத்தாப்புகள் வெடித்துக் கொண்டாடினர், ஊர் மக்கள் ” ஹேப்பி நியூ இயர்..!” ” இனிய புத்தண்டு நல் வாழ்த்துகள் “ என்று கண்ணில் படுபவர்களுக்கு எல்லாம் வாழ்த்துச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அந்த ஊரில் நான்கு தெருவையும் இணைக்கும் இடத்திலிருந்தது ஒரு தேவாலயம். ஜாதி, மதம், இனம் அத்தனையும் கடந்து அந்தத் தேவாலயத்திற்குச் சென்று வருவார்கள் […]

Loading

சிறுகதை விழாக்கள்

சிறுகதை …ஒட்டகத் திருவிழா..! விழா 34 …. ராஜா செல்லமுத்து

சுழன்று சுழன்று அடித்துக் கொண்டிருந்தது, சூறைக்காற்று. கண்ணுக்கெட்டிய தூரம் வரை மணல் வெளி. மருந்துக்குக் கூட ஈரமில்லாத பாலைவனம் போன்ற பகுதி. அசையும் சிறு சிறு மலைகளாக அசைந்து அசைந்து வந்து கொண்டிருந்தன, பாலைவனக் கப்பலான ஒட்டகங்கள். தன் நீண்ட கழுத்தை அப்படியும் இப்படியுமாய் நீட்டி நீட்டி நடந்து வந்து கொண்டிருந்த ஒட்டகங்களை ஓரமாக ஓட்டிப் போய்க் கொண்டிருந்தான், வீர். நீண்ட கால் குளம்படிகள் மண்வெளியில் பதியப் பதிய நடந்து வந்த ஒட்டங்களை “த்தே …. த்தே..” […]

Loading

சிறுகதை விழாக்கள்

சிறுகதை … சுதந்திர தின விழா..!விழா 33 … ராஜா செல்லமுத்து

பரபரப்பாக இருந்தது புழுதி பறக்கும் அந்தத் தெரு. ஓட்டமும் நடையுமாக இருந்தார்கள் அந்தத் தெருமக்கள். ‘ஊ’ என்று நாய் ஊளையிடும் சத்தம் அந்தத் தெருவில் ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்கப்போகிறது என்பதைக் கட்டியம் கூறியது. அந்த ஊர் மக்கள் எல்லாம் கன்னியப்பன் வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள் . ஏற்கனவே வீட்டின் முன்னே நிறைய ஆட்கள் கூடியிருந்தார்கள். வந்திருந்தவர்களுக்கெல்லாம் காபி கொடுத்துக் கொண்டிருந்தாள் ஒரு பெண். ” அம்மா இங்க ரெண்டு காப்பிய குடும்மா. அங்க ரெண்டு […]

Loading

சிறுகதை விழாக்கள்

சிறுகதை … தேர்த் திருவிழா ….!விழா 32 …. ராஜா செல்லமுத்து

அந்த மருத்துவமனை முழுவதும் அழுகைச் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது.யாருக்கும் யாரும் ஆறுதல் சொல்ல முடியாத அவல நிலையில் இருந்தனர், மக்கள். ” இப்படி நடந்திருக்கக் கூடாது. “ “நடந்திருச்சு” “என்ன செய்ய?” ” இது சாமி குத்தமா ? இல்ல மனுச குத்தமான்னு எதுவும் தெரியலையே? “ “ஏதோ தவறு நடந்து இருக்கிறதுனால தான் இந்த மாதிரி எல்லாம் நடந்திருக்கு. இல்லன்னா இப்படி நடந்திருக்காது” என்று மருத்துவமனையில் முழுவதும் பேசிக் கொண்டிருந்தார்கள். ” ஊர் மக்கள் […]

Loading