செய்திகள்

கோவையில் கல்லுாரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: 3 பேருக்கு போலீஸ் வலை

கோவை, நவ. 3– கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். கோவை விமான நிலையத்தின் பின்புறம், நேற்றிரவு தனது ஆண் நண்பருடன் கல்லூரி மாணவி பேசி கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 3 பேர் மாணவியை கடத்த முயற்சி செய்தனர். இதையடுத்து மாணவியின் ஆண் நண்பர், 3 பேரிடம் இருந்து காப்பாற்ற போராடி உள்ளார். 3 பேர் […]

Loading

செய்திகள்

தெருநாய்கள் விவகாரத்தில் 7–ந்தேதி தீர்ப்பு: சுப்ரீம் கோர்ட்

புதுடெல்லி, நவ.3– தெரு நாய்கள் விவகாரம் தொடர்பான வழக்கில் 7ம் தேதி கூடுதலாக வழிகாட்டு நெறிமுறைகளுடன் தீர்ப்பு வழங்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்தனர். தெரு நாய் தொல்லை விவகாரத்தை சுப்ரீம் கோர்ட் தானாக முன்வந்து வழக்காக பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதில் தெரு நாய்களை பிடித்து கருத்தடை செய்து பிடித்த இடத்திலேயே விடுவிக்க கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டு இருந்தது. மேலும் இந்த விவகாரத்தில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் இணக்க […]

Loading

செய்திகள்

ஜனவரி மாதம் பயன்பாட்டுக்கு வரும் வேளச்சேரி-–பரங்கிமலை பறக்கும் ரெயில் சேவை

சென்னை, நவ.3-– வேளச்சேரி–-பரங்கிமலை பறக்கும் ரெயில் சேவை பணிகள் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. வருகிற ஜனவரி மாதம் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டு உள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னையில் கடற்கரை–-வேளச்சேரி இடையே பறக்கும் ரெயில் சேவை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த சேவையை பரங்கிமலை வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது. வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரை நீட்டித்தால் புழுதிவாக்கம், வேளச்சேரி, ஆதம்பாக்கம் ஆகிய பகுதி மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கருதி இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. 5 […]

Loading

செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரிப்பு

சென்னை, நவ.3– சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ஒரு சவரன் ரூ.90,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச நிலவரங்களால் நம் நாட்டில் தங்கம் விலையில் கிடுகிடுவென உயர்ந்துக் கொண்டே செல்கிறது. சென்னையில் நேற்று முன் தினம் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.90,480க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஞாயிறு என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லை. வார தொடக்க முதல்நாளான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ஒரு […]

Loading

செய்திகள்

தெலுங்கானாவில் அரசுப் பேருந்து– லாரி மோதல்: 24 பேர் பலி

பிரதமர் மோடி ரூ.2 லட்சம் நிதியுதவி ஐதராபாத், நவ.3– தெலுங்கானாவில் அரசுப்பேருந்தும் லாரியும் மோதியதில் 3 மாத பெண் குழந்தை உட்பட 24 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம், தண்டூரிலிருந்து ஐதராபாத் நோக்கி 70 பயணிகளுடன் அரசுப் பேருந்து இன்று அதிகாலை காலை புறப்பட்டது. ரங்காரெட்டி மாவட்டம் மிரியால குடா அருகே ஐதராபாத் – பிஜாபூர் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து வந்துகொண்டிருந்தபோது டிப்பர் லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் லாரி […]

Loading

செய்திகள்

விண்ணில் பாய்ந்த ‘பாகுபலி’ ராக்கெட்: இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை

ஸ்ரீஹரிகோட்டா, நவ.3- 4,400 கிலோ எடையுள்ள செயற்கைக்கோளுடன் ‘பாகுபலி’ ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இந்த செயற்கைக்கோள் தகவல் தொடர்பு உள்கட்டமைப்பை வலுப்படுத்த உதவும். தகவல்தொடர்பு துறையில் இந்தியாவை தன்னிறைவு பெறச் செய்வதற்காக ரூ.1,600 கோடி மதிப்பில் அதிக எடை கொண்ட சி.எம்.எஸ்-03 என்ற முதல் செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்தது. 4 ஆயிரத்து 410 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், விண்ணில் செலுத்துவதற்காக தயாரிக்கப்பட்ட ‘பாகுபலி’ ராக்கெட் என்று கூறப்படும் ‘எல்.வி.எம்.3-எம்5’ ராக்கெட்டில் பொருத்தப்பட்டது. இதனையடுத்து […]

Loading

செய்திகள்

மெக்சிகோ சூப்பர் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து: 23 பேர் பலி

ஹெர்மோசில், நவ. 2– மெக்சிகோவில் சூப்பர் மார்க்கெட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 23 பேர் பலியாகினர். வடமேற்கு மெக்சிகோவில் சோனோரா மாகாண தலைநகரான ஹெர்மோசில்லோவில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் நேற்று நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் குழந்தைகள் உள்பட 23 பேர் பலியாகினர். மேலும் 11 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவத்து மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். புகையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலர் பலியானதாகக் கூறப்படுகிறது. பழுதடைந்த மின்மாற்றி வெடித்ததில் தீ விபத்து […]

Loading

செய்திகள்

மகளிர் உலக கோப்பை இறுதிப் போட்டி: இந்தியா – தென் ஆப்பிரிக்கா இன்று மோதல்

நவிமும்பை, நவ. 2– மகளிர் உலக கோப்பை இறுதிப் போட்டியில் இன்று இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. மழை குறுக்கீட்டால் ஆட்டம் நாளை ஒத்திவைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் கடந்த செப்டம்பர் 30-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் சுற்று முடிவில் இலங்கை, நியூசிலாந்து, வங்காளதேசம், பாகிஸ்தான் அணிகள் 5 முதல் 8 இடங்களை […]

Loading

செய்திகள்

கரூரில் சி.பி.ஐ. அதிகாரிகள் 3வது நாளாக விசாரணை

10 வணிகர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் கரூர், நவ. 3– கரூரில் சி.பி.ஐ. அதிகாரிகள் 3வது நாளாக தொடர் விசாரணை நடத்தினர். கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக ஐ.பி.எஸ். அதிகாரி பிரவீன்குமார் தலைமையிலான சி.பி.ஐ. அதிகாரிகள் கரூர் தாந்தோணிமலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் தங்கி விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் நேற்று முன்தினம் இந்த வழக்கு தொடர்பாக வீடியோகிராபர் ராஜசேகரன் உள்பட 4 பேரிடம் விசாரணை நடத்தினர். மேலும் கூட்ட நெரிசல் சம்பவம் நடைபெற்ற […]

Loading

செய்திகள்

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: 7–ந் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை, நவ. 2– வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தெற்கு மியான்மர் கடலோர பகுதிகள் மற்றும் அதையொட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரண மாக, மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி […]

Loading