செய்திகள்

நள்ளிரவில் பைக் ரேஸ்: கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் உயிரிழப்பு

சென்னை, நவ. 6– சென்னையில் நள்ளிரவு பைக் ரேஸின்போது வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்ட சங்கிலித் தொடர் விபத்தில், ரேஸ் பைக் ஓட்டிச் சென்ற கல்லூரி மாணவன் உள்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராயப்பேட்டை பேகம் சாகிப் சாலையை சேர்ந்த 19 வயதான கல்லூரி மாணவர் சுகைல் மற்றும் செல்போன் கடை ஊழியர் சோயல் ஆகியோர் நேற்றிரவு ராயப்பேட்டை பீட்டர்ஸ் மேம்பாலத்தில் பைக் ரேஸில் ஈடுபட்டுள்ளனர். ராயப்பேட்டையிலிருந்து அண்ணா சாலை நோக்கி […]

Loading

செய்திகள்

தங்கம் விலை மீண்டும் உயர்வு: சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு

சென்னை, நவ.6– சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.90,000-க்கு விற்பனையாகிறது. கடந்த 2 நாட்களாக தங்கம் விலை குறைந்த நிலையில் இன்று உயர்வை சந்தித்து உள்ளது. சர்வதேச நிலவரங்களால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்கம் விலை ரூ.98 ஆயிரத்தை தொட்டது. அதன்பின்னர் இறக்கத்தை கண்டது. இந்த நிலையில் சென்னையில் தங்கம் விலை கடந்த 4–ந்தேதி சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.90,000-க்கு விற்பனையானது. தொடர்ந்து […]

Loading

செய்திகள்

2026 ஐபிஎல் போட்டிகளில் தோனி விளையாடுவார்:

சென்னை சூப்பர் கிங்ஸ் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் அறிவிப்பு சென்னை, நவ. 6– ஐபிஎல் 2026 தொடரில் மகேந்திர சிங் தோனி விளையாடுவார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் அறிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றாலும் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார். சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருந்த தோனி, அந்த பொறுப்பை இளம் வீரர் ருதுராஜ் […]

Loading

செய்திகள்

மண்ணடியில் மெத்தம்பெட்டமைன் பேதைப்பொருள்:

2 பெண்கள் உள்பட 8 பேர் கைது சென்னை, நவ. 6– மண்ணடி பகுதியில் மெத்தம்பெட்டமைன் பேதைப்பொருள் வைத்திருந்த 2 பெண்கள் உட்பட 8 நபர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின்பேரில் போதை பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் எஸ்பிளனேடு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் ஒருங்கிணைந்து மண்ணடி, மெட்ரோ இரயில் நிலையம் அருகே கண்காணித்தபோது, அங்கு நின்று கொண்டிருந்த 2 பெண்கள் […]

Loading

செய்திகள்

விழுப்புரம் அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற சிறுத்தை: வாகனம் மோதி பலி

விழுப்புரம், நவ. 5– விழுப்புரம் அருகே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற சிறுத்தை அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகில் உள்ள மேம்பாலப் பகுதியில் (சென்னை – -திருச்சி தேசிய நெடுஞ்சாலை) நேற்று நள்ளிரவில் சிறுத்தை ஒன்று சாலையைக் கடக்க முயன்றுள்ளது. அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிச் சென்றதில் சிறுத்தை சம்பவ இடத்திலேய உயிரிழந்தது. இதைத் தொடர்ந்து அந்த வழியாகச் […]

Loading

செய்திகள்

உத்தரப்பிரதேசத்தில் நடந்த சோகம் தண்டவாளத்தை கடந்த 6 பேர் ரெயில் மோதி பலி

மிர்சாபூர், நவ. 5– உத்தரப்பிரதேசத்தில் ரெயில் தண்டவாளத்தை கடந்த 6 பேர் ரெயில் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தின் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள சுனார் சந்திப்பில் இன்று காலை 9:15 மணியளவில் சோபன்-பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய பயணிகள் சிலர் நடைமேம்பாலத்தை பயன்படுத்தாமல் தண்டவாளத்தை கடந்த செல்ல முயன்றனர். முயன்றனர். அப்போது ​​மூன்றாவது நடைமேடை வழியாக சென்ற கல்கா மெயில் மோதியதில் 6 பேர் தூக்கி வீசப்பட்ட நிலையில் உடல் […]

Loading

செய்திகள்

2026 சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. முதல்வர் வேட்பாளர் விஜய்

* கூட்ட நெரிசலில் பலியான 41 பேருக்கு இரங்கல் * மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் தலைவருக்கும், பொதுமக்களுக்கு பாதுகாப்பு * விவசாயிகள் விரோத ஆட்சியாளர்களுக்குக் கண்டனம் சென்னை, நவ. 5– கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து அவர் மீது அரசியல் கட்சிகள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தன. தொடர்ந்து மவுனம் சாதித்து வந்த விஜய், கரூர் சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து […]

Loading

செய்திகள்

பீகார் தேர்தல் கருத்துக்கணிப்பு: பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை பிடிக்கிறது

பாட்னா, நவ.5- பீகாரில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபைக்கு நவம்பர் 6 மற்றும் 11-ந்தேதி என இரண்டு கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதன்படி 121 தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. இந்த தேர்தலில் முதல்-மந்திரி நிதிஷ்குமார் தலைமையிலான ஆளும் […]

Loading

செய்திகள்

விஜயின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? — தவெக இன்று சிறப்பு பொதுக்குழு கூட்டம்

சென்னை, நவ. 5: கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் நடத்திய பிரச்சார கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவத்துக்குப் பிறகு கட்சியின் நிர்வாக நடவடிக்கைகள் ஒரு மாத காலம் மந்தமாக இருந்தன. இப்போது, அந்த அமைதி முறிந்து கட்சிச் செயல்பாடுகள் மீண்டும் வேகமெடுத்துள்ளன. இதன் தொடர்ச்சியாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மாமல்லபுரத்தில் உள்ள தனியார் அரங்கில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) சிறப்பு […]

Loading

செய்திகள்

அனில் அம்பானியின் ரூ.3 ஆயிரம் கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கம்

ரூ.17 ஆயிரம் கோடி பண மோசடி : புதுடெல்லி, நவ. 3– ரூ.17 ஆயிரம் கோடி பண மோசடி செய்ததாக அனில் அம்பானியின் ரூ.3 ஆயிரம் கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்திற்கு எதிரான வழக்கில் சுமார் ரூ.3,084 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. இதில் மும்பையின் பாலி ஹில்லில் உள்ள வீடு, டெல்லியில் உள்ள ரிலையன்ஸ் சென்டர் மற்றும் 8 நகரங்களில் உள்ள ரியல் எஸ்டேட் சொத்துக்கள் அடங்கும். […]

Loading