செய்திகள்

டில்லி சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை வேட்டையாட அமித்ஷா உத்தரவு

புதுடில்லி: நவ. 1 1– டில்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் உள்ள ஒவ்வொரு குற்றவாளியையும் வேட்டையாடுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளேன் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். தலைநகர் டில்லியில் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்த சூழலில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் அவரது இல்லத்தில் உயர்மட்ட பாதுகாப்பு மறுஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன், புலனாய்வுப் பணியகத்தின் இயக்குநர், தேசிய […]

Loading

செய்திகள்

2026 சட்டசபை தேர்தலில் சின்னம் ஒதுக்கக்கோரி தேர்தல் ஆணையத்திடம் த.வெ.க மனு

சென்னை, நவ. 11– 2026 சட்டசபை தேர்தலில் சின்னம் ஒதுக்கக்கோரி தேர்தல் ஆணையத்திடம் த.வெ.க. சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்கும் வகையில், மக்கள் சந்திப்பை முன்னெடுத்து வந்த த.வெ.க.வுக்கு கரூர் நிகழ்வு தீரா வலியை ஏற்படுத்தி விட்டது. அந்த சோக நிகழ்வில் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக த.வெ.க. மீண்டு வருகிறது. மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கட்சி பணியாற்ற விஜய் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். சட்டசபை தேர்தலுக்கு 6 மாதங்களே இருக்கும் நிலையில், த.வெ.க.வுக்கு […]

Loading

செய்திகள்

பீகாரில் 2–ம் கட்ட சட்டசபை தேர்தல்: 122 தொகுதிகளில் விறுவிறு வாக்குப்பதிவு

பாட்னா, நவ.11- பீகார் சட்டசபையில் 122 தொகுதிகளுக்கான 2–ம் கட்ட வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. பிற்பகல் 1 மணி நிலவரப்படி …. சதவீத வாக்குகள் பதிவானது. இன்று வாக்குப்பதிவு முடிந்ததும், முதல் மற்றும் இரண்டாம் கட்ட தேர்தல்களில் பதிவான வாக்குகள் 14-ந் தேதி எண்ணப்படுகிறது. ஆட்சியை பிடிப்பது எந்த கூட்டணி என்று அப்போது தெரிய வரும். பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் – பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடக்கிறது. […]

Loading

செய்திகள்

டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் குற்றவாளிகள் யாரும் தப்பிக்க முடியாது ; பிரதமர் மோடி உறுதி

திம்பு, நவ. 11– டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் யாரும் தப்பிக்க முடியாது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். 2 நாள் அரசு முறைப் பயணமாக இன்று காலை பூடான் நாட்டிற்கு வந்த பிரதமர் மோடிக்கு திம்பு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியை பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே வரவேற்றார். திம்புவில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:– டெல்லியில் நடந்த கொடூரமான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. […]

Loading

செய்திகள்

டெல்லி கார் குண்டுவெடிப்பு: சந்தேக நபரின் புகைப்படம் வெளியீடு

டெல்லி, நவ.11– டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தற்கொலை தாக்குதல் நடத்தியவர் என்று சந்தேகிக்கப்படும் மருத்துவர் உமர் முகமதுவின் புகைப்படம் வெளியாகியுள்ளது. நேற்று மாலை டெல்லி செங்கோட்டை அருகே வெடித்துச் சிதறிய வெள்ளை நிற ஹூண்டாய் ஐ–20 காரை உமர் இயக்கிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. ஜம்மு – காஷ்மீரின் புல்வாமாவில் 1989 பிப்ரவரி 24 அன்று பிறந்த உமர், அல் பலா மருத்துவக் கல்லூரியில் மருத்துவராகப் பணிபுரிந்தார். ஜம்மு – காஷ்மீர் மற்றும் ஹரியானா காவல்துறையினரால் பயங்கரவாத […]

Loading

செய்திகள்

தர்மேந்திரா உடல்நிலை குறித்து மனைவி ஹேமமாலினி விளக்கம்

மும்பை, நவ. 11– இந்தி திரையுலகின் பழம்பெரும் நடிகர் தர்மேந்திராவின் உடல்நிலை குறித்து அவரது ‘நட்சத்திர’ மனைவியும் மக்களவை உறுப்பினருமான ஹேமமாலினி விளக்கம் அளித்துள்ளார். இந்தித் திரையுலகில் 300 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர் தர்மேந்திரா (வயது 89). மூச்சுத் திணறல், உயர் ரத்தஅழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள ப்ரீச்கேண்டி மருத்துவமனையில் நேற்றிரவு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பிரபல இருதயநோய் நிபுணரான மருத்துவர் தேவ் பஹ்லாஞ்சனியின் கண்காணிப்பில் தர்மேந்திரா இருப்பதாகவும், […]

Loading

செய்திகள்

தெலங்கானா இடைத்தேர்தலில் டிரோன் கண்காணிப்பு

ஐதராபாத், நவ. 11- தெலுங்கானா மாநிலத்தின் தலைநகர் ஐதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தல் வாக்குப்பதிவுகள், டிரோன்கள் மூலம் முதன்முறையாக கண்காணிப்பு செய்யப்படுகிறது. ஜூப்ளி ஹில்ஸ் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. பொதுவாக அமைதியான சூழலே நிலவினாலும், நாள் முழுவதும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கோளாறுகள், ஆங்காங்கே சிறிய மோதல்கள் மற்றும் அரசியல் தலையீடுகள் குறித்த புகார்கள் சில வாக்குச்சாவடிகளில் பதிவாகியுள்ளன. டிரோன் மூலம் கண்காணிப்பு இந்நிலையில் மொத்தம் 4,01,365 […]

Loading

செய்திகள்

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் 85 லட்சம் ரூபாய்க்கான நிதியுதவியைமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளின் கீழ், 525 கலைஞர்களுக்கு 85 லட்சம் ரூபாய்க்கான நிதியுதவியைமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் கலைமாமணி விருது பெற்று நலிந்த நிலையில் வாழும் 10 கலைஞர்களுக்கு பொற்கிழியாக தலா 1 லட்சம் ரூபாய் நிதியுதவி, தமிழில் கருத்தாழமிக்க அரிய […]

Loading

செய்திகள்

எஸ்ஐஆர்–ஐ கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க. கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம்.

சென்னை, நவ. 11– தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (எஸ்ஐஆர்) கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் இன்று தி.மு.க. கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வாக்குரிமை பறிப்பு, தேர்தல் ஆணையம், மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து கோஷம் எழுப்பி தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தி.மு.க.வின் மக்கள் பிரதிநிதிகளும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கோஷமிட்டனர். சென்னை மிண்ட் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ம.தி.மு.க. […]

Loading

செய்திகள்

ரூ.61.74 கோடியில் விருதுநகரில் சாலை மேம்பாலம் : ஸ்டாலின் திறந்தார்.

சென்னை, நவ. 11– நெடுஞ்சாலைத் துறை சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் ரூ.61.74 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சாலை மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக 98 இளநிலை வரைதொழில் அலுவலர் உள்ளிட்ட 120 பணியிடங்களுக்கு 98 இளநிலை வரைதொழில் அலுவலர், 14 உதவியாளர் மற்றும் 8 தணிக்கை உதவியாளர் என தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை அவர் வழங்கினார். விருதுநகர் மாவட்டத்தில், ஸ்ரீவில்லிபுத்தூர் – சிவகாசி – விருதுநகர்- அருப்புக்கோட்டை-திருச்சுழி-நரிக்குடி- […]

Loading