செய்திகள்

சென்னையில் மகளிர் காவல் நிலைய போலீசாருக்கு போக்சோ வழக்கு குறித்த பயிற்சி

சென்னை, நவ. 16– சென்னை பெருநகர அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாருக்கு போக்சோ வழக்கு குறித்த பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவிட்டதின்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளினர்களுக்கு போக்சோ வழக்கு சம்மந்தமான பயிற்சி வகுப்புகள் எழும்பூரில் உள்ள சென்னை பெருநகர காவல், கிழக்கு மண்டல இணை ஆணையாளர் அலுவலகம், இரண்டாம் தளத்தில் உள்ள […]

Loading

செய்திகள்

மார்ச் மாத இறுதிக்குள் படுக்கை வசதி கொண்ட 8 வந்தே பாரத் ரெயில்கள் தயாரிக்க இலக்கு

சென்னை, நவ.15- அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் படுக்கை வசதி கொண்ட 8 வந்தே பாரத் ரெயில்கள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை பெரம்பூரில் ஒருங்கிணைந்த ரெயில் பெட்டி தொழிற்சாலை (ஐ.சி.எப்.) அமைந்துள்ளது. இங்கு, ஆண்டுக்கு சுமார் 4 ஆயிரம் ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, வந்தே பாரத் ரெயில்கள் தயாரிப்பு பணியில் ஈடுபட்டது. இதுவரையில் இந்தியா முழுவதும் 92 வந்தே பாரத் ரெயில்கள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன. வந்தே பாரத் […]

Loading

செய்திகள்

இணையதளம், சமூக ஊடகங்களை அளவோடு பயன்படுத்த வேண்டும் மாணவர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை

சென்னை, நவ.15- இணையதளம், சமூக ஊடகங்களை அளவோடு பயன்படுத்த வேண்டும் என மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளியில் அரசு விழா மற்றும் குழந்தைகள் தின விழா நடந்தது. விழாவுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் குழந்தைகள் தின வாழ்த்துச் செய்தியை வாசித்தார். அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:- பாவேந்தர் பாரதிதாசனார் அறிவுறுத்தியபடி, இனிமையான […]

Loading

செய்திகள்

பிர்சா முண்டா பிறந்தநாள்: பிரதமர் மோடி மரியாதை

புதுடெல்லி, நவ. 15– பழங்குடியினர் விடுதலைப் போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். ஜார்க்கண்ட் மாநிலம் உலி ஹாட்டு பகுதியில் பழங்குடியினர் சமூகத்தில் பிறந்த பிர்சா முண்டா, சிறு வயதிலேயே ஆங்கிலேயே ஆட்சி அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடினார். 25 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த இவர், பழங்குடியினரின் நிலம் மற்றும் உரிமைகளைக் காக்கப் போராடினார். இதனால், ‘நிலத்தின் தந்தை’ எனப் பழங்குடினரால் அவர் அழைக்கப்பட்டார். இவரது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. […]

Loading

செய்திகள்

சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியை கண்டித்துசென்னையில் 17–ந் தேதி அண்ணா தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை, நவ.15– சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியை கண்டித்து சென்னையில் அண்ணா தி.மு.க. 9 மாவட்ட செயலாளர்கள் வரும் 17–ந் தேதி (திங்கட்கிழமை) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பட்டியல் தமிழக முழுவதும் நடைபெற்று வருகிறது. தேர்தல் ஆணையத்திற்கு அண்ணா திமுக சார்பில் இதற்கு முழு ஆதரவு வழங்கி வருகின்றனர். தமிழகத்தில் திமுக கூட்டணியினர் இந்த நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த 4–ந் தேதி தொடங்கி படிப்படியாக வீடு வீடாக சென்று […]

Loading

செய்திகள்

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணியில்அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுகிறார்கள்:எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

சேலம், நவ.15-– வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணியில் அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுகிறார்கள் என்றும், தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணியில் குளறுபடி நடப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார். அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் சென்றார். சேலம் விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-– பீகார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற்று இருக்கிறது. […]

Loading

செய்திகள்

வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை, நவ.15- சிறப்பு தீவிர திருத்த பணிக்கான கணக்கீட்டுப் படிவங்களை நிரப்ப மக்களுக்கு உதவியாக இருக்க வேண்டும் என வாக்குச்சாவடி முகவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். சென்னை, கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற ‘‘என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி’’ என்ற தலைப்பில் நடைபெற்ற வாக்குச்சாவடி பாக முகவர்கள் மற்றும் நிர்வாகி கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது:- எங்கு சென்றாலும் எஸ்.ஐ.ஆர். பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள். மக்கள் ஒவ்வொருவரும், ‘‘நாங்கள் இந்திய குடிமக்கள் தான்’’ என்று நிரூபிக்க […]

Loading

செய்திகள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்தார் சஞ்சு சாம்சன்

சென்னை, நவ. 15– சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சஞ்சு சாம்சன் இணைக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக ராஜஸ்தான் அணிக்கு ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரன் விடுவிக்கப்பட்டனர். 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 16-ந்தேதி அபுதாபியில் நடைபெறுகிறது. இதையொட்டி தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை 10 அணிகளும், ஐ.பி.எல். நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு முன்பாக பரஸ்பர பேச்சுவார்த்தையின் மூலம் வீரர்கள் வர்த்தக பரிமாற்றம் நடந்து வருகிறது. முன்னதாக […]

Loading

செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,520 குறைவு; 2 நாட்களில் மட்டும் ரூ.2800 சரிவு

சென்னை:  நவ 15 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,520 குறைந்து, ஒரு சவரன் ரூ.92,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 நாட்களில் மட்டும், தங்கம் விலை சவரனுக்கு ரூ.2800 குறைந்துள்ளது.சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலையில் ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (நவ.,13) ஆபரண தங்கம், கிராம் 11,900 ரூபாய்க்கும், சவரன், 95,200 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 183 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று (நவ.,14) காலை, தங்கம் […]

Loading

செய்திகள்

IPL 2026: சஞ்சு சாம்சனை வாங்கிய சிஎஸ்கே – ஜடேஜா, சாம் கரண்

ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு; ஐந்து வீரர்கள் ரிலீஸ் மும்பை:ஐபிஎல் 2026 சீசனுக்கு முன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெரிய அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடமிருந்து கேப்டன் சஞ்சு சாம்சனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மாற்றாக, ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரண் இருவரையும் ராஜஸ்தான் அணிக்கு ஒப்படைத்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பை சிஎஸ்கே அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அணிகள் தக்கவைத்தல்–விடுவிப்பு பட்டியலை மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்பதால், பல அணிகள் தீவிரமாக பேச்சுவார்த்தைகள் நடத்திய நிலையில், […]

Loading