செய்திகள் நாடும் நடப்பும்

தந்தையின் உடலை அடக்கம் செய்ய பணம் இல்லாமல் தவித்த 4 குழந்தைகள்

சங்கராபுரம், நவ.17: சங்கராபுரம் அருகே தந்தையின் இறுதி சடங்கு செலவுக்கு பணம் இல்லாமல் அவரது குழந்தைகள் பரிதவித்தனர். இதனை கண்ட கிராம மக்கள் வீடு வீடாக பணம் வசூலித்து உடலை அடக்கம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை கிராமத்தை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (வயது 46). தொழிலாளியான இவருக்கு வசந்தா (40) என்ற மனைவியும், லாவண்யா(24), ரீனா (21), ரிஷிகா(17) ஆகிய 3 மகள்களும், அபினேஷ் (13) என்ற மகனும் உள்ளனர். வசந்தா […]

Loading

செய்திகள்

காஞ்சிபுரம் கூட்டுறவு வாரவிழாவில் 1111 மகளிருக்கு நல உதவிகள்: அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்

காஞ்சிபுரம் நவ. 17– காஞ்சிபுரம் செவிலிமேடு தனியார் திருமண மண்டபத்தில் கூட்டுறவு துறை சார்பில் சர்வதேச கூட்டுறவு ஆண்டை முன்னிட்டு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நடப்பு ஆண்டில் “தன்னிறைவு பெற உதவும் கருவிகளாகக் கூட்டுறவுச் சங்கங்கள்” என்ற தலைப்பில் 7 நாள் விழா நடைபெறுகிறது. இவ்விழாவில் 1111 உறுப்பினர்களுக்கு ரூ10.96 கோடி மதிப்பீட்டில் மகளிர் சுய உதவிக்குழுக் கடன், 37 பயனாளிகளுக்கு ரூ.26 லட்சம் மதிப்பீட்டில் கால்நடை […]

Loading

செய்திகள்

ஸ்ரீ சாய்ராம் வணிக மேலாண் கல்லூரி ஏற்பாட்டில் உயர் கல்வியில் செயற்கை நுண்ணறிவு கருத்தரங்கு

சென்னை, நவ. 17– நாட்டில் உயர் கல்வியை மேம்படுத்துவதில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது என மேலாண் தொழில்நுட்பக் கல்வி ஆலோசகர் பி.அன்புத் தம்பி கூறினார். மேற்கு தாம்பரம் ஸ்ரீசாய்ராம் வணிக மேலாண் கல்லூரி சார்பில் நடைபெற்ற தேசியக் கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அவர் பேசுகையில், ‘சர்வதேச அளவில் கணினி விளையாட்டில் 70 ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், தற்போது அனைத்துத் துறைகளின் வளர்ச்சி முன்னேற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது […]

Loading

செய்திகள்

வங்கதேசத்தை விட்டு வெளியேறியது வேதனை: ஷேக் ஹசீனா உருக்கம்

புதுடில்லி: மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான வழக்கில், இன்று (நவ.,17) தீர்ப்பு வெளியாக உள்ளது. இந்த சூழலில், வங்கதேசத்தை விட்டு வெளியேறியது வேதனை அளிக்கிறது என ஷேக் ஹசீனா உருக்கமாக தெரிவித்துள்ளார்.கடந்தாண்டு வங்கதேசத்தில் ஏற்பட்ட மாணவர் போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. இதில், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த வன்முறையை தொடர்ந்து பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது. மேலும், அவர் வங்கதேசத்தை விட்டு வெளியேறி, இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். […]

Loading

செய்திகள்

திருச்செங்கோடு அருகே கோவில் வளாகத்தில் கிடந்த வாக்காளர் பட்டியல் கணக்கெடுப்பு படிவங்கள்

நாமக்கல், நவ. 16– திருச்செங்கோடு அருகே கோவில் வளாகத்தில் வாக்காளர் பட்டியல் கணக்கெடுப்பு படிவங்கள் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகள் நடந்து வருகிறது. இதற்காக நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் வீடு, வீடாக சென்று வாக்காளர் பட்டியல் படிவங்களை வினியோகம் செய்து அதை பூர்த்தி செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே ஒரு கோவிலில் வாக்காளர்களுக்கு வழங்க […]

Loading

செய்திகள்

சென்னை உட்பட 7 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்ச் அலர்ட்

சென்னை, நவ. 16– தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால், தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென் இலங்கை மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று காலை இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. இதன்காரணமாக இன்று முதல் 22ம் தேதி வரை கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், […]

Loading

செய்திகள்

சத்தீஸ்கரில் என்கவுன்டர்: நக்சலைட்டுகள் 3 பேர் சுட்டுக்கொலை

ராய்ப்பூர், நவ. 16– சத்தீஸ்கரின் சுக்மாவில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், நக்சலைட்டுகள் 3 பேர் கொல்லப்பட்டனர். சத்தீஸ்கரின் சுக்மா பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் போலீசாருடன் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்சல்கள், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுத்தனர். இதில் நக்சலைட்டுகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் அப்பகுதியில் நக்சலைட்டுகள் […]

Loading

செய்திகள்

லாரி மீது பஸ் மோதி விபத்து; கர்நாடக ஐயப்ப பக்தர்கள் 20 பேர் காயம்

அவிநாசி, நவ. 16– திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே லாரி மீது பஸ் மோதிய விபத்தில் கர்நாடக ஐயப்ப பக்தர்கள் 20 பேர் காயம் அடைந்தனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து ஆம்னி பேருந்தில் 50-க்கும் மேற்பட்டோர், கேரள மாநிலம் சபரிமலை நோக்கி சென்று கொண்டிருந்தனர். திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் நியூ திருப்பூர் அருகே இன்று அதிகாலை சென்றபோது முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணம் செய்த […]

Loading

செய்திகள்

கல்குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்தது: இடிபாடுகளில் சிக்கிய 15 பேர் கதி என்ன?

* ஒருவர் உடல் மீட்பு * மற்றவர்களை மீட்பதில் மின்னல்வேகம் லக்னோ, நவ. 16– உத்தரபிரதேசத்தில் சோன்பத்ராவில் கல்குவாரியில் பாறைகள் சரிந்தன. இதில் 15 தொழிலாளர்கள் சிக்கினர். தற்போது அங்கு அவர்களை மீட்க பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. குவாரி உள்ளே, பெரிய பள்ளம் தோண்டி கற்கள் வெட்டி எடுக்கப்படுகிறது. இங்கு தொழிலாளர்கள் வழக்கம் போல் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென பாறைகள் சரிந்தன. இதில் தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ […]

Loading

செய்திகள்

கீழ்பாக்கத்தில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் விற்பனை: 2 பேர் கைது

சென்னை, நவ. 16– கீழ்பாக்கம் பகுதியில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை பெங்களூரிலிருந்து வாங்கி விற்பனைக்காக வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின்பேரில், கீழ்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் கீழ்பாக்கம், வாசு தெருவில் கண்காணித்து, அங்கு நின்று கொண்டிருந்த 2 நபர்களை விசாரணை செய்து, சோதனை செய்தபோது, அவர்கள் மெத்தம்பெட்டமைன் எனும் போதைப்பொருளை விற்பனைக்காக மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதன்பேரில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்த உஸ்மான், பிரவீன் […]

Loading