செய்திகள் நாடும் நடப்பும்

பிட்ஜி குளோபல் பள்ளி மாணவர்களின் 25 உலக சாதனை முயற்சி – தலைமை ஆசிரியர் புனிதா உரை

வேலூர் நவ. 17: வேலூர் பிட்ஜி குளோபல் பள்ளி மாணவர்கள் உலக சாதனை 2025யின் கீழ் 25 உலக சாதனைகளை தங்களின் தனித் திறமைகளை நிகழ்த்த திட்டமிட்டுள்ளனர். அதனையொட்டி 22ந் தேதி வரை நிகழ்த்த உள்ளனர் என பள்ளி தலைமை ஆசிரியர் பொங்கல் புனிதா கூறினார். இது குறித்து பள்ளி அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:– ‘‘இப்பள்ளி வேலூர் காட்பாடி அடுத்த மெட்டு குளம் பகுதியில் சிபிஎஸ்இ பிட்ஜி குளோபல் பள்ளியை தொடங்கி வெற்றிகரமாக 5ம் ஆண்டில் அடி […]

Loading

செய்திகள்

ஆர்.எம்.டி. பொறியியல் கல்லூரி 34ம் ஆண்டு முன்னாள் மாணவர் சந்திப்பு

சென்னை, நவ. 17: ஆர்.எம். டி. பொறியியல் கல்லூரியின் 34வது முன்னாள் மாணவர் சந்திப்பு சென்னையில் உள்ள கே.எம் ஸ்பெக்ட்ராவில் சிறப்பாக நடத்தப்பட்டது. முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் பி. பிரவீனா வரவேற்புரை நிகழ்த்தினார். கணினி பொறியியல் துறை பேராசிரியர் மற்றும் முன்னாள் மாணவர் சங்க செயலாளர் ஆர். சசிகுமாரின் வருடாந்திர அறிக்கை வாசித்தார். பல்வேறு துறைகளின் தலைவர்கள் தங்கள் துறைகளில் நடந்து வரும் முன்னேற்றங்கள் குறித்த முக்கிய நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொண்டனர். நிறுவனர் தலைவர் ஆர். […]

Loading

செய்திகள்

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ. 2.50 கோடி மோசடி

சென்னை, நவ. 17: அரசு வேலை வாங்கி தருவதாக 2.50 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாக, சென்னை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் கலாநிதி மற்றும் அவரின் மனைவி ராஜலட்சுமி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த 2001ல் சென்னை அண்ணா பல்கலை துணை வேந்தராக இருந்தவர் கலாநிதி. இவர், செங்கல்பட்டு மாவட்டம் பையனுாரைச் சேர்ந்த தனசேகரனிடம், அவரின் குடும்பத்தார் மற்றும் உறவினர்களுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக, 2.50 கோடி ரூபாய் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

கடலூர் கூட்டுறவு வார விழாவில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர்கள் வழங்கினர்

கடலூர், நவ. 17: கடலூரில் 72வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழாவில் 13,736 பயனாளிகளுக்கு ரூ.110.19 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன் ஆகியோர் வழங்கினர். 72வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவினை முன்னிட்டு கடலூர், நகர அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன் ஆகியோர் மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன், மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா ஆகியோர் முன்னிலையில் 13,736 பயனாளிகளுக்கு ரூ.110.19 கோடி மதிப்பீட்டிலான அரசு […]

Loading

செய்திகள்

விழுப்புரம் மாவட்டத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை: கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் ஆய்வு

விழுப்புரம், நவ. 17–- வடகிழக்கு பருவ மழையையொட்டி வானூர் தாலுகா பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளது. இதையொட்டி வானூர் அடுத்த திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள பி.டி.ஓ., அலுவலகத்தில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பருவமழை அதிகரிக்கும் போது திடீரென சாலைகளில் உள்ள மரம் முறிந்து போக்குவரத்து தடை ஏற்பட்டால் அதனை உடனடியாக அகற்ற வேண்டும், மழைக்காலத்தில் பொதுமக்களை பத்திரமாக பாதுகாக்க […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும் வர்த்தகம்

ரஷியாவிடம் ரூ.25,500 கோடிக்கு கச்சா எண்ணெய் வாங்கிய இந்தியா

புதுடெல்லி, நவ.17- ரஷிய நிறுவனங்கள் மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடை விதிப்பதற்கு முன்பே அக்டோபர் மாதம், ரஷியாவிடம் ரூ.25 ஆயிரத்து 500 கோடி மதிப்புள்ள கச்சா எண்ணெயை இந்தியா வாங்கி உள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்தது. அதையடுத்து, ரஷியா மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடை விதித்தன. குறிப்பாக, ரஷியாவின் எண்ணெய் வர்த்தகத்தை முடக்கும் வகையில், பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன. அதனால், ரஷியா புதிய […]

Loading

செய்திகள்

அனைத்து மாவட்டங்களிலும் தமிழிசை விழாக்கள் நடத்த முதல்வர் ரூபாய் ஒரு கோடி ஒதுக்கீடு

சென்னை, நவ 17 சுசிரா டிரஸ்ட் மற்றும் தமிழ்நாடு இயல் – இசை – நாடக மன்றம் இணைந்து நடத்தும் இளம் கலைஞர்களை ஊக்குவிக்கும் திட்டம் சார்பில் இசை விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. தலைமை விருந்தினர்களாக சங்கீத வித்வான் கலைமாமணி ஆண்டான் கோவில் டாக்டர் ஏபிஎஸ் சிவகுமார், தமிழ்நாடு கலை பண்பாட்டுத்துறை துணை இயக்குனர் ஹேமநாதன் பங்கேற்றார்கள். இசை விழா, தமிழின் பண்பாட்டு மரபைக் கொண்டாடும் ஒரு மேடையாகவும், இளம் மற்றும் மூத்த கலைஞர்களின் திறமைகளை […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

தமிழகத்தில் நாளை முதல் எஸ்ஐஆர் பணிகள் புறக்கணிப்பு: வருவாய்த் துறை சங்கம் அறிவிப்பு

சென்னை, நவ. 17: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) தொடா்பான பணிகளை நாளை முதல் புறக்கணிக்கவுள்ளதாக வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தமிழகம், கேரளம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் எஸ்ஐஆர் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி, வீடு வீடாக கணக்கீட்டு விண்ணப்பங்களை விநியோகித்து, அவற்றைப் பூர்த்தி செய்து திரும்பப் பெறும் பணியில் வாக்குச்சாவடி அலுவலா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். தமிழகத்தில் மட்டும் கிட்டத்திட்ட 6 கோடி வாக்காளர்களுக்கு படிவங்கள் வழங்கப்பட்டிருப்பதாக இந்திய தேர்தல் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

2,552 செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி, ‘மைக்ரோ சிப்’ சென்னை மாநகராட்சி சார்பில் பொருத்தப்பட்டது

சென்னை, நவ.17: சென்னை மாநகராட்சி சார்பில் 2–-ம் கட்டமாக நடந்த சிறப்பு முகாமில் 2 ஆயிரத்து 552 செல்லப் பிராணிகளுக்கு ‘மைக்ரோ சிப்’, ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. சென்னை மாநகராட்சி சார்பில் தெரு நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்களுக்கு உடலில் ‘மைக்ரோ சிப்’ பொருத்தும் பணி செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக வருகிற 24-ந்தேதிக்குள் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறாவிட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்தது. மேலும் செல்லப்பிராணிகளின் […]

Loading

செய்திகள்

30 குழந்தைகளை விமானத்தில் அழைத்துச் சென்று குஷிப்படுத்திய ‘ரெயின் டிராப்ஸ்’ அறக்கட்டளை அமைச்சர் கீதா ஜீவன், விஜிபி சந்தோஷம் உடன் பயணித்தனர்.

சென்னை, நவ.17– குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, ரெயின் டிராப்ஸ் அறக்கட்டளை அதன் வருடாந்திர சிறப்பு திட்டமான “வானமே எல்லை” எனும் அருமையான ஊக்கமளிக்கும் முயற்சியை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் பொருளாதார ரீதியாக பின்தங்கிய 30 குழந்தைகள் தங்களது வாழ்நாளில் முதன் முறையாக சென்னை நகரிலிருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் பயணம் மேற்கொண்டுள்ளனர். அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த வருடாந்திர முன்முயற்சியில், ஒரு திருநங்கை மாணவர் மற்றும் பார்வை குறைபாடுள்ள ஒரு மாணவர் […]

Loading