செய்திகள்

மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தெற்கு பகுதி துணை இயக்குநர் ஜெனரலாக ஐ.ஜி. சுதாகர் பதவியேற்றார்

சென்னை, நவ. 19– மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தெற்கு பகுதி துணை இயக்குநர் ஜெனரலாக ஐ.ஜி. சுதாகர் பதவியேற்றார். 2003-ம் ஆண்டு ஐபிஎஸ் முடித்த ஆர்.சுதாகர், ராணிப்பேட்டை மற்றும் விருதுநகரில் உதவி காவல் கண்காணிப்பாளராக (ASP) தனது பணியைத் தொடங்கி, பின்னர் காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றார். சென்னை அடையாறு மற்றும் புளியந்தோப்பில் துணை ஆணையராகப் பணியாற்றுவதற்கு முன்பு தர்மபுரி, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் பணியாற்றினார். 2007-ம் ஆண்டு, துணை காவல் […]

Loading

செய்திகள்

நடிகை ஸ்ரேயா சரண் பெயரை பயன்படுத்தி WhatsApp மோசடி – ரசிகர்களுக்கு கடும் எச்சரிக்கை

சென்னை, நவம்பர் 19:நடிகை ஸ்ரேயா சரண் தனது பெயரை பயன்படுத்தி WhatsApp-ல் ஆள்மாறாட்டம் செய்து பிறரை தொடர்புகொள்வதாக ஒருவர் மோசடி செய்து வருவதை குறித்து ரசிகர்களையும் நண்பர்களையும் எச்சரித்துள்ளார். சமூக வலைதளங்களில் அந்த WhatsApp கணக்கின் ஸ்கிரீன்ஷாட்டை வெளியிட்டுள்ள ஸ்ரேயா, “இந்த முட்டாள் யாராக இருந்தாலும் மக்களை தொடர்புகொள்வதும் அவர்களின் நேரத்தை வீணடிப்பதும் உடனே நிறுத்த வேண்டும். இது நான் அல்ல; இது என் எண் அல்ல,” என்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், “இந்த போலி […]

Loading

செய்திகள்

ரவுடிகளின் அட்டகாசத்தை ஒடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

சென்னை, நவ.19- ரவுடிகளின் அட்டகாசத்தை ஒடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- சென்னை பாரிமுனை பகுதியில், கலெக்டர் அலுவலகம், கோர்ட் அருகே இரு ரவுடிக்கும்பல் கத்திகளுடன் விரட்டிச் சென்று மோதிக் கொண்டதால் பொதுமக்கள் அலறியடித்து ஓடியதாகவும், சென்டிரல் அருகே பல்லவன் சாலையில் இருவர் கத்தியுடன் மோதிக் கொண்டதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கிறது. தி.மு.க ஆட்சியில் […]

Loading

செய்திகள்

ஜாக்டோ-ஜியோ தமிழகம் முழுவதும் இன்று வேலை நிறுத்தம்

சென்னை, நவ. 18– 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை எழிலகத்தில் அரசு ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜாக்டோ ஜியோ என்பது தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் சமூக, பொருளாதார உரிமைகளை பாதுகாப்பதற்காக உருவான ஒருங்கிணைந்த இயக்க அமைப்பாகும். இந்த அமைப்பானது ஊழியர்களின் வேலைநிலை, ஓய்வூதியம், சம்பளம் மற்றும் அரசு நலக் கோரிக்கைகள் தொடர்பாக ஒருங்கிணைந்து போராட்டங்கள் நடத்துகிறது. அந்த வகையில் […]

Loading

செய்திகள்

அரசியலை விட்டு வெளியேற மாட்டேன் பிரசாந்த் கிஷோர் பேட்டி

பாட்னா, நவ. 18– பீகார் சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு 100 சதவீதம் நானே பொறுப்பேற்கிறேன் என்று ஜன்சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். பீகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும் பலத்துடன் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இந்தியா கூட்டணியில் போட்டியிட்ட ராஷ்டீரிய ஜனதா தளம் 25 தொகுதிகளிலும், காங்கிரஸ் 6 தொகுதிகளிலும் மட்டுமே வெற்றி பெற்றது. 238 தொகுதிகளில் போட்டியிட்ட ஜன்சுராஜ் கட்சி ஒரு இடத்தில்கூட வெற்றி […]

Loading

செய்திகள்

சபரிமலையில் பக்தர்களுக்கு 24 மணி நேர தகவல் மையங்கள் அமைச்சர் சேகர்பாபு

சென்னை, நவ. 18– சபரிமலை ஸ்ரீதர்ம சாஸ்தா (ஐயப்பன்) கோயிலில் மண்டல பூஜை நேற்று (17–ந் தேதி) முதல் 27–ந் தேதி வரையும், மகரவிளக்கு ஜோதி திருவிழா டிசம்பர் 30ந் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 19ந் தேதி வரை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு சபரிமலை பயணம் மேற்கொள்ளும் தமிழ்நாடு ஐயப்ப பக்தர்களுக்கு உதவுவதற்காக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்திலும், மாநில எல்லையான களியக்காவிளையிலும், கேரள மாநிலம்-சபரிமலையிலும் 24 மணி நேரமும் இயங்கும் தகவல் […]

Loading

செய்திகள்

விக்கிரவாண்டி அருகே பைக் மீது லாரி மோதியதில் தந்தை–மகள் உயிரிழப்பு

விக்கிரவாண்டி, நவ.18 – விக்கிரவாண்டி அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் மகளை கல்லூரிக்கு அழைத்து சென்ற தந்தை மகள் இருவரும் உயிரிழந்தனர். செஞ்சி அருகே துத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் வயது 42, இவரது மகள் சூரிய பிரியா வயது 17. இவர் பாண்டிச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் முதலாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில் இன்று காலை 5 மணியளவில் கல்லூரிக்கு அனுப்புவதற்காக தனது வீட்டிலிருந்து பைக்கில் மகள் சூரிய பிரியாவை […]

Loading

செய்திகள்

தைப்பூச விழாவையொட்டி 57 ரெயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்லும்: ரெயில்வே அறிவிப்பு

சென்னை, நவ.18–- இருமுடி, தைப்பூச விழாவையொட்டி 57 ரெயில்கள் மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் தற்காலிகமாக நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–- இருமுடி மற்றும் தைப்பூச விழாவை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் 57 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தற்காலிகமாக ஒரு நிமிடம் நின்று செல்லும். அதன் விவரம் வருமாறு:- * எழும்பூர் – -மதுரை வைகை எக்ஸ்பிரஸ், எழும்பூர் – -மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ், […]

Loading

செய்திகள்

ஆந்திராவில் நக்சல் அமைப்பின் தலைவன் உட்பட 6 மாவோயிஸ்ட்கள் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

விசாகப்பட்டினம், நவ. 18– ஆந்திரப் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் நக்சல் அமைப்பின் தலைவன் மத்வி ஹித்மா உள்பட 6 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஆந்திரப் பிரதேசத்தின் அல்லுரி சீதாராமராஜு மாவட்டத்தில் மாவோயிஸ்ட்கள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் போலீசாருடன் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இன்று காலை 6.30 மணியளவில் அங்கு பதுங்கியிருந்த மாவோயிஸ்ட்கள், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி […]

Loading

செய்திகள்

விழுப்புரம் வந்த ஸ்பிக் உர மூட்டைகள்: கலெக்டர் ஆய்வு

விழுப்புரம், நவ. 18– விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் இரயில் நிலையத்திற்கு, தூத்துக்குடி இரயில் நிலையத்திலிருந்து சரக்கு இரயில் மூலம் வந்தடைந்த ஸ்பிக் SPIC நிறுவன உர மூட்டைகளை மாவட்ட கலெக்டர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது அவர் கூறியதாவது: விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு சரக்கு ரயில் மூலம் தூத்துக்குடி ரயில் நிலையத்திற்கு ஸ்பிக் உர நிறுவனத்தின் 1299 மெ.டன் உரமூட்டைகள் வந்தடைந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது சம்பா நெல் சாகுபடிக்கான […]

Loading