செய்திகள்

இந்தியாவுக்கு ரூ.822 கோடிக்கு ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல்

வாஷிங்டன், நவ.20- இந்தியாவுக்கு ரூ.822 கோடி மதிப்பிலான ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. அதிபர் டிரம்ப் விதித்த கூடுதல் வரியால் பாதிக்கப்பட்ட இந்தியா –அமெரிக்கா இடையேயான உறவு மற்றும் வர்த்தகம் தற்போது மெல்ல மெல்ல மீண்டெழுந்து வருகிறது. இந்த சூழலில், இந்திய ராணுவத்திற்கு ரூ.822 கோடி மதிப்பிலான ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம், ராணுவ வீரர்கள் தோளில் வைத்து ஏவும் வகையிலான 100 எப்ஜிஎம் 148 ஜாவெலின் ஏவுகணைகள், 25 […]

Loading

செய்திகள்

அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூர கல்வி தேர்வு விண்ணப்பம் வெளியீடு

சிதம்பரம், நவ. 20– சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தொலைதூர மற்றும் இணையவழி கல்வி முறையில் 2024-2025 ஆம் ஆண்டில் சேர்க்கைப் பெற்ற மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்தல் விபரம் இணையத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 2024-2025 ஆம் கல்வி ஆண்டில் தொலைதூர மற்றும் இணையவழியில் (CDOE) பயிலும் மாணவர்கள் வருகின்ற டிசம்பர் 2025ல் தேர்வு எழுதுவதற்கான தேர்வுக் கட்டணம் செலுத்த பல்கலைக்கழக இணையவழி (https://annamalaiuniversity.ac.in/aucoe/cdoe_fee.php) 17-11-2025 முதல் செயல்பாட்டில் உள்ளது. அனைத்து மாணவர்களும் தங்கள் தேர்வுக் கட்டணத்தை செலுத்த 03-12-2025 […]

Loading

செய்திகள்

கோவை வந்த பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

கோவை, நவ.20- கோவை வந்த பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். அப்போது கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்த கோரி மனு வழங்கினார். தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் கோவை கொடிசியாவில் இயற்கை வேளாண் மாநாடு நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி கோவைக்கு வந்தார். விமான நிலையத்தில் பிரதமர் மோடியை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி […]

Loading

செய்திகள்

சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

பாதுகாப்பு பணிக்காக அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்தனர் அரக்கோணம், நவ. 19– சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுவதால் பாதுகாப்பு பணிக்காக அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர். சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக கடந்த 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது. கோவிலில் கடந்த 3 நாட்களில் 2 லட்சத்து 34 ஆயிரம் பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். கடுமையான குளிரையும், இடை இடையே கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நீண்ட […]

Loading

செய்திகள்

கோவை, மதுரை மெட்ரோ நிராகரிப்பு; பழிவாங்குவது கீழ்மையான போக்கு: முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

சென்னை, நவ. 19– பா.ஜ.க.வைத் தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பதற்காக இப்படி பழிவாங்குவது கீழ்மையான போக்கு என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வருங்கால வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவையான மதுரை மற்றும் கோவையிலும் மெட்ரோ ரயிலைக் கொண்டு வருவோம் என்றும் அவர் கூறினார். கோவை மற்றும் மதுரை மாநகரில் போதிய எண்ணிக்கையில் மக்கள் தொகை இல்லாததால் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான அனுமதியை மத்திய அரசு தர மறுத்துவிட்டது இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:– […]

Loading

செய்திகள்

சென்னையில் 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

சென்னை, நவ. 19: சென்னையில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதலே சோதனை நடத்தி வருகிறார்கள். சென்னை கோடம்பாக்கம், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் தொழில் அதிபர்களின் வீடுகள், நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள கல்யாணி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் காலையிலேயே சோதனை மேற்கொண்டுள்ளனர். அம்பத்தூர் திருவேங்கட நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் பிரகாஷ் என்பவர் வீட்டிலும் சோதனை நடந்து வருவதாக […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

வாக்குச்சாவடி நிலை அலுவலர் ஊதியம் ரூ.6,000-ல் இருந்து ரூ.12,000 ஆக உயர்வு

சென்னை, நவ. 19: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கான வாக்குச்சாவடி நிலை அலுவலர் ஊதியம் ரூ.6,000-ல் இருந்து ரூ.12,000 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் இரண்டாம் கட்டம் தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெற்று வருகிறது. அவற்றில் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கிறது. சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக, இந்திய தேர்தல் […]

Loading

செய்திகள்

மரத்தில் கார் மோதி விபத்து: 4–ம் ஆண்டு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலி

தூத்துக்குடி, நவ. 19: தூத்துக்குடி கடற்கரை சாலையில் மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் 3 பயிற்சி மருத்துவ மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் 5 பேர் நேற்று இரவு காரில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் சென்ற கார் , கடற்கரை சாலையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர்களான முகிலன் (வயது 23), ராகுல் ஜெபஸ்டின், சாரூபன் ஆகிய […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

சத்ய சாய்பாபா நூற்றாண்டு விழா: நினைவு நாணயம், தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார்

புட்டபர்த்தி, நவ. 19: புட்டபர்த்தியில் ஸ்ரீ சத்ய சாய்பாபா நூற்றாண்டு விழாவில் இன்று பிரதமர் மோடி பங்கேற்றார். முன்னதாக சத்ய சாய்பாபாவின் மகா சமாதியில் அவர் வழிபட்டு, தியானத்தில் ஈடுபட்டார். சாய்பாபாவின் நினைவு நாணயத்தையும், தபால் தலையையும் அவர் வெளியிட்டார். ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் 1926ம் ஆண்டு நவம்பர் 23–ந்தேதி சத்யசாய் பாபா பிறந்தார். ஆன்மிக பணிகளுடன் ஸ்ரீ சத்ய சாய் அறக்கட்டளை மூலம் ஏழைகளுக்கு கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை இலவசமாக வழங்கினார். புட்டபர்த்தியில் […]

Loading

செய்திகள்

காதலிக்க மறுத்ததால் 12ம் வகுப்பு மாணவி வெட்டிக் கொலை

ராமநாதபுரம், நவ. 19 காதலிக்க மறுத்த 12 ஆம் வகுப்பு மாணவியை இன்று இளைஞர் வெட்டிக் கொலை செய்த சம்பவம் ராமேஸ்வரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம், சேராங்கோட்டை பகுதியைச் சேர்ந்த மாரியப்பன், கவிதா தம்பதியின் மகள் ஷாலினி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். அதே ஊரைச் சேர்ந்த குப்புசாமி, முத்துமாரி தம்பதியின் மகன் முனிராஜ் (20) என்பவர் அந்த பெண்ணை கடந்த ஒரு வருடமாக ஒருதலைபட்சமாக காதலித்ததாகவும், இதற்கு அந்த […]

Loading