செய்திகள்

திண்டிவனம் கிடங்கல் பகுதியில் 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்த பல்லவர் கால கொற்றவை சிற்பம்

விழுப்புரம், நவ. 20: திண்டிவனம் கிடங்கல் பகுதியில் 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்த பல்லவர் கால கொற்றவை சிற்பம் கண்டெடுக்கப்பட்டது. திண்டிவனம் கிடங்கல் பகுதியில் விழுப்புரத்தை சேர்ந்த வரலாற்று ஆர்வலர் செங்குட்டுவன், கள ஆய்வில் ஈடுபட்டார். அப்போது பல்லவர் காலத்தைச் சேர்ந்த கொற்றவை உள்ளிட்ட சிற்பங்கள் கண்டறியப்பட்டன. இதுபற்றி அவர் கூறியதாவது:- திண்டிவனம் கிடங்கல் பகுதியில் உள்ள பாரதிதாசன்பேட்டையில் சிறிய அளவிலான வனதுர்க்கை அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் மூலவராக கொற்றவை வீற்றிருக்கிறார். சுமார் 6 அடி உயரத்தில் […]

Loading

செய்திகள்

நெல் கொள்முதல் ஈரப்பத விவகாரத்தில் தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு

சென்னை, நவ. 20: நெல் கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஒன்றிய அரசு நிராகரித்துள்ளது. இது உழவர்களிடையே பிரதமர் உரையாற்றிய ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகம் என்று முதல்வர் ஸ்டாலின் காட்டமாக கூறியுள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:– ‘‘கோவைக்கான மெட்ரோ ரெயில் திட்டத்தை நிராகரித்துவிட்டு, அதே கோவைக்கு எந்தவிதமான உறுத்தலும் இன்றி பிரதமர் வந்து சென்ற ஈரம்கூட இன்னும் காயவில்லை; அதற்குள் நெல் கொள்முதலில் […]

Loading

செய்திகள்

ராணிப்பேட்டை அருகே கார் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேர் பலி

ராணிப்பேட்டை, நவ. 20: ராணிப்பேட்டை அருகே புதிய மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். ராணிப்பேட்டை அடுத்த காரை கூட்ரோடு பகுதியில் அமைந்துள்ள புதிய மேம்பாலத்தில் இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த 3 பேர் மீது எதிரே அதிவேகமாக வந்த கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட சொகுசு கார் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த தினேஷ் (20), சாஜன் (26) பாலமுருகன்(19) ஆகிய 3 […]

Loading

செய்திகள்

வேலூர் காந்திநகர் மாவட்ட கிளை நூலகத்தில் 58 வது நூலக வார விழா

வேலூர், நவ. 20: வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், காந்திநகர் அறிஞர் அண்ணா கிளை நூலகத்தின் வாசகர் வட்டத்தின் சார்பில் காங்கேயநல்லூர் திருமுருக கிருபானந்த வாரியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 58வது நூலக வார விழா சிறப்பாக நடைபெற்றது. வட்ட தலைவர் வி.பழனி தலைமையில் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.பிரேமா முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் துணைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் அனைவரையும் வரவேற்று பேசினார். இந்த சிறப்புமிகு விழாவிற்க்கு சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற பேராசிரியை எம்.எஸ்.கலைச்செல்வி […]

Loading

செய்திகள்

போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் ரூ. 8.3 கோடி மோசடி

சென்னை, நவ. 20: சொத்துக்களை அபகரித்து வங்கிகளில் சுமார் ரூ.8.3 கோடி பணம் பெற்று மோசடி செய்த 2 வழக்குகளில் தலைமறைமாறக இருந்தவரை போலீசார் கைது செய்தனர். சென்னை, மயிலாப்பூரைச் சேர்ந்த தாராசந்த் என்பவர், தனது தாயார் ருக்குமணி என்பவருக்கு சொந்தமாக 1 கிரவுண்ட் மற்றும் 1,262 சதுரடி கொண்ட கட்டிடத்துடன் கூடிய இடம் உள்ளதாகவும், 2019ம் ஆண்டு ருக்குமணி இறந்துவிட்ட நிலையில், சிலர் கூட்டாக சேர்ந்து தனது தாயார் ருக்குமணி போல ஒரு நபரை ஆள்மாறாட்டம் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

வீடூர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர்: கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் திறந்து வைத்தார்

விழுப்புரம், நவ. 20 வீடூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீரை கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் திறந்து வைத்தார். இதன் மூலம் 3 ஆயிரத்து 200 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. திண்டிவனம் தாலுகா வீடூர் கிராமத்தில் வீடூர் அணை உள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 32 அடி ஆகும். தற்போது பெய்த பருவமழையின் காரணமாக அணையில் தற்போது 30.3. அடி தண்ணீர் உள்ளது. இந்த அணையின் மூலம் தமிழ்நாட்டில் 2,200 ஏக்கர் […]

Loading

செய்திகள்

விஎஸ் மருத்துவமனையில் முழங்கால் மூட்டு மாற்று சிகிச்சைக்கு அதிநவீன ‘ரோபோட்டிக்’ முறை அறிமுகம்

சென்னை, நவ.20: சென்னையின் முன்னணி பன்னோக்கு மருத்துவமனையான விஎஸ் ஹாஸ்பிட்டல்ஸ், கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனது மருத்துவமனையில் VELYS எனும் ரோபோ உதவியுடன் செயல்படும் நவீன சிகிச்சை முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு மிகத் துல்லியமாகவும், ஒவ்வொரு நோயாளிக்கும் ஏற்ற வகையிலும் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொள்ள உதவும் அடுத்த தலைமுறை தொழில்நுட்பமாகும். இந்த மேம்பட்ட சிகிச்சை செயல்முறையின் அறிமுகத்தை முன்னிட்டு, இம்மாத இறுதி வரை இலவச எலும்பியல் மருத்துவ ஆலோசனைகளை இம்மருத்துவமனை வழங்குகிறது. […]

Loading

செய்திகள்

சென்னையில் விடிய விடிய நடந்த அமலாக்கத் துறை சோதனை

சென்னை, நவ. 20: சென்னையின் பல்வேறு பகுதியில் விடிய விடிய நடந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்தது. முறைகேடான பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் மத்திய அரசின் அமலாக்கத்துறை, ஏற்கனவே பல்வேறு தரப்பினரின் வீடுகளிலும், அலுவலகங்களிலும் அதிரடி சோதனை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்கள், அமலாக்கத்துறையின் சோதனை நடவடிக்கையில் சிக்கியுள்ளனர். அந்த வகையில் நேற்று தங்க நகை மற்றும் இரும்பு தொழில் சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளிலும், அலுவலகங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் […]

Loading

செய்திகள்

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் போல் நடித்து ரூ.7 கோடி ஏ.டி.எம். பணம் கொள்ளை

8 பேர் கும்பல் கைவரிசை பெங்களூரு, நவ.20- பெங்களூருவில் பட்டப்பகலில் சினிமாவை மிஞ்சும் வகையில் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் போல் நடித்து ரூ.7 கோடி ஏ.டி.எம். பணத்தை துப்பாக்கி முனையில் 8 பேர் கும்பல் கொள்ளையடித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் தனியார் பாதுகாப்பு நிறுவனமான சி.எம்.எஸ். செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் வங்கிகளிடம் இருந்து மொத்தமாக பணத்தை பெற்று, அந்தந்த வங்கிகளின் ஏ.டி.எம். மையங்களில் நிரப்பும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, ஜே.பி. நகரில் உள்ள […]

Loading

செய்திகள்

தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டிய மனைவியிடம் இருந்து கணவருக்கு விவாகரத்து

மும்பை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு மும்பை, நவ.20- தற்கொலை செய்துவிடுவதாக அடிக்கடி மிரட்டிய மனைவியிடம் இருந்து கணவருக்கு விவாகரத்து வழங்கி மும்பை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு அளித்தது. குடும்ப நலக்கோர்ட்டில் மனைவி யிடம் இருந்து விவாகரத்து கேட்ட ஒருவரின் மனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மும்பை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், “நான் கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டேன். ஆனால் கருத்து முரண்பாடு காரணமாக 2012-ம் ஆண்டு முதல் நானும், எனது […]

Loading