செய்திகள்

ஜெயலலிதா இசை – கவின்கலைப் பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினராக மாலதி லக்ஷ்மண் நியமனம்

சென்னை, நவ. 24: தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக பின்னணி பாடகி கலைமாமணி மாலதி லக்ஷ்மண் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ள மாலதி லக்ஷ்மண் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். நியமனம் குறித்து பேசிய அவர், “அரசு அளித்துள்ள இந்த மிகப்பெரிய அங்கீகாரம் மிகுந்த உற்சாகத்தையும் உத்வேகத்தையும் அளிக்கிறது. இசைத் துறைக்கு வலுவூட்ட என்னால் ஆன அனைத்து […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

அதிநவீன வசதிகளுடன் அம்பத்தூர் தொழிற்பேட்டை பஸ் நிலையம்: உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை, நவ.24– துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வடசென்னை வளர்ச்சி திட்டத்தின்கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 11.81 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்டஅம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையத்தை திறந்து வைத்து, 30 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 51 புதிய பேருந்துகளின் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். கலைஞர் போக்குவரத்து மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபொழுது 10.4.1967 அன்று அம்பத்தூர் பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார். அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து […]

Loading

செய்திகள்

நெல் ஈரப்பதம் விவகாரம்: திருவாரூரில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

சென்னை, நவ.24: சுயமரியாதையையும், உரிமைகளையும் அடகு வைக்க மட்டும்தான் கூட்டணியா? என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். நெல் கொள்முதல் ஈரப்பத அளவை மத்திய அரசு அதிகரிக்காததைக் கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் திருவாரூரில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின. இதில் விவசாய அமைப்புகளும் கலந்துகொண்டன. திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்திய புகைப்படங்களைப் பகிர்ந்து முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்துள்ளார். […]

Loading

செய்திகள்

சென்னையில் 33,418 செல்லப்பிராணிகளுக்கு ‘மைக்ரோசிப்’ பொருத்தும் உரிமங்கள் விநியோகம்

சென்னை, நவ. 24: சென்னை மாநகராட்சியில் இதுநாள்வரை 77 ஆயிரத்து 707 செல்லப்பிராணிகள் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, 33,418 செல்லப் பிராணிகளுக்கு ‘மைக்ரோசிப்’ பொருத்தி உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 7 மையங்களில் 3,091 செல்லப் பிராணிகளுக்கு வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசி செலுத்தி, மைக்ரோசிப் பொருத்தி, செல்லப் பிராணிகளின் உரிமையாளர்களுக்கு உரிமம் வழங்கப்பட்டது. நேற்றுடன் (23–ந் தேதி) செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறுவதற்கு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் செல்லப்பிராணிகள் உரிமையாளர்களின் கோரிக்கையின் அடிப்படையில் செல்லப்பிராணிகளுக்கான உரிமம் பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட […]

Loading

செய்திகள்

தென் ஆப்ரிக்காவில் நடந்த ஜி20 மாநாடு வெற்றி: பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி, நவ.24 3 நாட்கள் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து டெல்லி திரும்பிய பிரதமர் மோடி, வெற்றிகரமான ஜோஹன்னஸ்பர்க் (தென் ஆப்ரிக்கா) ஜி20 மாநாடு நிலையான வளர்ச்சியை உருவாக்கும் என தெரிவித்துள்ளார்.ஜி20 கூட்டமைப்பின் உச்சிமாநாடு தென் ஆப்பிரிக்காவின் ஜோகனர்ஸ்பர்க் நகரில் நடைபெற்றது. அதில் பங்கேற்பதற்காக 3 நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி தென் ஆப்பிரிக்கா சென்றார். அங்கு விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்றார். இந்த மாநாட்டில் பல்வேறு […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

சென்னையிலிருந்து திருப்பதி வழியாக ஐதராபாத்துக்கு புல்லெட் ரெயில் சேவை

சென்னை, நவ. 24: சென்னையிலிருந்து திருப்பதி வழியாக ஐதராபாத்துக்கு புல்லெட் ரெயில் திட்டத்திற்கான இறுதி வழித்தட விவரங்களை விரிவான அறிக்கையாக தயாரித்து தமிழக அரசிடம் தென் மத்திய ரெயில்வே வழங்கியுள்ளது. உலக அளவில் வளர்ந்த நாடுகளில் அதிவேக புல்லெட் ரெயில் சேவை இருக்கிறது. அந்த வகையில், ஜப்பான், சீனா, தென் கொரியா, இத்தாலி மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில் புல்லெட் ரெயில் சேவை உள்ளது. வளர்ந்து வரும் நாடான இந்தியாவிலும் புல்லெட் ரெயில் திட்டம் மராட்டிய மாநிலம் […]

Loading

செய்திகள்

உள்நாட்டில் தயாராகும் 5ம் தலைமுறை போர் விமானம்

புதுடெல்லி, நவ. 24: உள்நாட்டிலேயே 5ம் தலைமுறை போர் விமானம் தயாரிக்கும் உள்நாட்டு தொழில்நுட்பங்களை இந்திய நிறுவனங்களுக்கு அதிகாரப்பூர்வமாக டிஆர்டிஓ வழங்கியுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு, பாதுகாப்புத்துறையில் சுயசார்பு என்ற இலக்கை நோக்கிய நடவடிக்கைகளை மிகத் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. இந்த நிலையில் டிஆர்டிஓ எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், மேம்பட்ட நடுத்தர ஏவுகணை மற்றும் பிரளய ஏவுகணைக்காக உருவாக்கப்பட்ட முக்கிய உள்நாட்டு தொழில்நுட்பங்களை இந்தியத் தொழிற்சாலைகளுக்கு அதிகாரப்பூர்வமாக மாற்றியுள்ளது. இதன்மூலம் இந்தியாவின் […]

Loading

செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 குறைந்தது

சென்னை, நவ. 24: சென்னையில் வார தொடக்க நாளான இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 சரிந்து, ஒரு சவரன் ரூ.92,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.110 குறைந்து, ஒரு கிராம் ரூ.11, 520க்கு விற்பனை ஆகிறது. சர்வதேச நிலவரங்களால் தங்கத்தின் விலை ஏற்றத்தை கண்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு 170 ரூபாய் அதிகரித்து, 11,630 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 1,360 ரூபாய் உயர்ந்து, ரூ.93,040க்கு விற்கப்பட்டது. […]

Loading

செய்திகள்

கோபிசெட்டி பாளையத்தில் எடப்பாடி பழனிசாமி 30–ந் தேதி -பிரச்சாரம்

சென்னை, நவ.24: ‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற உன்னத நோக்கத்துடனான எழுச்சிப் பயணத்தைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையத்தில் 30–ந் தேதி – ஞாயிற்றுக் கிழமை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளார். சட்டமன்றத் தொகுதி வாரியாக, கடந்த 7.7.2025 முதல் 10.10.2025 வரை, 174 தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி தொடர் பிரச்சார சூறாவளி சுற்றுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார். இந்தச் சுற்றுப் பயணங்களின்போது, ஆங்காங்கே மக்கள் […]

Loading

செய்திகள்

2 நொடி வீடியோ: ரூ. 5 லட்சம் சம்பாதித்த இளம்பெண்

சென்னை, நவ. 24: இளம்பெண் ஒருவரின் 2 நொடி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு இளம் பெண் வெள்ளை நிற உடையணிந்து, துண்டை தலையில் கட்டிக் கொண்டு வெள்ளி நகைககளுடன் ஆட்டோ ரிக்ஷாவில் பயணிக்கும்போது கேமராவைப் பார்க்கிறாள். இந்த 2 நொடி வீடியோ இணையத்தில் வைரலாகி 100 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. இதன்மூலம் அந்த பெண் ரூ. 5 லட்சம் முதல் ரூ. 6 லட்சம் வரை வருமானம் ஈட்டலாம் என்று இணையதள […]

Loading