செய்திகள்

சென்னை பள்ளிகளில் 10,12–ம் வகுப்பு மாணவர்களுக்கு “எளிய கற்றல் கையேடு’’:மேயர் பிரியா வழங்கினார்

சென்னை , நவ. 25: சென்னை பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர் அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் மற்றும் அதிக தேர்ச்சி விகிதம் பெற ஏதுவாக பாடங்களை எளிதான முறையில் தயார்செய்து, வினா விடை தொகுப்பு முறையில் “எளிய கற்றல் கையேடு” (Easy Learning Materials) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதல்லவா? அதன்படி மேயர் ஆர். பிரியா, ரிப்பன் கட்டட அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், “எளிய கற்றல் கையேட்டினை” மாணவர்கள் மற்றும் தலைமையாசிரியர்களிடம் […]

Loading

செய்திகள்

மணல் திருட்டை தடுக்காத தி.மு.க. அரசுக்கு ஓபிஎஸ் கடும் கண்டனம்

சென்னை, நவ. 25: மணல் திருட்டை தடுத்து நிறுத்தாத தி.மு.க. அரசுக்கு ஓ. பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து, மணல் கடத்தல், ரேஷன் அரிசி கடத்தல், போதைப் பொருட்கள் விற்பனை, கள்ளச்சாராய விற்பனை என பல சட்ட விரோதச் செயல்கள் தமிழ்நாட்டில் கொடிகட்டிப் பறக்கின்றன. இதன் விளைவாக, வன்முறையாளர்களின் புகலிடமாக தமிழ்நாடு மாறிக் கொண்டு வருகிறது. 2021–ம் ஆண்டு தி.மு.க. […]

Loading

செய்திகள்

ஜாய் கிரிஸில்டா வுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் நிறுவனம் தொடர்ந்த வழக்கு: ஐகோர்ட் தள்ளுபடி

சென்னை, நவ. 25: மாதம்பட்டி ரங்கராஜ் விவகாரத்தில் தங்கள் நிறுவனத்தை தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் கருத்துகள் பதிவிட, ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்கக்கோரி மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக ரங்கராஜ் மீது புகார் அளித்த ஜாய் கிரிசில்டா மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தை டேக் செய்து எக்ஸ் தளத்தில் பதிவு செய்திருந்தார். இதற்கிடையில், ஜாய் கிரிசில்டா வெளியிட்ட புகார் மற்றும் சமூக வலைதள பதிவுகளால் […]

Loading

செய்திகள்

10 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் வெடித்துச் சிதறிய எத்தியோப்பியா எரிமலை

புதுடெல்லி, நவ. 25: எத்தியோப்பியா நாட்டில் உள்ள ஹேலி குப்பி எரிமலை 10,000 ஆண்டுகளுக்குப் பின் வெடித்திருக்கும் நிலையில், அதன் சாம்பல் மேகங்கள் இந்தியாவின் வடமேற்குப் பகுதி வரை சூழ்ந்துள்ளது. எரிமலை வெடிப்பு காரணமாக, 11 வழித்தடங்களில் விமானங்களை ரத்து செய்வதாக ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிவித்துள்ளது. கிழக்கு ஆப்ரிக்க நாடான எத்தியோப்பியாவின் அபார் மாகாணத்தில் உள்ள ஹேலி குப்பி என்ற எரிமலை, பல்லாண்டுகளுக்குப் பின் வெடித்துள்ளது. இதனால் சாம்பல் புகை பரவி வருகிறது. இதனால், […]

Loading

செய்திகள்

தங்கம் சவரனுக்கு ரூ.1600 அதிகரிப்பு; ஒரு சவரன் ரூ.93,760

சென்னை, நவ. 25– சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1600 அதிகரித்து ஒரு சவரன் ரூ.93,760க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது. கடந்த மாதம் (அக்டோபர்) 17ந்தேதி ஒரு சவரன் ரூ.97,600 என்ற உச்சத்துக்கு சென்று, அதே மாதம் 28ந்தேதி ஒரு சவரன் ரூ.88,600 என்ற நிலைக்கும் வந்தது. அதன் பின்னரும், விலை ஏறுவதும், இறங்குவதுமாக இருக்கிறது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு 110 […]

Loading

செய்திகள்

சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் பயணிகள் தவறவிட்ட ரூ. 80 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மீட்பு

சென்னை, நவ. 25– சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் 2025ம் ஆண்டில் ரெயில்வே பாதுகாப்புப் படையினர் ரூ.79,57,509 மதிப்புள்ள 1769 பொருட்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர். தெற்கு ரெயில்வேயின் ரெயில்வே பாதுகாப்புப் படையின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஸ்ரீ அருள் ஜோதியின் வழிகாட்டுதலின் கீழ், சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் திருட்டு தடுப்பு மற்றும் பயணிகள் பாதுகாப்பு குறித்த தீவிர விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தப் பிரச்சாரங்கள் பயணிகளுக்கு தங்கள் உடைமைகளைப் பாதுகாப்பது மற்றும் பயணத்தின் போது […]

Loading

செய்திகள்

திருவண்ணாமலையில் உலக சாதனையாக 1500 பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்ற பரத தீபம் நிகழ்ச்சி

திருவண்ணாமலை நவ. 25-– திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரி அருகிலுள்ள சந்தைமேடு மைதானத்தில் பரணி தீபத்தை வரவேற்கும் வகையில் உலக சாதனை நிகழ்வாக பரத தீபம் என்ற தலைப்பில் பரத நாட்டிய கலைஞர்கள் பங்கேற்ற பரத நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. இதில் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட பரத நாட்டிய கலைஞர்கள் கலந்து கொண்டனர். இதில் அகல்விளக்கு, மலை, சிவசிவ என்ற வடிவில் பரத நாட்டிய கலைஞர்கள் நின்றபடி2 […]

Loading

செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 12 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: உதயநிதி வழங்கினார்.

திருவள்ளூர், நவ. 25– துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சி சுந்தர சோழபுரத்தில் நடைபெற்ற அரசு விழாவில் 333.26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற 377 திட்டப்பணிகளை திறந்து வைத்து, 137.38 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 211 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 1,12,294 பயனாளிகளுக்கு 1000.34 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது: திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெறுகின்ற இந்த பிரம்மாண்டமான நலத்திட்ட உதவிகள் வழங்கும் […]

Loading

செய்திகள்

மாற்றுத்திறனாளி மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை: வேலூர் கலெக்டர் உத்தரவு

வேலூர், நவ.25– மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் சுப்புலெட்சுமி உத்தரவிட்டார். வேலூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி பொதுமக்களிடம் 410 கோரிக்கை மனுக்களை பெற்றார். வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி தலைமையில் நடைபெற்றது. மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வருவாய்த்துறை நிலப்பட்டா, பட்டா மாறுதல், […]

Loading

செய்திகள்

கடலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர மிதிவண்டிகள்: கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வழங்கினார்

கடலூர், நவ.24– கடலூரில் நடைபெற்ற குறைதீர்வு முகாமில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 3 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு தலா ரூ.11,500 வீதம் மொத்தம் ரூ.34,500 மதிப்பீட்டிலான மூன்று சக்கர மிதிவிண்டிகளை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வழங்கினார். கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவிக்கையில், தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்காகவும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை […]

Loading