சினிமா செய்திகள்

‘பரோட்டா’ முருகன் வாழ்ந்திருக்கிறார்; தோள்களைத் தழுவுமோ தேசிய விருது ?

தேசிய விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய அற்புதமான யதார்த்த நடிகர் ‘பரோட்டா’ முருகன், எந்த ஒரு (வி) வாத மேடையிலும் அடித்து சொல்லலாம், அந்த அளவுக்கு நல்ல பாடனாக வாழ்ந்தே காட்டி இருக்கிறார் ‘ஒண்டிமுனியும் – நல்ல பாடனும்’ படத்தில். கதையின் நாயகனாக இருந்த ” அழகர் சாமியின் குதிரை”- ( 2011ல் ரிலீஸ், இயக்குனர் -சுசீந்திரன்) படத்தில் எப்படி தேசிய அளவில் சிறந்த நடிகருக்கான விருதை அப்புக்குட்டி என்னும் துணை நடிகர் வாங்கி பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறாரோ- அதே அடிச்சுவட்டில். […]

Loading

செய்திகள்

‘‘அனைவருக்குமான அரசாக இருப்பது தான் திராவிட மாடல் அரசு’’: உதயநிதி பேச்சு

சென்னை, நவ. 28– சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில், பெரியார் திடலில் நடைபெற்ற பிறந்த நாள் நிகழ்ச்சியில், கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழிகளையும், ஏழை – எளிய மக்கள் – மாற்றுத்திறனாளிகள் – திருநர்கள் – தூய்மைப்பணியாளர்கள், – சுகாதாரப்பணியில் ஈடுபடுவோருக்கு நலத்திட்ட உதவிகளையும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர், அனைவருக்குமான அரசாக, அனைத்துச் சமுதாயத்துக்குமான அரசாக இருப்பதுதான் திராவிட மாடல் அரசு என்று தி.மு.க. தலைவர் சொல்வார். எனவே, […]

Loading

செய்திகள்

‘‘மக்கள் சக்தியால் ஆட்சிப் பீடத்தில் விஜய்’’: செங்கோட்டையன் உறுதி

சென்னை, நவ. 28: ‘‘அடுத்த ஆண்டில் (2026) மக்கள் சக்தியால் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஆட்சி பீடத்தில் அமர்வார்’’ என அதன் மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் உறுதிபடக் கூறியுள்ளார். அண்ணா திமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சா் செங்கோட்டையன், தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்ததையடுத்து சென்னை பனையூரில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கட்சித் தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்..தொடர்ந்து அவருக்கு என்ன பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் […]

Loading

செய்திகள்

கோவிலுக்கு தானமாக கொடுத்த நிலம் அபகரிப்பு: 4 வாரங்களில் முடிவெடுக்க பதிவாளருக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை, நவ. 28: கோவிலுக்கு தானமாக கொடுத்த நிலம் அபகரிக்கப்பட்டது தொடர்பான புகாரை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க மயிலாடுதுறையில் மாவட்ட பதிவாளருக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் உள்ள ஆதி கேசவ பெருமாள் கோவிலின் பக்தர் டாக்டர் டி.செல்வராஜ் தாக்கல் செய்துள்ள மனுவில், 1957ஆம் ஆண்டில் அலமேலு அம்மாள் என்பவர் தனக்கு சொந்தமான திருவேல்விகுடி கிராமத்தில் இருந்த நிலத்தை தானமாக கொடுத்ததாகவும், அந்த நிலத்தை பி.கல்யாணம், பி.கோவிந்தராஜன் ஆகியோர் மோசடியாக விற்பனை பத்திரம் தயாரித்து, […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

சிறையில் இம்ரான்கான் உயிருடன் இருப்பதற்கான ஆதாரமில்லை: உலக நாடுகள் தலையிட மகன் கோரிக்கை

இஸ்லாமாத், நவ. 28: சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் உயிருடன் இருப்பதற்கான எந்த ஆதாரமில்லை என்று அவரது மகன் காசிம் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் உலக நாடுகள் தலையிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இம்ரான் கான் சிறையில் கொல்லப்பட்டதாக வெளியான தகவலுக்கு அடியாலா சிறை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் கடந்த 2023ம் ஆண்டு முதல் அடைக்கப்பட்டுள்ளார். ஊழல் வழக்குகள் […]

Loading

செய்திகள் முழு தகவல்

சட்டமன்றத்தில் தமாகா குரல் நிச்சயம் ஒலிக்கும்: ஜி.கே. வாசன் பேட்டி

சென்னை, நவ. 28: சட்டமன்றத்தில் தமாகா குரல் நிச்சயம் ஒலிக்கும் என்று ஜி.கே. வாசன் கூறினார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் 12ம் ஆண்டு விழாவையொட்டி ஆழ்வார்பேட்டை தலைமை அலுவலகத்தில் தலைவர் ஜி.கே.வாசன் எம்பி கொடியேற்றியனார். இந்த பொதுச் செயலாளர்கள் ஜி.ஆர். வெங்கடேஷ், ராஜம் எம்பி நாதன், ராணி கிருஷ்ணன்,துணைத் தலைவர்கள் விடியல் சேகர் சக்தி வடிவேல், முனவர் பாஷா, மாவட்டத் தலைவர்கள் பிஜு சாக்கோ, அருண்குமார், லூயிஸ் மற்றும் நிர்வாகிகள் கே ஆர் டி ரமேஷ், […]

Loading

செய்திகள்

திருச்சி பெண்ணின் ஆதார் எண்ணை பயன்படுத்தி போலி நிறுவனம் தொடங்கி ரூ.9.48 கோடி ஜி.எஸ்.டி மோசடி

திருச்சி, நவ. 28: திருச்சி பெண்ணின் ஆதார் எண்ணை பயன்படுத்தி போலியாக நிறுவனம் தொடங்கி ரூ.9.48 கோடி ஜி.எஸ்.டி மோசடி செய்த ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி மன்னார்புரம் காஜாநகர் குடிசை பகுதியை சேர்ந்தவர் சிவா. இவரது மனைவி கலைவாணி (வயது 35). கலைவாணி பெயரில் திருச்சி பகுதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்பு கணக்கு உள்ளது. தற்போது அவர் அந்த வங்கியின் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி பணம் எடுக்க முயன்றார். அப்போது அவரது வங்கி […]

Loading

செய்திகள்

கேளம்பாக்கம் ஊராட்சியில் உதயநிதி பிறந்த நாள் விழா: இளைஞர்களுக்கு கிரிக்கெட் உபகரணங்கள்: எஸ்.ஆர்.எல். இதயவர்மன் வழங்கினார்

திருப்போரூர், நவ. 28: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 48 வது பிறந்த நாளையொட்டி கேளம்பாக்கம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ராணி எல்லப்பன், திருப்போரூர் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணியின் ஒருங்கிணைப்பாளர் எக்ஸ்பிரஸ் எஸ் எல்லப்பன் ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கேளம்பாக்கம் இளைஞர்களுக்கு ரூபாய் 25 ஆயிரம் மதிப்பில் கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்களை திருப்போரூர் ஒன்றிய குழு பெருந்தலைவரும், வடக்கு ஒன்றிய கழக செயலாளருமான எஸ் ஆர் எல். இதயவர்மன் வழங்கினார். செங்கல்பட்டு […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

அடுத்த ஆண்டுக்குள் சென்னை – திருச்சி உட்பட 6 வழித்தடங்களில் மணிக்கு 130 கி.மீ., வேகத்தில் ரயில்கள் இயக்கம்

சென்னை, நவ. 28: சென்னை – திருச்சி உட்பட ஆறு வழித்தடங்களில், மணிக்கு, 130 கி.மீ., வேகத்தில் ரயில்களை இயக்க, ரயில் பாதை, தானியங்கி சிக்னல் தொழில்நுட்ப தரம் உயர்த்தப்படும்’ என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். தெற்கு ரயில்வேயில், சென்னை, திருச்சி, மதுரை, சேலம் உட்பட ஆறு கோட்டங்களில் உள்ள, முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படும் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக, கூடுதல் பாதை அமைப்பது, ரயில் பாதை, சிக்னல் தொழில்நுட்பம் போன்றவற்றை மேம்படுத்துவது […]

Loading

செய்திகள்

தமாகா 12ஆம் ஆண்டு விழா சட்டமன்றத்தில் எங்கள் குரல் ஒலிக்கும் ஜி.கே. வாசன்  பேட்டி

சென்னை, நவ. 28– சட்டமன்றத்தில் தமாகா குரல் நிச்சயம் ஒலிக்கும் என்று ஜி.கே. வாசன் கூறினார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் 12ம் ஆண்டு விழாவையொட்டி ஆழ்வார்பேட்டை தலைமை அலுவலகத்தில் தலைவர் ஜி.கே.வாசன் எம்பி கொடியேற்றியனார். இந்த பொதுச் செயலாளர்கள் ஜி.ஆர். வெங்கடேஷ், ராஜம் எம்பி நாதன், ராணி கிருஷ்ணன்,துணைத் தலைவர்கள் விடியல் சேகர் சக்தி வடிவேல், முனவர் பாஷா, மாவட்டத் தலைவர்கள் பிஜு சாக்கோ, அருண்குமார், லூயிஸ் மற்றும் நிர்வாகிகள் கே ஆர் டி ரமேஷ், […]

Loading