செய்திகள்

ஆந்திராவில் 2 கார்கள் மோதி 2 குழந்தைகள் உள்பட 5 பேர் பலி

அமராவதி:  நவ. 29– ஆந்திராவில் இரண்டு கார்கள் மோதி ஏற்பட்ட விபத்தில், 2 குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள கோடேகல் கிராமத்தில், இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உள்ளூர் மக்கள் உதவியுடன் நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர். இந்த விபத்தில், 2 குழந்தைகள் உள்பட 5 பேர் சம்பவ […]

Loading

செய்திகள்

கோவை வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் 13 வீடுகளில் 56 பவுன் நகை, ரூ. 3 லட்சம் கொள்ளை

3 வடமாநில கொள்ளையர்களை சுட்டுப்பிடித்த போலீசார் கோவை, நவ. 29– கோவை- மேட்டுப்பாளையம் சாலை கவுண்டம்பாளையத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்டுள்ள ஹவுசிங் யூனிட்டில் 1,800 குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர். இங்கு குடியிருப்பவர்கள் பெரும்பாலும் அரசு ஊழியர்களாக உள்ளனர். 14 மாடிகளை கொண்ட இந்த குடியிருப்பில் நேற்று மர்ம நபர்கள் நுழைந்தனர். இவர்கள் இங்குள்ள குடியிருப்பில் பூட்டியிருந்த வீடுகளை குறிவைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர். முதலில் ஒரு வீட்டில் குடியிருப்பவர்கள் தங்களது வீட்டில் இருந்த நகை, […]

Loading

செய்திகள்

4 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மேலும் 5 நாட்கள் தாம்பரம் வரையே இயக்கப்படும்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

சென்னை, நவ. 29– எழும்பூர் ரெயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதால் 4 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மேலும் 5 நாட்கள்தாம்பரம் வரையே இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதால், சில ரெயில்களின் சேவை தாம்பரத்தில் இருந்தே இயக்கப்பட்டு வருகிறது. தற்போது, பணிகள் முடிவடையாததால் மேலும் 5 நாட்கள் தாம்பரத்தில் இருந்தே இந்த ரெயில்கள் இயக்கப்படும். தாம்பரம் […]

Loading

செய்திகள்

தமிழகத்தை நெருங்கும் ‘டிட்வா’ புயல்.. நாளை கரையை கடக்கும்.

சென்னை, நவம்பர் 29:தமிழகத்தின் தென் மாவட்டங்களை வேகமாக நெருங்கி வரும் ‘டிட்வா’ புயல் நாளை அதிகாலை அல்லது மதியம் கரையைக் கடக்கும் வாய்ப்பு அதிகமுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) இன்று வெளியிட்ட முக்கிய அறிவிப்பில் தெரிவித்துள்ளது. புயலின் தீவிரம் காரணமாக தென் தமிழகம் முழுவதிலும் கனமழை தாழ்நிலப் பகுதிகளில் நீர்மட்ட உயர்வு கடலோர பகுதிகளில் அலைச்சலின் அதிகரிப்பு போன்ற தீவிர வானிலை மாற்றங்கள் பதிவாகின்றன. தற்போது ‘டிட்வா’ குமரி கடல்பகுதியை கடந்தபடி கன்னியாகுமரி, தூத்துக்குடி, […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

‘மெரீனா பீச்’ ஜெயலலிதா நினைவிடத்தில் டிசம்பர் 5–ந் தேதி எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து மரியாதை

சென்னை, நவ.28: அண்ணா தி.மு.க.வுக்காகவும், தமிழ்நாட்டு மக்களுக்காகவும் தன்னையே அர்ப்பணித்து தவ வாழ்வு வாழ்ந்திட்ட புரட்சித் தலைவி அம்மாவின் 9–ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் டிசம்பர் 5–ந் தேதி எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார். இதுசம்பந்தமாக அண்ணா தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– ஜெயலலிதா நம்மையெல்லாம் ஆற்றொணாத் துயரத்தில் ஆழ்த்திவிட்டு அமரர் ஆகிய நாள் 5.12.2016. காலத்தால் அழியாத புரட்சிகரமான பல்வேறு […]

Loading

செய்திகள் முழு தகவல்

மணிக்கு 10 கிமீ வேகத்தில் நகர்ந்து தமிழகத்தை நெருங்கும் ‘டிட்வா புயல்’

சென்னை, நவ. 28– ‘டிட்வா புயல்’ மணிக்கு 10 கிமீ வேகத்தில் நகர்ந்து தமிழகத்தை நெருங்குகிறது. 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று காலை 11.30 மணியளவில் புயலாக வலுவடைந்து இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த புயலுக்கு ‘டிட்வா’ […]

Loading

சினிமா செய்திகள்

‘டியூட்’ படத்தில் இளையராஜா பாடல்களை நீக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை, நவ. 28– டியூட் படத்தில் இளையராஜா பாடல்களை நீக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தீபாவளியையொட்டி வெளியான ‘டியூட்’ திரைப்படத்தில், தனது இசையமைப்பில் வெளியான ‘புது நெல்லு புது நாத்து’ திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த, ‘கருத்த மச்சான்’ மற்றும் ‘பணக்காரன்’ படத்தில் இடம் பெற்றிருந்த ‘100 வருஷம் இந்த மாப்பிள்ளையும்’ ஆகிய பாடல்களை தனது அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறி, இசையமைப்பாளர் இளையராஜா சென்னை ஐகேோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். அப்படத்தில் இடம்பெற்றுள்ள இந்த 2 பாடல்களையும் நீக்க வேண்டும் என்று அதில் […]

Loading

செய்திகள்

ஜெயலலிதா இசை பல்கலைக்கழகத்துக்கு முதல்வர் ஸ்டாலின் 4 புதிய அறிவிப்பு வெளியிட்டார்

சென்னை, நவ.28: ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகத்துக்கு மாணவ மாணவிகள் பயன் பெறும் விதத்தில் ஆங்கில உரையாடல் பயிற்சி – டிஜிட்டல் திறன் சார்ந்த படிப்புகள் அறிமுகம் உள்பட 4 புதிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். ஏ.ஐ. தொழில்நுட்பம் கண்டு மாணவர்கள் கவலைப்படக்கூடாது; எவ்வளவு தான் டெக்னாலஜி வளர்ந்தாலும் அதனால் மனிதர்களின் சிந்தனையை வெல்ல முடியாது. தொழில்நுட்பத்தை நம்முடைய பலத்திற்கு நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். ஜெயலலிதா இசை […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

இரட்டைக் குழந்தைகளை உயிர் பிழைக்க வைத்த ‘எம்ஜிஎம் ஹெல்த் கேர்’

சென்னை, நவ. 28: ஒரே நஞ்சுக்கொடி… ரத்த ஓட்டத்தில் மாறுபாடு… அரிதான கர்ப்பநிலை சிக்கல்களுடன் குறைப்பிரசவத்தில் பிறந்த இரட்டை குழந்தைகளையும் காப்பாற்றியது எம்ஜிஎம் ஹெல்த்கேர் டாக்டர்கள் குழு. ஒரே நஞ்சுக்கொடியைப் பகிர்ந்துகொண்டதால், ஒரு குழந்தைக்கு அதிக ரத்த ஓட்டமும், மற்றொரு குழந்தைக்கு குறைந்த ரத்தமும் சென்றதால் ஆபத்தான நிலை இருந்தது. எடை அதிகமுள்ள ஒரு குழந்தை மட்டுமே பிழைக்கும் எனப் பிற மருத்துவமனைகள் கைவிட்ட நிலையில், எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவர்கள் இரண்டு குழந்தைகளையும் காப்பாற்றி சாதனை படைத்திருக்கின்றனர். […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

உங்களுடன் ஸ்டாலின் போட்டியில் வெற்றி பெற்ற 36 பேருக்கு : அமைச்சர் சாமிநாதன் பதக்கம், பாராட்டு சான்றிதழ்

சென்னை, நவ.28– “உங்களுடன் ஸ்டாலின் போட்டிகள்” என்ற தலைப்பில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ஊடக மையம் நடத்தியது. அதில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற 36 நபர்களுக்கு செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் பாராட்டி சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கிச் சிறப்பித்தார். தமிழ்நாட்டில் உள்ள கடைக்கோடி மக்களுக்கும், அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள், திட்டங்களை அவர்களது இல்லங்களுக்கே சென்று வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும். நகர்ப்புறப் பகுதிகளில் நடக்கும் முகாம்களில் 13 துறைகளின் 43 சேவைகளும், […]

Loading