செய்திகள்

மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா கார்த்திகை தீபம்: திருவண்ணாமலையில் பக்தர்கள் தரிசனம்

திருவண்ணாமலை, டிச. 3 – இந்தியாவின் மிக முக்கியமான ஆன்மிக விழாக்களில் ஒன்றான மகா கார்த்திகை தீபத் திருவிழா, திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் திருக்கோவிலில் இன்று பக்திக் கோலாகலத்துடன் நிறைவேறியது. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் லட்சக்கணக்கானோர் இந்த புனிதமான ஜோதி தரிசனத்தைக் காணத் திருவண்ணாமலையில் திரண்டிருந்தனர். கோவிலில் சிறப்பு வழிபாடுகள் காலை முதலே அண்ணாமலையார் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் தொடங்கின. அண்ணாமலையார் – உண்ணாமுலை அம்மனுக்கு (அப்பிதகுசம்பு) சிறப்பு அபிஷேகம், திருச்சிலைகள் அலங்காரம், […]

Loading

செய்திகள்

கொட்டும் மழையில் திருவண்ணாமலையில் பரணி தீபம்

மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபம் திருவண்ணாமலை, டிச. 3– திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று அதிகாலை 4 மணிக்கு “பரணி தீபம்” ஏற்றப்பட்டது. இன்று மாலை 2668 அடி உயர மலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருத்தலம் விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிரசித்தி பெற்ற காா்த்திகை தீப திருவிழா கடந்த 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமர்சையாக நடந்து வருகிறது. கோயிலில் […]

Loading

செய்திகள்

‘குட் பேட் அக்லி’ படத்தில் இளையாராஜா பாடல்: தடையை நீக்க ஐகோர்ட் மறுப்பு

சென்னை, டிச. 3– ‘குட் பேட் அக்லி’ பட நிறுவனம் மைத்திரி மூவி மேக்கர்ஸ் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படத்தில், தன் அனுமதியில்லாமல், இளமை இதோ இதோ, ஒத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி மஞ்ச குருவி ஆகிய பாடல்களை பயன்படுத்தி உள்ளதாக கூறி, இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், ‘குட் பேட் […]

Loading

செய்திகள்

பதவி உயர்வு பெறும் 30 ஐ.பி.எஸ். அதிகாரிகள்: தயாராகிறது அதிரடி டிரான்ஸ்பர் பட்டியல்

சென்னை, டிச. 3-– தமிழக போலீஸ் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்ளிட்ட 3 கூடுதல் டிஜிபிக்கள், 7 ஐ.ஜி.க்கள், 3 டி.ஐ.ஜி.க்கள் உள்பட 30 ஐ .பி .எஸ் அதிகாரிகள் விரைவில் பதவி உயர்வு பெறவுள்ளனர். 2026ம் ஆண்டுக்கான ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கான பட்டியல் தமிழக தலைமை செயலாளருக்கு டிஜிபி மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக உள்ள டேவிட்சன் தேவாசீர்வாதம், சைபர் க்ரைம் கூடுதல் […]

Loading

செய்திகள்

வாடகை விதிமுறைகள் புதிய சட்டம்: வீட்டு உரிமையாளர்களுக்கு கட்டுப்பாடுகள்

சென்னை, டிச.3-– வாடகை விதிமுறைகள் புதிய சட்டம் 2025-ன்படி 2 மாத வாடகைக்கு மேல் முன்பணம் வசூலிக்கக்கூடாது, வாடகை ஒப்பந்தத்தை 60 நாட்களுக்குள் பதிவு செய்யாவிட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வீட்டு வாடகை விதிமுறைகள் சட்டம் 2025 விரைவில் அமலுக்கு வர இருக்கிறது. இந்த சட்டத்தின் விதிமுறைகள்படி வாடகைக்கு குடியேறுவோர் மற்றும் வீட்டு உரிமையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளும், புதிய விதிமுறைகளையும் கட்டாயமாக்கி யுள்ளன. இதன்படி இனி 2 மாத வாடகையை முன்பணமாக கொடுத்தால் […]

Loading

செய்திகள்

வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து நாடாளுமன்றத்தில் 9-ந் தேதி விவாதம்: மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி, டிச.3–- வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்ட தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து 9-ந் தேதி விவாதம் நடத்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளிலேயே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் தொடர்பாக விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இந்தநிலையில் 2-வது நாளாக நேற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இதே கோரிக்கையை வலியுறுத்தினார்கள். இதனால் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் கிரண் […]

Loading

செய்திகள்

ஆவடியில் மழை நீர் வெளியேற்றும் பணி: அமைச்சர்கள் நேரு, நாசர் நேரில் ஆய்வு

திருவள்ளூர், டிச. 3– திருவள்ளுர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட அண்ணனூர் ஜோதி நகர் பகுதியில் மழை வெள்ள நீர் வெளியேற்றும் பணிகள் தொடர்பாக அமைச்சர்கள் கே.என்.நேரு, சா.மு.நாசர் நேரில் ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது: முதலமைச்சர் ஆணையின்படி மாநிலத்தில் மழை நீர் தேங்கி நிற்காத வண்ணம் போர்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிகுட்டப்பட்ட […]

Loading

செய்திகள்

ஐயப்ப பக்தர்கள் ரெயில்களில் கற்பூரம் ஏற்றக் கூடாது: தெற்கு ரெயில்வே வலியுறுத்தல்

சென்னை, டிச. 3– ஐயப்ப பக்தர்கள் ரெயில்களில் கற்பூரம் ஏற்றக்கூடாது என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சபரிமலைக்கான வருடாந்திர யாத்திரை சீசனில் ஐயப்ப பக்தர்கள் தங்களது பயணக் காலத்தில் பக்தர்கள், சக பயணிகள் மற்றும் ரயில்வே சொத்துக்களைப் பாதுகாப்பதே இந்த வேண்டுகோளின் நோக்கம் ஆகும். ரயில் பெட்டிகளுக்குள் கற்பூரம் ஏற்றுவது ஒரு கடுமையான தீ அபாயத்தை ஏற்படுத்தும். ஏனெனில் ஒரு சிறிய தீ சுடர்கூட […]

Loading

செய்திகள்

2ம் நாள் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் அமளி: நாடாளுமன்றம் முடங்கியது

புதுடெல்லி, டிச. 2– நாடாளுமன்ற 2ம் நாள் கூட்டத்தொடரில் இன்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால், இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று துவங்கியது. வரும் 19ம் தேதி வரை நடக்கும் இந்த கூட்டத் தொடரில், முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் செங்கோட்டையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம், புதிய தொழிலாளர் சட்டங்கள், எஸ்.ஐ.ஆர்., விவகாரம் ஆகியவற்றை விவாதிக்க வலியுறுத்தி, எதிர்க்கட்சிகள் முதல் […]

Loading

செய்திகள்

தங்கம் ஒரு சவரன் ரூ.96,320க்கு விற்பனை

சென்னை, டிச.2– தங்கம் விலை இன்று ஒரு சவரன் ரூ.96,320க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த அக்டோபர் மாதம் 17-ந்தேதி ஒரு சவரன் ரூ.97,600 என்ற உச்சத்துக்கு சென்று, அதே மாதம் 28-ந்தேதி ஒரு சவரன் ரூ.88,600 என்ற நிலைக்கு வந்தது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை மீண்டும் உச்சத்தை நோக்கி பயணித்து வருகிறது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.90-ம், சவரனுக்கு ரூ.720-ம் அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,070-க்கும், சவரன் ரூ.96,560-க்கும் விற்பனை செய்யப்பட்டது. […]

Loading