செய்திகள்

அம்பேத்கர் நினைவு நாள்: ஜனாதிபதி, பிரதமர் மரியாதை

புதுடெல்லி, டிச. 6– அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு நாடாளுமன்றத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய சட்ட மேதை அம்பேத்கரின் 70வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் மகாபரிநிர்வான் திவாஸ் என்ற பெயரில் நடைபெறுகிறது. இதையொட்டி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் திருவுருவச் சிலைக்கு கீழே வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு […]

Loading

செய்திகள்

டிரம்புக்கு அமைதிக்கான பரிசு: கால்பந்து சம்மேளனம் வழங்கியது

வாஷிங்டன், டிச. 6– நோபல் பரிசுக்காக காத்திருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு கால்பந்து சம்மேளனம் அமைதிக்கான பரிசை வழங்கியது. அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா–பாகிஸ்தான் போர் உள்பட 8 போர்களை நிறுத்தியதாக தொடர்ந்து கூறி வருகிறார். இதற்காக தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.மேலும் இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு தனக்கு கிடைக்கும் என்று டிரம்ப் எதிர்பார்த்தார். ஆனால் வெனிசுலாவின் எதிர்க்கட்சி தலைவர் மரியாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்த […]

Loading

செய்திகள் முழு தகவல்

வடசென்னையில் வேகமாக உருவாகி வரும் எஸ்பிஆர் சிட்டி டவுன்ஷிப் திட்டம்

சென்னை, டிச. 5: எஸ்பிஆர் கட்டுமான நிறுவனத்தின் எஸ்பிஆர் சிட்டி திட்டம், உலகின் முன்னணி மாற்று முதலீட்டு நிறுவனத்தில் ஒன்றான ஓக்டிரி கேபிடல் நிறுவனத்திடமிருந்து ரூ.750 கோடி முதலீட்டை பெற்றுள்ளது. 209 பில்லியன் (அமெரிக்க டாலர்) மதிப்புள்ள சொத்துகளை மேலாண்மை செய்யும் ஓக்ட்ரீயின் இந்த முதலீடு, சென்னையின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த எஸ்பிஆர் சிட்டி டவுன்ஷிப்–இன் வலுவான அடிப்படைகளில் சர்வதேச முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வலுப்படுத்துகிறது. இந்த முதலீடு எஸ்பிஆரின் முக்கிய வணிகத் திட்டங்களுக்கு வேகத்தை கூட்டும், முக்கிய வர்த்தகத் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

போதைப்பொருள் கடத்தல் கப்பலை தாக்கிய அமெரிக்க ராணுவம் 4 பேர் பலி

வாஷிங்டன், டிச. 5: கிழக்கு பசிபிக் கடல் வழியாக போதைப்பொருள் கடத்தி வந்த கப்பல் மீது அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர். வெனிசுலாவில் இருந்து பசிபிக் மற்றும் கரீபியன் கடல் வழியாக போதைப்பொருள் கடத்தும் சம்பவத்திற்கு எதிராக, ‘ஆப்பரேஷன் சதர்ன் ஸ்பியர்’ என்ற பெயரில் அதிபர் டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா அரசு நிர்வாகம் கடும் நடவடிக்கையை எடுத்து வருகிறது. இந்த நிலையில், கிழக்கு பசிபிக் கடல் வழியாக கப்பலில் போதைப்பொருள் கடத்தி வருவதாக […]

Loading

செய்திகள்

ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி மலர்வளையம் வைத்து மரியாதை

சென்னை, டிச.5: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். 6 முறை தமிழக முதல்வராக பொறுப்புவகித்த ஜெயலலிதா 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் இன்று காலை 10.45 […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

ஜனாதிபதி மாளிகையில் ரஷ்ய அதிபர் புதினுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு

புதுடெல்லி, டிச. 5: டெல்லியில் நடந்த உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபர் புதினும் நடத்திய பேச்சுவார்த்தையில் பாதுகாப்பு, அணுசக்தி தொழில்நுட்பம் உட்பட பல்வேறு துறைகளில் இருநாடுகளுக்கு இடையே 25 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் புதினுக்கு, டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ராணுவ அணிவகுப்புடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. புதினை ஜனாதிபதி திரவுபதி முர்மு – பிரதமர் மோடி உள்ளிட்டோர் வரவேற்றனர். இதையடுத்து, ராணுவ இசைக் கலைஞர்களின் இசையுடன் கூடிய […]

Loading

செய்திகள்

அமித்ஷாவுடன் பேசியது என்ன ? ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

சென்னை, டிச. 5: அண்ணா தி.மு.க.வில் உள்ளவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று அமித்ஷாவிடம் வலியுறுத்தியதாக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி சென்னை மெரீனாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார். இதன்பின்னர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறுகையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். அந்த சந்திப்பின்போது தமிழகத்தில் இன்றைக்கு இருக்கும் அரசியல் சூழ்நிலையை அவரிடம் எடுத்துக் கூறினேன். அவர் தன்னுடைய […]

Loading

செய்திகள் முழு தகவல்

நெசவாளர் கூட்டுறவு சங்கங்களை அழிக்க தி.மு.க. முயற்சி: எடப்பாடி கடும் கண்டனம்

சென்னை, டிச.5: நெசவாளர் கூட்டுறவு சங்கங்களை அழிக்க முயற்சிக்கும் தி.மு.க. அரசுக்கு வரும் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகாட்டுவார்கள் என எடப்பாடி பழனிசாமி காட்டமாக கூறியுள்ளார். இதுகுறித்து அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலம் முதல் ஏழை , எளிய மக்களுக்கும்; முதியோர் உதவித் தொகை பெறுபவர்களுக்கும், விலையில்லா வேட்டி, சேலை ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அண்ணா தி.மு.க. ஆட்சிக் காலங்களில் தரமான […]

Loading

செய்திகள்

4-வது நாளாக தொடரும் குளறுபடி: இண்டிகோவின் 400 விமானங்கள் ரத்தால் பயணிகள் அவதி

சென்னை, டிச. 5: ஊழியர்கள் பற்றாக்குறையை காரணம் கூறி, ‘இண்டிகோ’ நிறுவனம் தொடர்ந்து விமானங்களை ரத்து செய்து வருவதால், ஆயிரக்கணக்கான பயணியர் பாதிக்கப்பட்டுள்ளனர். தேவையான விமான பணியாளர்களை அமர்த்துவதில் ஏற்பட்ட சிக்கல் மற்றும் விமான போக்குவரத்து அட்டவணைகளில் ஏற்பட்ட மாற்றங்களால் இண்டிகோ விமான நிறுவனத்தின் செயல்பாடுகள் கடந்த 3 நாட்களாக பாதிக்கப்பட்டது. இதில் டெல்லி விமான நிலையத்தில் 172 விமானங்களும், மும்பை விமான நிலையத்தில் 118 விமானங்களும், பெங்களூருவில் 100 விமானங்களும், ஐதராபாத்தில் 75 விமானங்களும், கொல்கத்தாவில் […]

Loading

செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 சரிவு

சென்னை, டிச. 5: சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து, ஒரு சவரன் ரூ.96 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.20 குறைந்து, ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்திற்கு விற்பனை ஆகிறது. சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (டிச.,03)ஆபரண தங்கம் கிராம் 12,060 ரூபாய்க்கும், சவரன் 96,480 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 201 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று தங்கம் […]

Loading