செய்திகள்

சென்னையில் போதைப் பொருள் விற்பனை:

பெங்களூருவில் பதுங்கியிருந்த 2 வெளிநாட்டு ஆசாமிகள் உள்பட 3 பேர் கைது சென்னை, டிச. 8– வானகரம் பகுதியில் மெத்தம்பெட்டமைன் வைத்திருந்த வழக்கில் 8 நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்பில் இருந்த சூடான் மற்றும் நைஜீரியா நாட்டைச்சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டன. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின்பேரில், போதை பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு சென்னை பெருநகரில் போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு குற்றவாளிகளையும், வலைபின்னல் தொடர்புகளில் உள்ளவர்களையும் […]

Loading

செய்திகள்

விமான கட்டணத்தை அதிகபட்சம் ரூ.18 ஆயிரம் வரை வசூலிக்க மத்திய அரசு உத்தரவு

இண்டிகோ விமானங்கள் ரத்து எதிரொலி புதுடெல்லி, டிச.7- இண்டிகோ விமானங்கள் ரத்து காரணமாக கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனையடுத்து கட்டணத்தை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. அதிகபட்சம் ரூ.18 ஆயிரம் வரை வசூலிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான பணியாளர்களின் பணி நேரத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை தொடர்ந்து இண்டிகோ நிறுவனம் பணியாளர் பற்றாக்குறையால் தவித்து வருகிறது. அட்டவணையிடப்பட்ட விமானங்களை இயக்க விமானிகள் மற்றும் பிற பணியாளர்கள் போதுமான அளவில் இல்லை. இதனால் அந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. கடந்த […]

Loading

செய்திகள்

தி.மு.க. நகர்மன்ற தலைவர் கார் மோதி ஐயப்ப பக்தர்கள் உள்பட 5 பேர் பலி

ராமநாதபுரம் அருகே இன்று அதிகாலை ராமநாதபுரம், டிச. 6– ராமநாதபுரத்தில் சாலை ஓரம் நின்று கொண்டிருந்த ஆந்திர மாநில ஐயப்ப பக்தர்களின் கார் மீது கீழக்கரை திமுக நகர்மன்ற தலைவரின் கார் அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஐய்யப்ப பக்தர்கள் 4 பேர் உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ராமநாதபுரம் கீழக்கரை தி.மு.க. நகரமன்ற தலைவர் தனது நண்பர்கள் 7 பேருடன் காரில் ஏர்வாடியில் இருந்து கீழக்கரைக்கு இன்று அதிகாலை 3 மணிக்கு சென்றார். […]

Loading

செய்திகள்

இலங்கைக்கு கப்பல்களில் 950 மெட்ரிக் டன் நிவாரணப் பொருட்கள் முதலமைச்சர் ஸ்டாலின் அனுப்பினார்

* சர்க்கரை * பால்பவுடர் * 5000 வேட்டி – 5000 சேலைகள் ‘டிட்வா’ புயலால் மோசமான பாதிக்கப்பட்டிருக்கும் சென்னை, டிச. 6– முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ,‘டிட்வா’ புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டு, நெருக்கடியில் சிக்கித் தவித்து இன்னலுறும் இலங்கை வாழ் மக்களுக்கு தமிழ்நாட்டு மக்களின் சார்பில் உதவிடும் வகையில் சென்னை துறைமுகத்திலிருந்து 650 மெட்ரிக் டன்னும், தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து 300 மெட்ரிக் டன்னும் என மொத்தம் 950 மெட்ரிக் டன் நிவாரணப் பொருட்களை இலங்கை […]

Loading

செய்திகள்

த.வெ.க.வில் இணைந்த நாஞ்சில் சம்பத்

சென்னை, டிச.6- த.வெ.க. தலைவர் விஜய்யை, நாஞ்சில் சம்பத் நேற்று சந்தித்து தன்னை த.வெ.க.வில் முறைப்படி இணைத்துக்கொண்டார். இதுகுறித்து நாஞ்சில் சம்பத் கூறியதாவது:- தமிழக அரசியலில் அதிக அளவு இளைஞர்களை விஜய் ஈர்த்து வைத்து இருக்கிறார். விஜய் என்னிடம் நான் உங்கள் ரசிகன் என்றார். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. தி.மு.க. ஆதரவாளராக இருந்த என்னை தி.மு.க.வினர் அநாகரீகமாக நடத்தினர். தி.மு.க.வில் நான் சைக்கிள் கூட கேட்டதில்லை, கேட்டாலும் கிடைக்காது, அது வேறு. விஜய்க்கு ஆதரவாக நான் […]

Loading

செய்திகள்

நடுவானில் ஏர்–இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

மும்பை, டிச. 6– ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருந்த போது வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பயணிகள் அச்சம் அடைந்தனர். மும்பையில் இருந்து வாரணாசிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது. நடுவானில் விமானம் பறந்து கொண்டு இருக்கும் போது, விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த மிரட்டல் குறித்து உடனடியாக வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் குழுவுக்கு தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் விமானம் வாரணாசி விமான நிலையத்தில் அவசரமாக இறக்கப்பட்டு […]

Loading

செய்திகள்

இண்டிகோ விமான சேவை ரத்து: சென்னை – பெங்களூர் இடையே சிறப்பு ரெயில் சேவை

எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு சென்னை, டிச. 6– இண்டிகோ விமான சேவை ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டன. நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். இந்த நிலையில், பாதிக்கப்பட்டுள்ள பயணிகள் வசதிக்காக தொலைதூர ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- திருச்சியில் இருந்து ஜோத்பூர் செல்லும் ஹம்சபார் எக்ஸ்பிரஸ் ரெயிலில் […]

Loading

செய்திகள்

சென்னையில் ஆன் லைன் வர்த்தகத்தில் ரூ. 12 லட்சம் மோசடி: பெண் உள்பட 3 பேர் கைது

சென்னை, டிச. 6– ஆன்லைன் வர்த்தகம் மற்றும் பண முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி ரூ.12 லட்சம் பெற்று மோசடி செய்த பெண் உட்பட 3 பேரை மேற்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். சென்னை, நொளம்பூர், ஸ்ரீராம் நகர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த சௌந்தராஜன், தனது முகநூல் பக்கத்தை பார்த்துக் கொண்டிருந்தபோது, ஆன்லைன் வழியாக வர்த்தகம் செய்தும், ஸ்டாக் மார்க்கெட்டில் பண முதலீடு செய்து ஸ்டாக்குகளை வாங்கி குறைந்த […]

Loading

செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரிப்பு

சென்னை, டிச. 6– சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ஒரு சவரன் ரூ.96,320க்கு விற்பனை ஆகிறது. கடந்த சில மாதங்களாகவே வரலாறு காணாத வகையில் தங்கம் விலை உச்சத்தை தொட்டி வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து, 12,020 ரூபாய்க்கும், சவரனுக்கு 320 ரூபாய் சரிவடைந்து 96,160 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. நேற்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 […]

Loading

செய்திகள்

திருவண்ணாமலை எடப்பாளையம் ஏரியில் 33 ஏக்கர் பரப்பளவில் ‘மு.க.ஸ்டாலின்’ சுற்றுச்சூழல் சுற்றுலா பூங்கா

திருவண்ணாமலை,டிச.6- திருவண்ணாமலை எடப்பாளையம் ஏரியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் 33 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு உள்ள மு.க.ஸ்டாலின் சுற்றுச்சூழல் சுற்றுலா பூங்காவை தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார். திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மு.க.ஸ்டாலின் சுற்றுச்சூழல் சுற்றுலா பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, எம்.பி.க்கள் சி.என்.அண்ணாதுரை, எம்.எஸ்.தரணிவேந்தன், அந்தியூர் செல்வராஜ், எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், […]

Loading