செய்திகள்

காங்கிரஸ் எம்.பி.க்களுடன் ராகுல்காந்தி ஆலோசனை

புதுடெல்லி, டிச. 12: காங்கிரஸ் எம்.பி.க்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆலோசனை மேற்கொண்டார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் 1–ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அவையில் தேர்தல் சீர்திருத்தம், எஸ்ஐஆர், இண்டிகோ விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன. வருகிற டிசம்பர் 19–ந்தேதியுடன் கூட்டத்தொடர் நிறைவு பெற உள்ள நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று மக்களவை காங்கிரஸ் எம்.பி.க்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். தற்போது அவையில் நடைபெற்று வரும் விவாதங்கள், இனி […]

Loading

செய்திகள்

ஒரு லட்சத்தை நெருங்கும் தங்கம் விலை

சென்னை, டிச.12: வரலாறு காணாத புதிய உச்சமாக தங்கம் விலை அசுர வேகத்தில் உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1600 அதிகரித்து ஒரு சவரன் ரூ.98 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்​வ​தேச பொருளா​தார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்​திய ரூபா​யின் மதிப்பு ஆகிய​வற்​றின் அடிப்படை​யில், தங்​கத்​தின் விலை நிர்​ண​யிக்​கப்​படுகி​றது. சர்வதேச அளவில் முதலீட்டாளர்கள் தங்கம் மற்றும் வெள்ளியில் அதிகளவில் முதலீடு செய்யத் தொடங்கி உள்ளனர். இதனால் இவற்றின் தேவை […]

Loading

செய்திகள்

38 மாவட்டங்களில் அரசுக் கல்லூரிகளுக்கான உதவிப்பேராசிரியர் தேர்வு

சென்னை, டிச.12: ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கைப்படி 2025–ம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவிப்பேராசிரியர் தேர்வு எதிர்வரும் 27–ந் தேதி அன்று (காலை மற்றும் மாலை) நடத்தப்பட உள்ளது. இத்தேர்வு 38 மாவட்டங்களிலும் 195 மையங்களில் நடைபெற உள்ளது. தேர்வர்கள் தேர்வு நடைபெறும் மையம் சார்ந்த விவரங்கள் தேர்வர்களின் நுழைவுச் சீட்டில் உள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பித்த தேர்வர்களுக்கு நுழைவுச் சீட்டு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் […]

Loading

செய்திகள் முழு தகவல்

ஆந்திராவில் பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து: 9 பேர் பலி

அமராவதி, டிச. 12: ஆந்திராவில் பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 35 பேர் தனியார் பேருந்து ஒன்றில் பத்ராசலம் பகுதியில் உள்ள ராமர் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளனர். அங்கு தரிசனம் முடிந்த பிறகு அன்னாவரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Loading

செய்திகள்

தமிழக பொறுப்பு டிஜிபி பதவி: அபய் குமார் சிங்கிற்கு கூடுதலாக ஒப்படைப்பு

சென்னை, டிச. 12: தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவின் இயக்குநர் அபய்குமார் சிங் பொறுப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். தமிழ்நாடு காவல்துறையின் பொறுப்பு டிஜிபியாக கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் வெங்கட்ராமன் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் பொறுப்பு டிஜிபி​யாக உள்ள வெங்​கட​ராமனுக்கு நேற்று முன்​தினம் சுவாசிப்​ப​தில் சிரமம் இருந்​த​தாகக் கூறப்​படு​கிறது. இதையடுத்து அவர் கிண்டி கலைஞர் நூற்​றாண்டு உயர் சிறப்பு மருத்​து​வ​மனைக்​குச் சென்​றார். அங்கு சில மருத்​து​வப் பரிசோதனை​கள் மேற்​கொள்​ளப்​பட்டன. தொடர்ந்​து, அப்​போலோ மருத்​து​வ​மனை​யில் […]

Loading

செய்திகள்

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத் தூண் அல்ல : தமிழக அரசு வாதம்

மதுரை, டிச. 12: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத் தூண் அல்ல என்று தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடந்த 1-ந்தேதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக திருப்பரங்குன்றம் கோவில் செயல் அலுவலர் சார்பிலும், மதுரை மாவட்ட கலெக்டர் சார்பிலும் தனித்தனியாக மதுரை ஐகோர்ட் டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் இந்து அமைப்புகளை சேர்ந்த ராம ரவிக்குமார், […]

Loading

செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் ரூ.11.5 கோடி தங்கம் பறிமுதல்

சென்னை, டிச. 12: துபாயிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.11.5 கோடி 9.46 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.. இதுதொடர்பாக விமானப் பணியாளா்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். துபாயிலிருந்து சென்னைக்கு வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த விமானத்தில் வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். யாரிடமும் தங்கம் சிக்கவில்லை. இதையடுத்து, சந்தேகத்தின்பேரில், அந்த விமானத்தில் வந்த 2 விமான ஊழியர்களை […]

Loading

செய்திகள்

கள்ளக்குறிச்சி புதிய கலெக்டர் அலுவலக திறப்பு விழா முன்னேற்பாடுப் பணி

கள்ளக்குறிச்சி, டிச. 12: கள்ளக்குறிச்சி அருகே உள்ள வீரசோழபுரத்தில் கட்டப்பட்டு வரும் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விரைவில் திறக்கப்படவுள்ள நிலையில், அலுவலகக் கட்டுமான நிறைவுப் பணிகள் மற்றும் திறப்பு விழா முன்னேற்பாடு பணிகளை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முதலமைச்சர் ஆணைக்கிணங்க, கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் நிர்வாகப் பயன்பாட்டிற்காக கள்ளக்குறிச்சி வட்டம், வீரசோழபுரத்தில் அனைத்து வசதிகளுடன், அனைத்துத் துறைகளும் ஒரே இடத்தில் […]

Loading

செய்திகள்

வீட்டில் கருக்கலைப்பு செய்ததால் கர்ப்பிணி உயிரிழப்பு

தர்மபுரி, டிச. 12: வீட்டில் கருக்கலைப்பு செய்தததால் கர்ப்பிணி உயிரிழந்து தொடர்பாக கணவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள பூச்சூரை சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மனைவி ரம்யா (வயது 26). இவர்களுக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ரம்யா மீண்டும் கர்ப்பம் தரித்தார். கடந்த 1-ந் தேதி ரம்யா மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து இறந்துவிட்டதாக அவரது […]

Loading

செய்திகள்

சென்னையில் ஆன் லைன் ஆப் மூலம் போதைப் பொருள் விற்பனை

சென்னை, டிச. 12: சென்னை நந்தம்பாக்கம் பகுதியில் ‘கிரிடர்’ ஆப் மூலம் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் விற்பனை செய்த 2 நபர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின்பேரில், போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை கண்காணித்து முழுவதுமாக கட்டுப்படுத்திட பல்வேறு தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், தனிப்படையினர் மற்றும் நந்தம்பாக்கம் காவல் ஆய்வாளர் […]

Loading