செய்திகள் நாடும் நடப்பும்

அமெரிக்க படை வீரர்களுக்கு தலா ரூ.1.60 லட்சம் கிறிஸ்துமஸ் பரிசு: அதிபர் டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன், டிச. 18: அமெரிக்காவின் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசாக தலா ரூ.1.60 லட்சம் வழங்கப்படும் என்று அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். சேவை மற்றும் தியாகத்தைப் போற்றும் வகையில், ’வீரர்களுக்கான ஈவுத்தொகை’ வழங்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். அதிபர் டிரம்ப் அமெரிக்க மக்களுக்கு ஆற்றிய உரையில் கூறியதாவது:– “நான் பதவிக்கு வந்த முதல் நாளிலேயே, நாட்டின் தெற்கு எல்லையில் நடந்த ஊடுருவலைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுத்தேன். கடந்த 7 மாதங்களாக ஒரு வெளிநாட்டினர் கூட சட்டவிரோதமாக […]

Loading

செய்திகள் முழு தகவல்

தி.மு.க. ஒரு தீயசக்தி, த.வெ.க. ஒரு தூயசக்தி என்று விஜய் ஆவேசம்

ஈரோடு பெருந்துறையில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் சந்திப்புக் கூட்டம் நடந்தது. ஏற்கெனவே கரூர் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், முன்னெச்சரிக்கையாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. விஜய் உள்ளிட்ட தலைவர்கள் பேசுவதற்கு மேடை எதுவும் அமைக்கப்படவில்லை. மக்கள் அமருவதற்கு நாற்காலிகளும் போடப்படவில்லை. பரப்புரை பேருந்தில் நின்று விஜய் பேசுவதை, தடுப்புகளுக்குள் நின்று மக்கள் கேட்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. கூட்ட நெரிசல் எதுவும் ஏற்படாத வகையில் 20 ஏக்கர் பரப்பளவில் 72 பிரிவுகளாகப் […]

Loading

செய்திகள்

100 நாள் வேலை திட்டத்துக்கு ஆபத்து எடப்பாடி பழனிசாமி, எப்படி முட்டுக்கொடுக்க போகிறார்? முதல்வர் ஸ்டாலின் கேள்வி

சென்னை, டிச.18: 100 நாள் வேலை திட்டத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதற்கு எடப்பாடி பழனிசாமி எப்படி முட்டுக்கொடுக்க போகிறார்? என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:-– “பச்சைத்துண்டு போட்டுக்கொண்டு பச்சை துரோகம் செய்பவருக்கு, மீண்டும் விவசாயிகள் கண்ணில் தெரியவில்லையா? கிராமப்புற ஏழை மக்களின் வயிற்றிலேயே அடிக்கும் விக் ஷித் பாரத்-ரோஜ்கர் மற்றும் அஜீவிகா மிஷன்’ திட்டம் குறித்து எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வின் […]

Loading

செய்திகள் முழு தகவல்

“எம்.ஜி.ஆருக்கு அடுத்தது விஜய்–தான்”: ஈரோட்டில் செங்கோட்டையன் பெருமிதம்

ஈரோடு, டிச. 18: மக்களுக்காக புரட்சித் தலைவருக்குப் பிறகு புரட்சித் தளபதிதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார். தவெக தலைவர் விஜய் 500 கோடி வருமானத்தை விட்டுவிட்டு மக்களுக்கு சேவையாற்ற வந்துள்ளார் என்றும் அவர் கூறினார். ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் சரளையில் இன்று தவெக சார்பில் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்காக தவெக தலைவர் விஜய் இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலமாக […]

Loading

செய்திகள்

பழனி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.2.62 கோடி

பழனி, டிச. 18: பழனி முருகன் கோவிலி்ல் ரூ. 2.62 கோடி உண்டியல் காணிக்கை வந்துள்ளது. அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இங்கு சாமி தரிசனம் செய்ய வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து தினமும் திரளான பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வருபவர்கள் கோவிலில் தரிசனம் முடித்த பின்பு, அங்குள்ள உண்டியல்களில் பணம், நகை, நவதானியங்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். இந்த உண்டியல்கள் நிரம்பியவுடன், அதிலுள்ள பணம், பொருட்கள் கோவில் நிர்வாகம் சார்பில் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

அடுத்த தலைமுறைக்கான தொழில்நுட்பங்கள்: எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் சார்பில் 2 மாநாடு

சென்னை,, டிச.18: சென்னை ராமாபுரம் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் சார்பில் தகவல் தொடர்பு கணினி பொறியியல் தொழில்நுட்பத்துறை சார்பில் இயந்திர நுண்ணறிவு மற்றும் அடுத்த தலைமுறைகளுக்கான தொழில் நுட்பங்கள் குறித்த 2 நாள் சர்வதேச மாநாடு ஓமன் சுல்தானகத்தின் மஸ்கட் கல்லூரியுடன் இணைந்தது. பல்கலைக்கழக வளாகத்தில் டிசம்பர் 17 மற்றும் 18 இரண்டு நாள் மாநாடு ராமாபுரம் எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனங்கள் குழும தலைவர் முனைவர் ஆர். சிவக்குமார் மற்றும் இணை தலைவர் முனைவர் எஸ்.நிரஞ்சன் ஆகியோர் தலைமையில் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

இந்தியன் பைன் ஆர்ட்ஸ் சொசைட்டியின் இசை விழாவில் சங்கீத கலாசிகாமணி பட்டம்: ஐஐடி இயக்குனர் காமகோடி வழங்கினார்

சென்னை, டிச.18: சென்னையின் பழமையான சபைகளில் ஒன்று, இந்தியன் பைன் ஆர்ட்ஸ் சொசைட்டியாகும். அதன் 93-ம் ஆண்டு தென்னிந்திய இசைக் கருத்தரங்கம் மற்றும் விழா நேற்று தொடங்கியது. சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டி முன்னிலையில் இந்த விழாவை தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குனர் (ஐஐடி) பேராசிரியர் காமகோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின்போது காமகோடி, லால்குடி ஜி.ஜே.ஆர்.கிருஷ்ணன் மற்றும் லால்குடி விஜயலட்சுமி ஆகியோருக்கு சங்கீத கலாசிகாமணி பட்டத்தையும் ரொக்கப் பரிசையும் வழங்கினார். நல்லி குப்புசாமி […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2025: சிமாட்ஸ் என்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் சாதனை

சென்னை, டிச. 18: சிமாட்ஸ் என்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள், தேசிய அளவில் நடைபெற்ற ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2025 போட்டியில் முதல் இடத்தை பெற்றுள்ளனர். இதன் மூலம் அவர்கள் ரூ.1.5 லட்சம் ரொக்க பரிசையும் வென்றுள்ளனர். இந்த வெற்றி, சிக்கிம் மாநில சுற்றுலாத் துறைக்காக உருவாக்கப்பட்ட தொழில்நுட்ப தீர்வின் மூலம் கிடைத்தது. “சிக்கிம் மடாலயங்களை டிஜிட்டல் வடிவில் மாற்றி, சுற்றுலா மற்றும் பண்பாட்டு பாதுகாப்புக்காக வெளிப்படுத்துதல்” என்ற அரசின் அதிகாரப்பூர்வ பிரச்சினைத் தலைப்பில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டது. நாடு முழுவதிலிருந்தும் பல அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில், பல கட்ட மதிப்பீட்டுக்குப் பிறகு 5 அணிகள் மட்டுமே இறுதிச்சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டன. […]

Loading

செய்திகள்

ஓ.என்.ஜி.சி. குரூப் நிறுவனத்துக்கு 50 கோடி டாலர் கடன்: பரோடா வங்கி வழங்க ஒப்பந்தம்

சென்னை, டிச. 18: பரோடா வங்கி ஓ.என்.ஜி.சி. விதேஷ் (ஓவிஎல்) முழு உரிமை துணை நிறுவனமான ஓவிஎல் ஓவாசீஸ் (ஓஓஐஎல்) நிறுவனத்துக்கு 50 கோடி டாலர் அளவிலான 5 ஆண்டு வெளிநாட்டு நாணய காலக் கடன் வசதிக்கு ஒப்பந்தம் அளித்துள்ளது. இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:– இந்த 50 கோடி டாலர் வசதிக்கான ஒப்பந்தம், பரோடா வங்கியின் ஒருங்கிணைந்த வெளிநாட்டு நாணய கடன் திறனை வெளிப்படுத்துகிறது. இந்த பரிவர்த்தனை, கிப்ட் சிட்டியின் வளர்ச்சி […]

Loading

செய்திகள்

தேர்தல் வருவதால் ‘லேப்டாப்’ நாடகம் நடத்துகிறார் ஸ்டாலின்: எடப்பாடி கடும் கண்டனம்

சென்னை, டிச.18: நான்கரை ஆண்டுகளாக மாணவர்களை வஞ்சித்துவிட்டு இப்போது தேர்தல் வருவதால் மாணவர்களுக்கு ‘லேப்டாப்’ வழங்க நாடகத்தை அரங்கேற்றுகிறார் ஸ்டாலின் என்று எடப்பாடி பழனிசாமி காட்டமாக கூறினார். ஜெயலலிதா, பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர் அனைத்து வகைகளிலும் அறிவுப்பூர்வமாக கல்வி பயின்று, தங்களது வாழ்க்கையில் சிறந்து விளங்கிட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு தமது ஆட்சிக் காலத்தில் விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி சாதனை படைத்தார். ஜெயலலிதா வழியில் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமியும், […]

Loading