செய்திகள்

10 ஆண்டுகளுக்கு மேல் விபத்தின்றி பேருந்து இயக்கிய ஒட்டுநர்களுக்கு பரிசு வேலூர் கலெக்டர் சுப்புலெட்சுமி வழங்கினார்.

வேலூர், டிச. 20– வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (வி) வேலூர் மண்டலம் சார்பில் பாதுகாப்பான பேருந்து இயக்கம் குறித்து ஓட்டுநர்களுக்கு பயிற்சி வகுப்பினை கலெக்டர் வே.இரா.சுப்புலெட்சுமி ரங்காபுரத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்தில் தொடங்கி வைத்தார். இப்பயிற்சி வகுப்பில் 10 ஆண்டுகளுக்கு மேல் விபத்தின்றி பேருந்து இயக்கிய 20 ஒட்டுநர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் பேருந்து […]

Loading

செய்திகள்

வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை: விழுப்புரம் கலெக்டர் வழங்கினார்

விழுப்புரம், டிச. 20– விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில், மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமினை கலெக்டர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிக்குமார், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா. லட்சுமணன் ஆகியோர் முன்னிலையில் துவக்கி வைத்து, தோ்வு பெற்றவர்களுக்கு […]

Loading

செய்திகள்

கடலூரில் மரக்கன்றுகள் நடும் திட்டம்: கலெக்டர் சிபி ஆதித்யா தொடங்கி வைத்தார்

கடலூர், டிச. 20– கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட அளவிலான மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் ஒரு பகுதியாக பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் சார்பில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், பசுமை பரப்பளவினை அதிகரிக்கும் வகையில் மரக்கன்றுகளை நடவு செய்யும் பணியினை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது: முதலமைச்சர் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்திடவும், எதிர்வரும் காலங்களில் காலநிலையினை சீராக்கிடும் பொருட்டு பல்வேறு முன்னெடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பசுமை தமிழ்நாடு மிஷன், […]

Loading

செய்திகள் முழு தகவல்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் விடிய விடிய போராட்டம் 700 செவிலியர்கள் கைது

எடப்பாடி, அண்ணாமலை கண்டனம் சென்னை, டிச. 19: சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 700 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கைது செய்யப்பட்டனர். திமுக அரசு தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதியின்படி தங்களின் பணிகளை நிரந்தரப்படுத்த வேண்டும், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் மீதான மேல்முறையீட்டை கைவிட்டு, செவிலியர்களுக்கு வேலைக்கான ஊதியம் வழங்க வேண்டும் என்றும், செவிலியர் கண்காணிப்பாளர் நிலை 3 பணியிடங்களை மீண்டும் உருவாக்கிட வேண்டும் என்றும், கொரோனா பெருந்தொற்று காலத்தில் பணி […]

Loading

செய்திகள்

சென்னை சர்வதேச திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்

சென்னை, டிச. 19– 23-வது சர்வதேச சென்னை திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை டூரிஸ்ட் பேமலி படத்தில் நடித்த நடிகர் சசிகுமாருக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது. சென்னை சர்வதேச திரைப்பட விழா ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் 23வது சென்னை சர்வதேச திரைப்பட விழா கடந்த 11ந் தேதி தொடங்கியது. சென்னை பிவிஆர் சினிமாஸில் நடைபெற்று வரும் இந்த விழா இன்றுடன் நிறைவடைந்தது. இந்த விழாவில் ஜெர்மன், ரஷ்யா, ஸ்பெயின், பிரெஞ்ச், தாய்வான் […]

Loading

செய்திகள்

தீய சக்தியை ஆட்சியில் இருந்து அகற்றுங்கள் சிறுபான்மை மக்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

சென்னை, டிச.19– தி.மு.க. என்னும் தீய சக்தியை ஆட்சியில் இருந்து அகற்ற அண்ணா தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தாருங்கள் என்று சிறுபான்மை மக்களை எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார். அண்ணா தி.மு.க. சார்பில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள சிஎஸ்ஐ தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற அண்ணா திமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏழை, எளிய மக்களுக்கு தையல் மிஷின், இஸ்திரிப்பெட்டி, மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கரவாகனம் போன்ற நலத்திட்ட உதவிகளும் இனிப்புகள் அடங்கிய […]

Loading

செய்திகள்

பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவர்களுக்கு அமைச்சர்கள் பரிசு வழங்கினர்

சென்னை, டிச.19: “சாதி ஒழிப்பே சமூக விடுதலை” என்னும் தலைப்பில் கல்லூரி மாணவர்களிடையே பேச்சுப்போட்டி நடத்தி அதில் வெற்றி பெற்ற 11 மாணவர்களுக்கு அமைச்சர்கள் பி.கீதா ஜீவன், கோவி. செழியன் ஆகியோர் பரிசுகள் வழங்கி வாழ்த்தினார்கள். “சமூக சமத்துவத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் மேம்படுத்தும் சிந்தனையை வளர்த்தெடுக்கவும், சீரிய சமூகத்தை அமைக்க வழிவகுக்கவும், மாணவ சமூகத்தினரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி சமூக நீதியை நிலை நிறுத்தும் நோக்கத்துடனும் சமூக சீர்திருத்தத் துறையின் கீழ் இயங்கும் சமூகநீதிக் கண்காணிப்புக் குழு, சமூக […]

Loading

செய்திகள்

அரசியல் பொதுக்கூட்ட வழிகாட்டு நெறிமுறைகளை ஜனவரி 5–ந் தேதிக்குள் வெளியிட வேண்டும் தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை, டிச. 19: அரசியல் பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோவுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஜனவரி 5ம் தேதிக்குள் தமிழக அரசு வகுக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கரூரில் செப்டம்பர் 27–ந் தேதி விஜய் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியாகினர். இதையடுத்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அரசியல் கட்சித் தலைவர் களின் ரோடு ஷோ மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு, எஸ்.ஓ.பி., எனும் நிலையான வழிகாட்டு விதி முறைகளை வகுக்கக் […]

Loading

செய்திகள்

கடும் பனியால் சென்னையில் ரெயில்கள் தாமதம் விமானங்கள் ரத்து

சென்னை, டிச. 19– சென்னையில் நிலவிய பனிப் பொழிவு காரணமாக புறநகர் ரெயில்கள் இன்று காலை தாமதமாக இயக்கப்பட்டன. சென்னை விமான நிலையத்தில் 7 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் தீவிரம் குறைந்துள்ள நிலையில் கடந்த சில நாள்களாக படிப்படியாக பனிப் பொழிவு அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் சென்னை மற்றும் புறநகரில் நிலவிய கடும் பனிப்பொழிவு காரணமாக புறநகர் ரெயில்கள் 10 முதல் 20 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. இதனிடையே டெல்லி உள்ளிட்ட […]

Loading

செய்திகள்

சென்னையில் பிட்புல், ராட்வீலர் நாய் வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம்

சென்னை, டிச. 19: சென்னையில் பிட்புல் மற்றும் ராட்வீலர் ரக நாய் வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கும் தீர்மானம் சென்னை மாநகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் வாக்காளர் திருத்த சிறப்பு பணிகளுக்காக கடந்த மாதம் நடைபெறவில்லை. இதன் காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை) சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் பிரியா ராஜன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு கழிவறைகளுடன் கூடிய ஓய்வறைகள் 200 வார்டுகளிலும் ரூ.25.95 கோடி […]

Loading