செய்திகள்

ஓடும் ரயில்களில் கல் வீசுவோர் மீது கடும் நடவடிக்கை: தெற்கு ரயில்வே எச்சரிக்கை

சென்னை, டிச. 21– ஓடும் ரயில்களில் கல் வீசுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஓடும் ரயில்கள் மீது கல் வீசும் சம்பவங்களைக் கட்டுப்படுத்த, ரயில்வே காவல்துறை உடன் இணைந்து, ரயில்வே பாதுகாப்புப் படை கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதுவரை 37-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ரயில் தண்டவாளங்களுக்கு அருகே விளையாடும் சிறுவர்களே இதுபோன்ற பல சம்பவங்களில் ஈடுபடுவதாகவும், இதை அவர்கள் பெரும்பாலும் ஒரு விளையாட்டாகக் கருதுவதாகவும் […]

Loading

செய்திகள்

ஜார்க்கண்டில் மருத்துவமனையின் இறந்த குழந்தையை பிளாஸ்டிக் பையில் கொண்டு சென்ற அவலம்

ராஞ்சி, டிச. 21– ஜார்கண்டில் மருத்துவமனையில் பழங்குடியினத்தை சேர்ந்தவருக்கு ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்படாததால், இறந்த 4 மாத குழந்தையின் உடலை பிளாஸ்டிக் பையில் வைத்துக்கொண்டு பேருந்தில் வீடு திரும்ப வேண்டிய அவலம் நிகழ்ந்துள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தின் நோமுண்டி தொகுதியில் உள்ள பால்ஜோரி கிராமத்தில் வசிக்கும் பழங்குடியினத்தை சேர்ந்த டிம்பா சதோம்பா என்பவரின் 4 மாதக் குழந்தைக்கு சுவாசப் பிரச்சினை தொடர்பாக சைபாஸாவில் உள்ள சதார் மருத்துவமனையில் 2 நாட்களுக்கு முன் அனுமதித்திருந்தார். இருப்பினும், சிகிச்சைப் பலனின்றி நேற்று […]

Loading

செய்திகள்

குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை: டாக்டர் மீது மருத்துவ கல்லூரி மாணவி புகார்

சென்னை, டிச. 21– குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக டாக்டர் மீது மருத்துவக் கல்லூரி மாணவி புகார் கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பி.எஸ்.சி. பிசியோதெரபி படித்து வருகிறார். 4-ம் ஆண்டு மாணவியான இவர் பெரம்பூரில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் பயிற்சி பெற்று வந்தார். அந்த ஆஸ்பத்திரியில் ரூ.4 ஆயிரம் சம்பளத்துடன் பயிற்சி பெற்ற […]

Loading

செய்திகள்

தென் ஆப்ரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 3 குழந்தைகள் உட்பட 11 பேர் பலி

ஜோகன்னஸ்பர்க், டிச. 21– தென் ஆப்ரிக்காவில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 குழந்தைகள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் அருகே பெக்கர்ஸ்டால் நகரில், மர்மநபர்கள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 3 குழந்தைகள் உட்பட 11 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு இருக்கின்றனர். இந்த பயங்கரமான துப்பாக்கிச்சூடு […]

Loading

செய்திகள்

700 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் எலான் மஸ்க் முதலிடம்

வாஷிங்டன், டிச. 21– டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு 700 பில்லியன் டாலரைத் தாண்டியது. ஸ்பேஸ்எக்ஸ், ஸ்டார்லிங்க், டெஸ்லா நிறுவனங்களின் நிறுவனரான எலான் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு 700 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உயர்ந்து, உலகின் முதல் பெரும் பணக்காரராக மேலும் உயர்ந்துள்ளார். டெஸ்லா நிறுவனத்தின் மீதான வழக்கில், எலானுக்கு சாதகமாக தீர்ப்பு அமைந்ததால், எலானின் நிகர சொத்து மதிப்பு 749 பில்லியன் டாலர் என்றளவில் உயர்ந்தது. கடந்த அக்டோபர் மாதத்தில் […]

Loading

செய்திகள்

1,000 அரங்குகளுடன் சென்னையில் 49–வது புத்தகக்காட்சி

ஜனவரி 8–ந் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் சென்னை, டிச.21- 1,000 அரங்குகளுடன் நடைபெற உள்ள சென்னை புத்தகக்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 8-–ந்தேதி தொடங்கி வைக்கிறார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) தலைவர் ஆர்.எஸ். சண்முகம், துணைத் தலைவர் நக்கீரன் கோபால், இணைச் செயலாளர் நந்தா, உதவி இணை செயலாளர் ஆடம் சாக்ரடீஸ் மற்றும் பொருளாளர் வெங்கடாசலம் ஆகியோர் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் நிருபர்களிடம் […]

Loading

செய்திகள்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், மனைவிக்கு 17 ஆண்டுகள் சிறை

இஸ்லாமாபாத், டிச. 20– ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கும் தலா 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தெஹ்ரிக் இ இன்சாப் என்ற பெயரில் கட்சி ஒன்றை நடத்தி வருகிறார். பதவியில் இருந்த போது, தமக்கு கிடைத்த பரிசு பொருட்களை அரசு கருவூலத்தில் சேர்க்காமல் மனைவியுடன் சேர்ந்து விற்பனை செய்து சொத்துகள் சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதவிர […]

Loading

செய்திகள்

அண்ணா சாலை பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் தீ விபத்து

சென்னை, டிச. 20– சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் இன்று பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை அண்ணா சாலையில் உள்ள தென் மண்டல பிஎஸ்என்எல் அலுவலகத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 8 மாடிகள் கொண்ட இந்த கட்டடத்தில் 2 முதல் 4-ம் தளத்தில் தீப்பிடித்த நிலையில் தீ கீழிருந்து மேலாக ஒவ்வொரு மாடிக்கும் பரவியது. காலை நேரம் என்பதால் அலுவலத்தினுள் ஒரு சில ஊழியர்கள் மட்டுமே […]

Loading

செய்திகள்

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்

கொச்சி, டிச. 20– மலையாள சினிமாவின் மூத்த நடிகர் ஸ்ரீனிவாசன் (69) காலமானார். உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் இன்று காலை காலமானார். இவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மலையாள திரையுலகின் மனதை கொள்ளை கொண்ட நடிகர், திரைக்கதை ஆசிரியர், டைரக்டர் என பல முகங்கள் கொண்டவர் ஸ்ரீனிவாசன் (69). காமெடி என்றாலே இவரது முகம் நினைவுக்கு வரும் அளவுக்கு, சாதாரண மனிதனின் வாழ்க்கையை எளிய […]

Loading

செய்திகள்

பொங்கலுக்குப் பிறகு தவெகவின் வியூகத்தைப் பார்த்து நாடே வியக்கும் செங்கோட்டையன் பேட்டி

கோவை, டிச. 20– பொங்கலுக்குப் பிறகு தவெகவின் வியூகத்தைப் பார்த்து நாடே வியக்கும் என தவெக மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கூறியுள்ளார். கே.ஏ. செங்கோட்டையன் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தவெக மீதான அனைத்து விமர்சனங்களுக்கும் பதிலளிக்கும் விதமாக தவெக சார்பில் தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டிருக்கிறார் .தவழும் குழந்தைகள்தான் பெரியவராவார்கள். பெரியவரான பிறகுதான் தன்னாட்சி நடத்துவார்கள். இதுதான் வழக்கமான ஒன்று. நாங்கள் களத்தில் இருக்கிறோமா இல்லையா என்பது தேர்தல் […]

Loading