செய்திகள்

சைபர் குற்றங்கள்: பொதுமக்களிடம் சென்னை காவல்துறை விழிப்புணர்வு பிரச்சாரம்

சென்னை, டிச. 22: சென்னை பெருநகர காவல் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் சார்பில் விருகம்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின் பேரில், மத்திய குற்றப்பிரிவு சைபர்கிரைம் துணை ஆணையாளர் டாக்டர் என்.ஸ்ரீநாதா மேற்பார்வையில் மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் காவல் நிலையம் சார்பில் விருகம்பாக்கம், ஆற்காடு சாலையில் உள்ள ஒய்.எஸ். என்கிளேவ் அடுக்குமாடி குடியிருப்பில் பொதுமக்களுக்கு சைபர் கிரைம் […]

Loading

செய்திகள்

வட இந்தியாவில் நீடிக்கும் கடும் பனி விமானங்கள், ரெயில்கள் சேவை பாதிப்பு

புதுடெல்லி, டிச. 22– வட இந்தியாவில் 2 நாட்களுக்கு கடும்பனி நிலவும். இதனால் விமானங்கள், ரெயில்கள் சேவை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் பனி மூட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் எதிரில் இருப்பது தெரியாத அளவுக்கு கடும் பனிமூட்டம் காணப்படுகிறது. இதனால் சாலை போக்குவரத்து மட்டுமல்லாது, விமான சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. விமானங்கள், ரெயில்கள் ரத்து செய்யப்படுவதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். காஷ்மீரில் ‘சில்லய் […]

Loading

செய்திகள்

நடுவானில் ஏர் இந்தியா விமானத்தின் என்ஜின் செயலிழப்பு டெல்லியில் அவசரமாக தரையிறக்கம்

புதுடில்லி, டிச. 22– ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் நடுவானில் என்ஜினில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக மீண்டும் டெல்லி விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. டெல்லி விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 6.10 மணிக்கு ஏர் இந்தியா விமானம், மும்பைக்கு புறப்பட்டு சென்றது. வானத்தில் பறந்த சில நிமிடங்களில் விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது. அதாவது, இரு என்ஜின்களில் ஒன்று திடீரென செயலிழந்து விட்டது. இதனால், விமானத்தை மீண்டும் […]

Loading

செய்திகள்

‘தி நகரில் நீலகண்ட மேத்தா தெருவுக்கு நடிகை மனோரமா பெயரைச் சூட்டுங்கள்’: ஸ்டாலினுக்கு நடிகர் சங்கம் கோரிக்கை

சென்னை, டிச. 22– சென்னை தி.நகரில் உள்ள நீலகண்ட மேத்தா தெருவுக்கு மறைந்த நகைச்சுவை நடிகை ‘ஆச்சி’ மனோரமாவின் பெயரை சூட்ட வேண்டும் என்று தென்னிந்திய நடிகர் சங்கம் முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ளது. இதேபோல, மனோரமாவின் பேத்திகள்– அபிராமி பூபதி (எம்எஸ்சி பட்டதாரி), மீனாட்சி பூபதி (எம்பில் பட்டதாரி) இருவரும். இதே கோரிக்கையை முன் வைத்து முதல்வருக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார்கள்.’ அதில், அவர்கள் கூறியிருப்பதாவது: ‘‘திருவாரூர் மாவட்டத்தில் பிறந்த ஆச்சி என்ற மனோரமா– ஐந்து […]

Loading

செய்திகள்

டி.ஜி. வைஷ்ணவா கல்லூரி சார்பில் போதைப் பொருள் ஒழிப்பு சைக்கிள் பேரணி

சென்னை, டிச. 22: டி.ஜி. வைஷ்ணவா கல்லூரி, போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் போக்குவரத்து விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை வெற்றிகரமாக நடத்தியது. இந்த நிகழ்ச்சி, கல்லூரியின் போதைப் பொருள் ஒழிப்புமன்றம் மற்றும் மக்கள் தொடர்புத்துறை இணைந்து, பெருநகரச் சென்னைக் காவல்துறையின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டது. போதைப் பொருட்களின் தீமைகள் மற்றும் போக்குவரத்து ஒழுக்கத்தின் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும். அண்ணா நகர் சட்டமன்ற உறுப்பினர் எம்.கே.மோகன் பேரணியைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். […]

Loading

செய்திகள்

கிறிஸ்துமஸ், பள்ளி விடுமுறை எதிரொலி ஆம்னி பஸ் கட்டணம் பலமடங்கு உயர்வு

சென்னை, டிச. 22: கிறிஸ்துமஸ், பள்ளி விடுமுறையை முன்னிட்டு, தமிழகத்தில் ஆம்னி பஸ்களின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. டிசம்பர் மாத இறுதியில் வரும் பள்ளி அரையாண்டு தொடர் விடுமுறை, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை காலத்தை முன்னிட்டு, சென்னையில் இருந்து மதுரை, கோவை, சேலம், திருச்சி, நெல்லை மற்றும் நாகர்கோவில் போன்ற முக்கிய நகரங்களுக்கு செல்லும் ஆம்னி பஸ் கட்டணம் வழக்கத்தை விட 2 முதல் 3 மடங்கு வரை அதிகரித்துள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிற […]

Loading

செய்திகள்

விழுப்புரம் பகுதியில் மண் பானைகள் தயாரிக்கும் பணி மும்முரம்

விழுப்புரம், டிச. 22: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விழுப்புரம் பகுதியில் மண் பானைகள் தயார் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை அடுத்த மாதம் (ஜனவரி) 15-ந்தேதி (வியாழக்கிழமை) வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை அன்று புதுப்பானையில் பொங்கலிடுவதை இன்றளவும் தமிழர்கள் மரபாக கொண்டுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு விழுப்புரம் அருகே சாலைஅகரம், ராகவன்பேட்டை, அய்யங்கோவில்பட்டு, அய்யூர்அகரம் உள்ளிட்ட இடங்களில் மண் பானைகள் தயாரிக்கும் பணியில் பல ஆண்டுகளாக மண்பாண்ட தொழிலாளர்கள் […]

Loading

செய்திகள்

பொன்னேரி அருகே 123 அரசு பள்ளி மாணவர்களுக்கு விலை உயர்ந்த சைக்கிள்கள்

பொன்னேரி டிச. 22: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள மடிமை கண்டிகை, வஞ்சிவாக்கம், ஆசானபுதூர், வீரங்கி வேடு உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் பள்ளி குழந்தைகள் தங்கள் பள்ளிகளுக்கு செல்ல தினசரி நெடுந்தூர பயணம் மேற்கொள்கின்றனர். சுமார் மூன்று அல்லது நான்கு கிலோமீட்டர் தூரம் நடந்து பள்ளிக்கு செல்வதால் காலதாமதம் ஆகிறது. மாலை நேரங்களின் பயத்துடன் குழந்தைகள் வீடு வந்து சேர்கின்றனர். மாணவர்களின் சுமையை குறைப்பதற்காக பள்ளி நேரத்தை துரிதமாக சென்றடைய இந்த மிதிவண்டி வழங்கும் திட்டம் […]

Loading

செய்திகள்

2 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ஆட்டோ அமைச்சர் காந்தி வழங்கினார்

ராணிப்பேட்டை, டிச. 22: தமிழ்நாடு ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டத்தின் சார்பில் திமிரி வட்டாரத்தைச் சேர்ந்த இரண்டு மகளிர் சுய உதவி குழுக்கள் சுயதொழில் செய்திட ரூ.7 லட்சம் மதிப்பீட்டிலான இரண்டு ஆட்டோ வாகனத்திற்கான சாவியை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார். தமிழ்நாடு ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டத்தின் சார்பில் பின்தங்கிய தொகுதிகளை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் திமிரி வட்டாரம் காவனூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தலா […]

Loading

செய்திகள்

உலகின் மிகப்பெரிய தங்கப் படிமம் சீனாவில் கண்டுபிடிப்பு

பீஜிங், டிச. 21– கிழக்கு சீன கடல் பகுதியில் ஆசியாவின் மிகப்பெரிய கடலுக்கடியிலான தங்க படிமத்தை சீனா கண்டுபிடித்துள்ளது. நம் அண்டை நாடான சீனா உலகிலேயே அதிகளவு தங்கத்தை உற்பத்தி செய்யும் நாடாக உள்ளது. அதே நேரத்தில் தங்க கையிருப்பில், ஆப்ரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு அடுத்த இடத்தில் உள்ளது. கடந்த, 2021ல் இருந்து தங்கப் படிமங்களை கண்டுபிடிப்பதில் சீனா தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி வடகிழக்கு மாகாணமான லியானிங்கில் 14.44 லட்சம் கிலோ தங்க இருப்பு கடந்தாண்டு […]

Loading