செய்திகள்

ரஷ்யா– உக்ரைன் அமைதி ஒப்பந்தம்

வாஷிங்டன், டிச. 29: ரஷ்யா–உக்ரைன் அமைதி ஒப்பந்தத்திற்கு எப்போது இல்லாத அளவுக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளது. 20 அம்ச அமைதி திட்டத்தில் 90 சதவீதம் ஜெலன்ஸ்கி சம்மதித்துள்ளார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும் இடையிலான 4 ஆண்டுகால மோதலை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. அமைதி ஒப்பந்தம் குறித்து உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, புளோரிடாவில் அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்துப் பேசினார். இதனையடுத்து இருவரும் கூட்டாக நிருபர்களை சந்தித்துப் பேசினர். […]

Loading

செய்திகள்

மெக்சிகோவில் ரெயில் தடம் புரண்ட விபத்தில் 13 பேர் பலி

மெக்சிகோ சிட்டி, டிச. 29: மெக்சிகோவில் ரெயில் தடம் புரண்டு ஏற்பட்ட விபத்தில், 13 பேர் உயிரிழந்தனர். 98 பேர் காயம் அடைந்தனர். மெக்சிகோ நாட்டின் ஒக்சாகா மற்றும் வெராகுரூஸ் மாகாணங்களுக்கு இடையே இன்டர்ஓஷெனிக் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் பசிபிக் பெருங்கடலுடன் மெக்சிகோ வளைகுடாவை இணைக்கிறது. இந்த ரெயில் நிசாண்டா நகரத்தின் அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் உடனடியாக மீட்பு பணியில் […]

Loading

செய்திகள்

போதைப்பொருட்களை கட்டுப்படுத்துவதில் தி.மு.க. அரசு படுதோல்வி: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

சென்னை, டிச. 29: தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு தான் தமிழ்நாட்டில் கஞ்சா கலாச்சாரம் உச்சத்தை அடைந்தது என அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். இதுகுறித்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;- சென்னையில் இருந்து திருத்தணி சென்ற வடமாநில இளைஞரை திருத்தணி தொடர்வண்டி நிலையத்தில் கஞ்சா போதையில் இருந்த 4 சிறுவர்கள் சரமாரியாக வெட்டி ரீல்ஸ் எடுத்து வெளியிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டின் சிறுவர்களையும், இளைஞர்களையும் சீரழித்து வரும் போதைப் பொருள்களை கட்டுப்படுத்த திமுக அரசு […]

Loading

செய்திகள்

சென்னை மெரினாவில் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்

சென்னை, டிச. 29: ‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னை மெரீனாவில் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர். தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 2009 மே 31ந்தேதி நியமிக்கப்பட்ட அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1ல் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டது. ஒருநாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைந்துள்ளது. இதனால் சுமார் 20 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். […]

Loading

செய்திகள்

பச்சைப்பொய் சொல்லி மக்களை ஏமாற்றும் ஸ்டாலின்: எடப்பாடி பழனிசாமி தாக்கு

திருப்போரூர், டிச. 29: பச்சைப்பொய் சொல்லி மக்களை ஏமாற்றி வருகிறார் ஸ்டாலின் என்று எடப்பாடி பழனிசாமி கடுமையாக தாக்கி பேசினார். அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப்பயணம் மேற்கொண்டு 5 கட்டங்களில் 175 தொகுதிகளுக்குச் சென்று மக்களை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்து எழுச்சிப்பயணம் மேற்கொண்டார். 6வது கட்டமாக நேற்று திருப்போரூர் தொகுதிக்குட்பட்ட கேளம்பாக்கம், ராஜீவ்காந்தி ஐடி எக்ஸ்பிரஸ் சாலையில் உள்ள இஜ்திமா திடலில் ஆயிரக்கணக்கான மக்கள் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

அமெரிக்காவில் நடுவானில் 2 ஹெலிகாப்டர்கள் மோதல்: விமானி உயிரிழப்பு

வாஷிங்டன், டிச. 29: அமெரிக்காவில் நடுவானில் 2 ஹெலிகாப்டர்கள் மோதிக் கொண்ட விபத்தில் விமானி உயிரிழந்தார். அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள ஹேமண்டன் விமான நிலையத்திற்கு அருகில் 2 ஹெலிகாப்டர்கள் எதிர்பாராத விதமாக நடுவானில் மோதிக்கொண்டன. விபத்தில் சிக்கிய இந்த ஹெலிகாப்டர்கள் தரையில் விழுந்து தீப்பற்றி எரியத் தொடங்கின. இந்த சம்பவத்தில் ஒரு ஹெலிகாப்டர் விமானி உயிரிழந்த நிலையில், மற்றொருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து […]

Loading

செய்திகள்

ஆந்திராவில் ஓடும் ரெயிலில் தீ: ஒருவர் பலி; பலர் படுகாயம்

ஐதராபாத், டிச. 29: ஆந்திராவில் ஓடும் ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலியானார். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலம் டாடாநகரில் இருந்து எர்ணாகுளத்துக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த ரெயில் ஆந்திரா மாநிலம் அனகப்பள்ளி அருகே சென்றுகொண்டிருந்தபோது அதிகாலை 1.11 மணியளவில் ரெயிலின் பி1, எம்1 ஆகிய இரு ஏ.சி. பெட்டிகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள், உடனடியாக அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர். இதனைத் […]

Loading

செய்திகள்

அலங்கோல தி.மு.க. ஆட்சிக்கு மக்கள் முடிவு கட்டுவார்கள்: எடப்பாடி பழனிசாமி பேச்சு

சோழிங்கநல்லூர், டிச.29– அலங்கோல ஆட்சி, ஊழல் ஆட்சியை நடத்தி மக்களை ஏமாற்றி வருகிறார் ஸ்டாலின் என எடப்பாடி பழனிசாமி காட்டமாக கூறினார். மக்கள் நலத்திட்டங்களை செய்யாமல் ஊதாரித்தனமாக செலவு செய்கிறார் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார். எல்லா துறையிலும் ஊழல், இந்த ஆட்சிக்கு சாவு மணி அடிக்கப்பட்டு விட்டது. தி.மு.க. ஆட்சி மீது மக்கள் கடும் கோபம், வெறுப்பில் இருக்கிறார்கள் என்றும் எடப்பாடி கூறினார். ‘‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப் பயணத்தின் 6வது கட்டப் பிரசாரத்தில் நேற்று […]

Loading

செய்திகள்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்; டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் ஆஜர்

புதுடெல்லி, டிச. 29: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் வழக்கில் விசாரணைக்காக டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார், மதியழகன் உள்ளிட்டோர் ஆஜர் ஆகினர். கரூர் வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பர் 27ல் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர். இச்சம்பவம் தொடர்பாக கரூரில் முகாமிட்டு சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். தவெக நிர்வாகிகள், கரூர் ஆட்சியர், காவல் துறை உயரதிகாரிகள், பலியானவர்களின் குடும்பத்தினா், […]

Loading

செய்திகள்

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விரைவாக விடுவிக்க நடவடிக்கை: மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்

ராமநாதபுரம், டிச. 29: நடுக்கடலில் மீன்பிடித்தபோது தமிழகத்தைச் சேர்ந்த 3 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு துறைமுக பகுதியில் இருந்து நேற்று முன்தினம் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 1,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அதன்படி மண்டபத்தை சேர்ந்த விசைப்படகு ஒன்றில் ஆமோஸ்டின் (வயது 25), ஜோன்தாஸ் (38), பரலோக செபஸ்தியான் (26) ஆகிய 3 மீனவர்களும் மீன்பிடிக்க சென்றனர். இந்த மீனவர்கள் நடுக்கடல் […]

Loading