செய்திகள்

குன்னூரில் கொட்டித் தீர்த்த கனமழை: 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு

மேட்டுப்பாளையம், ஜன. 2– நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில வாரங்களாக உறைபனி காணப்பட்டது. இதனால் கடுமையான குளிரும் நிலவி வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இரவு 11 மணிக்கு பிறகு கனமழை கொட்டி தீர்த்தது. இரவு தொடங்கிய மழையானது இன்று காலை வரை விடிய, விடிய வெளுத்து வாங்கியது. இந்த […]

Loading

செய்திகள்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆங்கிலப் புத்தாண்டு விழா கோலாகலம்

மேல்மருவத்தூர், ஜன. 2– மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆங்கிலப் புத்தாண்டு விழா மிக விமர்சையாக நடைபெற்றது. இதையொட்டி 31–ந் தேதி அதிகாலை 3 மணி அளவில் மங்கல இசையுடன் தொடங்கிய நிகழ்ச்சியில் 4 மணி அளவில் ஆதிபராசக்தி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மாலை 4.30 மணி அளவில் உலக நன்மைக்காகவும், இயற்கை வளம் பெறவும் கலச, விளக்கு, வேள்வி பூஜையை துணைத்தலைவர் ஸ்ரீ தேவி ரமேஷ், அறங்காவலர் உமாதேவி ஆகியோர் கலந்து கொண்டு பிரதான […]

Loading

செய்திகள்

ஆவடி மாநகர புதிய போலீஸ் கமிஷனராக பிரேம் ஆனந்த் சின்ஹா பொறுப்பேற்றார்.

ஆவடி, ஜன.2-– ஆவடி மாநகர புதிய போலீஸ் கமிஷனராகபிரேம் ஆனந்த் சின்ஹா பொறுப்பேற்றார். ஆவடி மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த சங்கர், தமிழ்நாடு சிறைத்துறை மற்றும் சீர்திருத்த பணிகள் துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து தென் மண்டல ஐ.ஜி.யாக பணியாற்றி வந்த பிரேம் ஆனந்த் சின்ஹா, காவல்துறை கூடுதல் இயக்குனராக பதவி உயர்வு பெற்று, ஆவடி போலீஸ் கமிஷனரகத்தின் 4-வது போலீஸ் கமிஷனராக பொறுப் பேற்றுக்கொண்டார். அவருக்கு கூடுதல் போலீஸ் கமிஷனர் பவானீஸ்வரி மற்றும் போலீஸ் உயர் […]

Loading

செய்திகள்

ஆங்கில புத்தாண்டு: வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு 13 ஆயிரத்து 200 பேர் வருகை

சென்னை, ஜன.2- ஆங்கில புத்தாண்டு தினத்தன்று வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு 13 ஆயிரத்து 200 பேர் வந்தனர் என்று அதிகாரி தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஏராளமான விலங்குகள், பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. நேற்று ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வந்தனர். இதனால் பூங்காவில் எங்கு பார்த்தாலும் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. […]

Loading

செய்திகள்

சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம்: பல்லாயிரகணக்கான பக்தர்கள் தரிசனம்

சிதம்பரம், ஜன. 2– சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் டிசம்பர் 25-ம் தேதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் முக்கிய திருவிழாவான தேர் திருவிழா இன்று நடைபெற்றது. நாளை மார்கழி ஆருத்ரா தரிசனமும் நடைபெறுகிறது. உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் ஆனித் திருமஞ்சன தரிசனமும் ஆகிய இரு திருவிழாக்கள் தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த […]

Loading

செய்திகள்

2026 ஆங்கிலப் புத்தாண்டு பிறந்தது; தேவாலயங்கள், கோவில்களில் மக்கள் சிறப்பு வழிபாடு

ஒரு பக்கம் கடும் குளிர்; இன்னொரு பக்கம் மழையை பொருட்படுத்தாமல் திரண்டனர் சென்னை, ஜன. 1– இன்று (ஜனவரி 1) ஆங்கிலப் புத்தாண்டு 2026-ம் ஆண்டு பிறந்தது. இதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் மக்கள் குடும்பத்தோடு சிறப்பு வழிபாடு செய்தனர். கோவில்களில் இன்று அதிகாலை சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்கள் அதிகாலை முதல் சாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சென்னை தியாகராய நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோவிலில் புத்தாண்டு சிறப்பு […]

Loading

செய்திகள்

மும்பையில் ரூ.3.89 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்

சென்னை, ஜன. 1– பஹ்ரைனிலிருந்து இருந்து மும்பைக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.3.89 கோடி மதிப்புள்ள தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மும்பை விமான நிலையத்தில் தங்கம், போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக உளவுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. பஹ்ரைனிலிருந்து வந்த விமானத்தில் இருந்து இறங்கிய பயணியரின் உடைமைகளை, விமான நிலைய சுங்கத் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பயணி ஒருவரிடம் தங்கத் தூள் நிரப்பப்பட்ட 3.05 கிலோ எடையுள்ள 12 கேப்சூல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவை 3.05 கிலோ […]

Loading

செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு போனஸ்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

ரூ.184 கோடி ஒதுக்கீடு சென்னை, ஜன.1– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு மிகை ஊதியம்; ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிட 183 கோடியே 86 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியத் திருநாட்டிற்கே வழிகாட்டக்கூடிய வகையில், பள்ளிக்கல்வி தொடங்கி உயர்கல்வி வரை, வேளாண் வளர்ச்சி முதல் தொழில்துறை வளர்ச்சி வரை, பள்ளி சிறார்களுக்கு […]

Loading

செய்திகள்

கலைக்குழு டி.எம்.ஜானி மரணம்: எடப்பாடி இரங்கல்

சென்னை, ஜன.1– அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:– தென் சென்னை தெற்கு (மேற்கு) மாவட்டத்தைச் சேர்ந்த, ‘டி.எம். ஜானி கலைக்குழு’-வை நடத்தி வந்த டி.எம். ஜானி உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். கழகத்தின் மீதும், கழகத் தலைமையின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டிருந்த ஆரம்பகால கழக உடன்பிறப்பு டி.எம். ஜானி தனது கலைக்குழுவின் மூலம், கழகத்தின் கொள்கைகளையும், முந்தைய கழக அரசுகளின் சாதனைகளையும், திமுக […]

Loading

செய்திகள்

சென்னை, சேலம் உள்பட 4 மாவட்டங்களில் ரூ.49 கோடியில் செயற்கை இழை ஓடுதள பாதை: உதயநிதி ஸ்டாலின் அடிக்கல்

சென்னை, ஜன. 1– துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 48.76 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை, செங்கல்பட்டு, சேலம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் செயற்கை இழை ஓடுதளப் பாதை மறுசீரமைக்கும் பணி, சர்வதேச தரத்திலான டிராப் மற்றும் ஸ்கீட் துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி அகாடமி, புதிய செயற்கை இழை ஓடுதள பாதை உள்ளிட்ட விளையாட்டு உட்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். குறிஞ்சி முகாம் அலுவலத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் […]

Loading