செய்திகள்

தேசிய மருத்துவர்கள் தினம்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை, ஜூலை 1– இன்று தேசிய மருத்துவர்கள் தினம். இதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:– எளிய பின்புலங்களில் இருந்து வந்து, தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பை வலிமைப்படுத்தி, மக்களின் நலன் காக்கும் தலைசிறந்த மருத்துவர்கள் அனைவருக்கும் தேசிய மருத்துவர்கள் தின வாழ்த்துகள்! தன்னலமற்ற சேவைக்குச் சொந்தக்காரர்களான நமது மருத்துவர்கள் அனைவருமே போற்றுதலுக்கு உரியவர்கள்! அவர்களது சேவைக்கு நமது நன்றியின் அடையாளமாகத் தலைசிறந்த 50 மருத்துவர்களுக்கு இன்று விருதுகள் வழங்கி மகிழ்கிறோம். இவ்வாறு […]

Loading

செய்திகள்

பெரிய தொழில், வணிக நிறுவனங்களுக்கு இன்று முதல் மின் கட்டணம் உயர்வு

சென்னை, ஜூலை.1- தமிழ்நாட்டில் உள்ள பெரிய தொழில், வணிக நிறுவனங்களுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்றும், வீடு, சிறு வணிகர்களுக்கு எவ்வித கட்டண உயர்வும் இல்லை என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- மின்சார வாரியங்களின் நிதி நிலைமை சீராக இருப்பதற்காக அந்தந்த மாநிலங்களின் ஒழுங்குமுறை ஆணையம் அவ்வப்பொழுது மின்கட்டணத்தில் மாற்றம் செய்து வருகிறது. தமிழ்நாட்டை பொறுத்த வரையில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், […]

Loading

ரவீந்திர சவான்
செய்திகள்

மகாராஷ்டிரா புதிய பாஜக தலைவராக ரவீந்திர சவான் பொறுப்பேற்பு

மும்பை, ஜூலை 1– மகாராஷ்டிரா பாஜக புதிய தலைவராக ரவீந்திர சவான் இன்று பொறுப்பேற்கிறார். மகாராஷ்டிரா மாநில பாரதீய ஜனதா கட்சியின் புதிய தலைவராக மூத்த பாஜக தலைவராக ரவீந்திர சவான், இன்று பொறுப்பேற்கிறார். மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் முன்னிலையில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது. ரவீந்திர சவான் பொறுப்பேற்பு தற்போதைய தலைவராக உள்ள சந்திரசேகர் பவன்குலேவிடமிருந்து ரவீந்திர சவான் பொறுப்பேற்றுக்கொள்வார். புதிய மாநிலத் தலைவர் தேர்வுக்காக மத்திய பாஜக […]

Loading

செய்திகள்

சாமானியருக்கு அநீதி இழைக்கும் அறமற்ற துறையாக தமிழக காவல் துறை: விஜய் கண்டனம்

சென்னை, ஜூலை 1– சாமானியருக்கு அநீதி இழைக்கும் அறமற்ற துறையாக தமிழக காவல் துறை செயல்படுவதாக தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் கோவில் காவலாளி அஜித்குமார் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு விசாரணையில் தாக்கப்பட்டு மரணமடைந்த விவகாரத்தில் போலீசார் 5 பேர் கைது செய்யப்பட்டு, 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இதுகுறித்து விஜய் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். […]

Loading

தமிழக மீனவர்கள் கைது
செய்திகள்

தொடரும் அட்டூழியம்: ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

ராமேஸ்வரம், ஜூலை 1– ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறை முகத்தில் இருந்து நேற்று காலை 500 -க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். நள்ளிரவில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துகொண்டிருந்தபோது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் தடுத்து நிறுத்தி விரட்டியடித்தனர். இதனை தொடர்ந்து ஒரு படகையும் அதில் இருந்த 7 மீனவர்களையும் சிறைபிடித்தனர். சிறைபிடித்த மீனவர்களை நடுக்கல் […]

Loading

செய்திகள் வாழ்வியல்

அத்திப்பழம் சாப்பிட்டால் உடல் ரத்தக் கொதிப்பு குறையும்

நல்வாழ்வுச் சிந்தனைகள் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் அத்திப்பழம் சாப்பிட்டால், உடல் எடை குறையும். அத்திப்பழத்தை அதிகம் சாப்பிட்டால் உடல் எடை கூடும். எனவே, ஒரு நாளைக்கு நான்கைந்து வேளைகளுக்கு மேல் சாப்பிடாமல் இருப்பது நல்லது. உடலில் பொட்டாசியம் குறைவாகவும் சோடியம் அதிகமாகவும் இருந்தால் பிபி அதிகரிக்கும். அத்திப்பழத்தில் பொட்டாசியம் அதிகமாகவும் சோடியம் குறைவாகவும் உள்ளது. எனவே இவற்றை சாப்பிட்டால் பிபி குறையும்.நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் அத்திப்பழம் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் அவற்றில் நார்ச்சத்து அதிகம். அத்திப்பழத்தில் […]

Loading